அவோகேடோ எனப்படும் வெண்ணெய் பழத்தில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. இந்த பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, சருமத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
அவோகேடோ ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ்பேக்கில் அவோகோடோவுடன் உப்பு, சர்க்கரை மற்றும் பால் சேர்த்து கலந்து, சிறிதுதேனையும் ஊற்றி, முகத்திற்கு தடவினால், முகம் நன்கு ஈரப்பசையுடன் பொலிவோடு மின்னும்.
அவோகேடோ ஸ்டோன் மசாஜ்
அவோகேடோவை மசித்து, முகத்தில் பூசி பின் சிறு கற்களை கொண்டு, ஸ்கரப் செய்யும் போது முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறி, முகம் பொலிவு பெறும்.
அவோகேடோ தேங்காய் க்ரீம்
இந்த க்ரீம்மை குளிர்காலத்தில் சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் ஏற்படும் வறட்சியை நீக்கி, சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை தடுக்கலாம்.
மேலும் இதில் தேங்காய் எண்ணெய் சேர்த்திருப்பதால், பழுப்பு நிற சருமம் மற்றும் சரும பிரச்சனைகளான அரிப்பு, தோல் செதில் செதிலாக வருவது போன்றவை நீங்கும்.
அவோகேடோ எண்ணெய்
பொதுவாக மசாஜ் செய்வதால், நிறைய நன்மைகள் உள்ளன. அதிலும் அவோகேடோ எண்ணெயை வைத்து முகத்திற்கு மசாஜ் செய்தால், சருமம் நன்கு ஈரப்பசையுடன் இருக்கும். மேலும் இந்த எண்ணெயை உதட்டில் தடவினால், உதடு மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் மாறும்.
அவோகேடோ ஜூஸ்
இந்த வெண்ணெய் பழத்தின் ஜூஸ் சருமத்திற்கு நிறைய நன்மைகளை தரும். எனவே தினமும் ஒரு டம்ளர் அவோகேடோ ஜூஸ் குடித்தால், சருமம் அழகாக, சுருக்கமின்றி காணப்படும்.