/indian-express-tamil/media/media_files/2025/12/11/sauthi-aiport-2025-12-11-06-23-29.jpg)
ஜித்தா விமான நிலையம் மழைநீர் தேங்கி குளம்போல காட்சி அளித்தது
சவுதி அரேபியாவில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில், புதன்கிழமை வெப்பச் சலனம் ஏற்பட்டு திடீரென சிறிது நேரமே பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
மேலும், மழையால், ஜித்தா விமான நிலையம் மழைநீர் தேங்கி குளம்போல காட்சி அளித்தது, இருப்பினும், விமானங்கள் இடையூறு இல்லாமல் இயக்கப்பட்டன.
சவுதி அரேபியாவில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்ததினால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/12/11/airport-2-2025-12-11-06-27-41.jpeg)
இந்த நிலையில் நேற்றிலிருந்து மழை பொழிவு ஏற்பட்டதால் சவுதி அரேபியாவில் மக்கா, ஜித்தா, மதினா, போன்ற உள்ளிட்ட இடங்களில் கடுமையான மழை பெய்தது, இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
திடீரென பெய்த மழையால் விமான நிலைய முழுவதும் நீரில் மூழ்கியது. மழை நீரால் விமான நிலையம் குளம் போல காட்சியளித்தது. எவ்வளவு மழை நீர் பெய்தாலும் விமான சேவை தொடர்ந்து நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/12/11/jeddah-airport-4-2025-12-11-06-29-09.jpeg)
வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்து வருவதால் புனித பயணம் மேற்கொண்ட பயணிகளுக்கும் அங்கு வசிக்கக்கூடிய பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை
source https://tamil.indianexpress.com/international/sudden-rain-in-saudi-arabia-jeddah-airport-turns-into-a-pond-10899948





