அல்லாஹ்வின் தூதர் அவர்களே!
தஜ்ஜால் பூமியில்
எவ்வளவு காலம்
உயிர் வாழ்வான்?''
என்று நாங்கள்
கேட்டோம். அதற்கு
அவர்கள், "அவன் பூமியில் நாற்பது நாட்கள்
தங்குவான்.
அன்று ஒரு
நாள் ஒரு
வருடம் போலவும்,
இன்னொரு நாள்
ஒரு மாதம்
போலவும், மற்றொரு
நாள் ஒரு
வாரம் போலவும்,
ஏனைய நாட்கள்
அனைத்தும் உங்களது
இந்த நாட்களைப்
போலவும் இருக்கும்''
என்று நபி
(ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
"அல்லாஹ்வின் தூதரே!
ஒரு வருடம்
போன்று இருக்கும்
ஒரு நாளில்
ஒரு நாளுக்குரிய
தொழுகை எங்களுக்குப்
போதுமானதா?'' என்று நாங்கள் கேட்டோம். "அவ்வாறல்ல!
அதன் நேரத்தை
நீங்கள் கணக்கிட்டுக்
கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். (நீண்ட ஹதீஸின்
ஒரு பகுதி)
அறிவிப்பவர் : நவாஸ்
பின் ஸம்ஆன்
(ரலி)
நூல்கள் : முஸ்லிம்
5228, திர்மிதி 2166
கல், மண், மரம்,
மனிதன் என
இறைவனல்லாத இறைவனுடைய
படைப்புகளைக் கடவுள்
என்று நம்பி,
அவற்றுக்கு மனிதனைப்
போன்று பலவீனங்கள்
இருப்பதாகவும் நம்பினால் அந்த
நம்பிக்கை மனிதனிடம்
எந்த மாற்றத்தையும்
ஏற்படுத்தாது.
எவன் உண்மையான
இறைவனோ அவனை
இறைவன் என்று
ஏற்க
வேண்டும். அவனுக்குப்
பலவீனங்கள் இல்லை என்றும்,
அனைத்திற்கும் அதிகாரம்
படைத்தவன் என்றும்
நம்ப வேண்டும்.
இறைவன் என்றால்
யார்? அவன்
எப்படிபட்டவன்?
அவனுடைய அதிகாரங்கள்
எவை? அவனுடைய
ஆற்றல்
எப்படிப்பட்டது என்பதைச்
சரியாகப் புரிந்தால்
தான்
அது சரியான
இறைநம்பிக்கையாகும். இந்த
நம்பிக்கையே மனிதனிடம்
நல்ல மாற்றத்தை
ஏற்படுத்தும்
சக்தி கொண்டது.
இஸ்லாம் இப்படிப்பட்ட
தூய இறைநம்பிக்கையை
மனிதனுக்குப்
போதிக்கின்றது. இஸ்லாம்
கூறும் கடவுள்
கொள்கையைப்
போன்று உலகில்
வேறு எந்த
மதமும் கூறவில்லை.
அந்த வகையில்
இஸ்லாம் தனித்து
நிற்கின்றது.
திருமணம் ஒரு நபிவழியாகும்.
ஆனால் இன்று
அந்தத்
திருமணம் இறைவனுக்கு
மாறுசெய்வதில் தான்
துவங்குகின்றது. அதுதான்
வரதட்சணை. இதனைத்
தொடர்ந்து ஆடம்பரமான
அழைப்பிதழ், பணத்தின்
மதிப்பைக் காட்டுகின்ற
விருந்து, பகட்டான
மண்டபம், பந்தல்,
வண்ண விளக்குகள்
அலங்காரம், இன்னிசைக் கச்சேரி,
வாணவேடிக்கை, ஊர்வலம்
என்று பாவகரமான
செயல்களின் பட்டியல்
நீண்டு கொண்டே
செல்கின்றது.
இத்துடன் மார்க்கம்
பெண்களுக்கு விதித்திருக்கின்ற
புர்கா போன்ற
வரைமுறைகளை, வரம்புகளைத்
தாண்டி சந்திப்புகளும்
சங்கமங்களும் திருமண வீட்டில்
நடைபெறுகின்றன.
அல்லாஹ்வையும் மறுமை நாளையும்
நம்பாத ஒருவன்
நீதமாக நடக்க
நினைக்கின்றான். ஆயிரம் ரூபாய் லஞ்சம்
கொடுத்தால் கட்டுப்படாத
இவன், சில
லட்சங்களுக்கு அடிபணிந்து
நீதம் தவறிவிடுவான்.
இவனுடைய
கொள்கை உறுதியின்
விலை சில
லட்சங்கள் தான்.
இன்னும் உறுதி
உள்ளவனாக இருந்தால்
அதற்குத்
தகுந்தாற்போல் விலை
கொடுத்தால் சறுகிவிடுவான்.
அல்லது அவனுடைய
உயிருக்கோ அவனுடைய
குடும்பத்தார்களுக்கோ பாதிப்பு என்றால் அப்போது நீதம்
தவறிவிடுவான். இப்படி
அல்லாஹ்வையும் மறுமை நாளையும்
நம்பாதவர்களை இந்த
உலகத்தில் எப்படியும்
வழிகெடுத்து விடலாம்.
நல்லவனாக வாழும் போது
கிடைக்கின்ற நன்மைகளையும்
தீயவனாக வாழும்
அதனால் உலகில்
ஏற்படுகின்ற
விளைவுகளையும் கண்கூடாகப்
பார்க்கின்றோம். நல்ல பாதையில்
செல்பவனின் உடலும்
உள்ளமும் ஆரோக்கியமாக
உள்ளது. தீயவழியில்
செல்பவனின் உடல், உள்ளம்,
குடும்பம், பொருளாதாரம்
என அனைத்தும்
கெட்டு உலகில்
சீரழிகிறான். எனவே தான் உலகில்
நல்லவனாக வாழ
வேண்டும் என்ற
அடிப்படையை அனைவரும்
கூறுகின்றனர்.
ஆனால் இதற்கான
சரியான வழியை
அநேக மக்கள்
அறியாமல் இருக்கின்ற
காரணத்தால் இந்த
ஆசை பலருக்கு
நிறைவேறுவதில்லை. இஸ்லாம் மட்டுமே இதற்குச்
சரியான தீர்வைக்
கொடுக்கின்றது. இஸ்லாம்
அல்லாத வேறு
எந்த மதத்திலும்
இதற்கான தீர்வைக்
காண
முடியாது.
எந்த நம்பிக்கை
மனிதனிடத்தில் நல்ல
மாற்றங்களை ஏற்படுத்துமோ
அந்த நம்பிக்கையை
உண்மையாகவும்
ஆழமாகவும் ஏற்படுத்தும்
வாழ்க்கை நெறிதான்
இஸ்லாம்.
பொதுவாக, பெரும்பாலான
மதங்கள்
இறைநம்பிக்கையைப் போதிக்கின்றன. அது போல் மரணத்திற்குப்
பிறகு சொர்க்கம்
- நரகம் இருப்பதையும்
கூறுகின்றன.
இந்த இரண்டும்
தான் மனிதன்
சீர்பெறுவதற்கு அடிப்படையான
விஷயங்கள்.
இந்த இரண்டு
விஷயங்களையும் இஸ்லாம் மனித
குலத்திற்கு எப்படிப்
போதிக்கின்றதோ அதுபோல் வேறு எந்த மதமும்
போதிக்கவில்லை.
அடுத்து, இந்த உலகத்தில்
இறைவன் மனித
குலத்தை எதற்காகப்
படைத்தான்? மனிதன் உலகத்தில்
படைக்கப்பட்டதற்கான நோக்கம் என்ன? மரணத்திற்குப்
பிறகு என்ன
நிலை? ஆகிய
கேள்விகளுக்கு சரியான
பதிலை இஸ்லாம்
மட்டுமே கூறுகின்றது.
மனிதன் எவ்வாறு
வாழ வேண்டும்
என்ற
வழிகாட்டலை இறைவன்
மனித குலத்திற்குக்
கொடுத்துள்ளான். அந்த
வழிகாட்டல் குர்ஆனும்
நபிமொழியாகவும் உள்ளது.
இவ்விரண்டையும்
பேணி வாழ்வதே
மனிதப் படைப்பின்
நோக்கம்.
ஜின்னையும், மனிதனையும்
என்னை வணங்குவதற்காகவே
தவிர
(வேறு எதற்காகவும்)
நான் படைக்கவில்லை.
நான்
அவர்களிடம் செல்வத்தை
நாடவில்லை. அவர்கள்
எனக்கு உணவளிப்பதையும்
நான் நாடவில்லை.
(அல்குர்ஆன் 51:56)
இந்த உலகத்தில்
மனம்போன போக்கில்
வாழாமல்
இறைவனுக்குக் கட்டுப்பட்டு
வாழ்ந்தால் மரணத்திற்குப்
பிறகுள்ள வாழ்வில்
இறைவன் சொர்க்கம்
என்ற
சந்தோஷமான வாழ்வைத்
தருவான். இறைக்
கட்டளையைப்
புறக்கணித்து வாழ்ந்தால்
நரகம் என்ற
கஷ்டமான கடும்
நோவினையுள்ள வாழ்வைத்
தருவான் என்ற
மறுமை நம்பிக்கையை
இஸ்லாம் போதிக்கின்றது.