சனி, 9 நவம்பர், 2013

நோவாவும் அவரது

தடுமாறும் ஜோடிகள் நோவாவும் அவரது குடும்பத்தினரும் பிரளயத்திலிருந்து காப்பாற்றப்பட்ட சம்பவத்தை பைபிலின் ஆதியாகமம் கூறுகிறது. அந்த ஒரு ஆகமத்திலேயே முரண்பாடு இருப்பதைக் காணமுடிகின்றது.

மாம்சமான சகலவித ஜீவ ஜந்துக்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உன்னுடன் உயிரோடு காக்கப்படுவதற்கு பேழைக்குள் சேர்த்துக் கொள்! ஜாதி ஜாதியான பறவைகளிலும் ஜாதி ஜாதியான மிருகங்களிலும் பூமியிலுள்ள சகல ஜாதி ஜாதியான ஊரும் பிராணிகளிலும் வகை ஒன்றுக்கு வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு காக்கப்படுவதற்கு உன்னிடம் வரக்கடவது... (ஆதியாகமம் 6:19,20)

பூமியின் மீதெங்குமுள்ள வர்க்கங்களை உயிரோடு காக்கும் பொருட்டு நீ சுத்தமான சகல மிருகங்களிலும் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடும் ஆகயத்துப் பறவைகளிலும் சேவலும் பேடுமாக எவ்வேழு ஜோடும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள் (ஆதியாகமம் 7:2,3)

நோவா தன்னுடைய கப்பலில் ஏற்றிச் சென்றது ஒவ்வொரு ஜோடியா? ஏழு ஏழு ஜோடியா? இரண்டில் எது உண்மை?

http://onlinepj.com/books/ithu_than_baibil/