ஞாயிறு, 3 நவம்பர், 2013

வஸிய்யத்

இன்னும் சொல்லப் போனால் அல்லாஹ்
வஸிய்யத்தைப் பற்றி திருக்குர்ஆனில் கூறிக் காட்டுகிறான்.

"இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர்
ஆணுக்கு உண்டு'' என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில்
அல்லாஹ் வலியுறுத்துகிறான். அனைவரும்
பெண்களாகவும் (இரண்டு அல்லது)
இரண்டுக்கு மேற்பட்டும் இருந்தால் (பெற்றோர்) விட்டுச்
சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்கு உண்டு.
ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால்
அவளுக்கு (மொத்தச் சொத்தில்)
பாதி உள்ளது. இறந்தவருக்குச் சந்ததி இருந்தால் அவர்
விட்டுச் சென்றதில் பெற்றோர்
ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு.
இறந்தவருக்குச் சந்ததி இல்லாவிட்டால் அவர் விட்டுச்
சென்றதற்குப் பெற்றோர் இருவரும்
வாரிசாவார்கள். அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பாகம்
உண்டு. இறந்தவருக்குச் சகோதரர்கள் இருந்தால்
அவரது தாய்க்கு ஆறில் ஒரு பாகம் உண்டு. (இவை யாவும்)
அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும்
நிறைவேற்றிய பின்னரே. உங்கள் பெற்றோர் மற்றும்
பிள்ளைகளில் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர் யார்
என்பதை அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை.
அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும்
இருக்கிறான்.
உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லா விட்டால் அவர்கள்
விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு.
அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச்
சென்றதில் கால் பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள்
செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய
பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்). உங்களுக்குக்
குழந்தை இல்லா விட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில்
கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக்
குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில்
ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண
சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம்
பிரிக்கப்பட வேண்டும்). இறந்த ஆணோ,
பெண்ணோ பிள்ளை இல்லாதவராக
இருந்து அவர்களுக்கு ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும்
இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில்
ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால்
மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள்.
செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப்
பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.) (இவை அனைத்தும்
யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட
வேண்டும்.) இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ்
அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.

(அல்குர்ஆன் 4.11.12)

ஆண்களுக்கு இவ்வளவு,
பெண்களுக்கு இவ்வளவு என்று கூறிக்காட்டும்
போது இது எல்லாம் அவர் செய்து விட்டுச் சென்ற
வஸிய்யத்துக்குப் பின்னாலும் அவருடைய கடனை அடைத்ததற்குப்
பின்னாலும் தான். அதற்கு முன்னால்
அதை வாரிசு எடுக்க முடியாது. ஆனால்
இதை இன்றைக்கு யாரும் செய்வதில்லை.

பத்து லட்ச ரூபாய் கடன் வாங்கி விட்டு, பத்து லட்ச ரூபாய்
மதிப்பிலுள்ள சொத்தை விட்டுச் சென்றால்
அதனை அப்படியே கடன் வாங்கியவனிடம்
கொடுத்து விடவேண்டும். அது போக அதிகமாக
இருந்தாலும் நம்முடைய கையிலிருந்து அதனைக்
கொடுத்து விட வேண்டும். ஆனால் இதனை நாம்
எத்தனை நபர்கள் செய்கிறோம்?