வியாழன், 7 நவம்பர், 2013

Quran & Hadis

நபி(ஸல்) அவர்களிடம் ஓர் ஆண்
குழந்தை கொண்டு வந்து கொடுக்கப்பட்டது.
அக்குழந்தை, அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்துவிட்டது.
அப்போது (கொஞ்சம்) தண்ணீர் கொண்டு வரச்
செய்து அதைச் சிறுநீர் பட்ட இடத்தில் ஊற்றினார்கள்" என
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி 222

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

திண்ணமாக, அல்லாஹ் (தாயின்) கருவறையில் வானவர் ஒருவரைப் பொறுப் பாளராக நியமிக்கின்றான். அவர், இறைவா! (இது ஒரு துளி) விந்து. இறைவா! இது, பற்றித் தொங்கும் கரு. இறைவா! இது (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைத் துண்டு என்று கூறிக் கொண்டிருப்பார்.

அதைப் படைத்(து உயிர் தந்)திட அல்லாஹ் நாடும் போது, இறைவா! இது ஆணா அல்லது பெண்ணா? நற்பாக்கியம் பெற்றதா? துர்பாக்கியம் உடையதா? (இதன்) வாழ்வாதாரம் எவ்வளவு? (இதன்) ஆயுள் எவ்வளவு? என்று கேட்பார். (அல்லாஹ்வால் இவையனைத்தும் நிர்ணயிக்கப்பட்டு) அதன் தாயின் வயிற்றில் அது இருக்கும் போது எழுதப்படும்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

புகாரி - 3333

நபி (ஸல்) அவர்கள் தாம் கனவில் கண்ட கல்லால் தலை
நசுக்கப்படும் மனிதரைப் பற்றிக் குறிப்பிடுகையில், "அவர் குர்ஆனைக்
கற்று அ(தன்படி செயல்படுவ)தை விட்டுவிட்டவர்;
கடமையான தொழுகையைத் தொழாமல்
உறங்கியவர்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்துப் (ரலி)

நூல் : புகாரி 1143

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:வானங்களும் பூமியும்
படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி
விட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும்.
அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்)
மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக் கூடியவை. அவை -
துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும்.
(மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும் ஷஅபான்
மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும்.

அறிவிப்பவர் : அபூபக்ரா (ரலி), நூல்: புகாரி (3197)

நல்ல கனவு அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருவதாகும். எனவே ஒருவர் தமக்கு விருப்பமான கனவைக் கண்டால் தமக்கு மிகவும் விருப்பமானவரைத் தவிர யாருக்கும் அதைத் தெரிவிக்கக் கூடாது'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி)

நூல்: புகாரி 7044

கடலிலிருந்து பசுமையான இறைச்சியை நீங்கள் உண்பதற்காகவும், அணிந்து கொள்ளும் நகையை நீங்கள் அதிலிருந்து வெளிப்படுத்திடவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்திடவும் கடலை உங்களுக்கு அவனே பயன்படச் செய்தான். கப்பல்கள் அதைக் கிழித்துச் செல்வதை நீர் பார்க்கிறீர்!

திருக்குர்ஆன் 16:14





Related Posts:

  • ????? CV/Resume/Bio data Read More
  • Heart Attack இருதய தமனி நோய்  டாக்டர் ஜி. ஜான்சன்                 &… Read More
  • மருத்துவக் கட்டுரை இளம்பிள்ளை வாதம்                        &… Read More
  • Quran & Hadis நபிகளாரின் குணங்கள்: (முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவர… Read More
  • Hadis அல்லாஹ்வைப் பற்றி எச்சரிக்கை செய்தல் நபி (ஸல்) அவர்கள் தம்முடைய தோழர்களுக்கு அல்லாஹ்வின் அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள். எந்தக் காரியத்தைச் … Read More