ஞாயிறு, 3 நவம்பர், 2013

பைதுல்மா

நபி (ஸல்) அவர்கள் மரணம் அடைந்த பிறகு அபூபக்கர் (ரலி)
அவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். வந்த
உடனே பைதுல்மாலில் எதையும் காணவில்லை.
ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு
இருந்த போது கவலை காரணமாக வசூல்
வாங்குவதெல்லாம் சிறிது காலம்
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரணத்தினால்
இருந்ததெல்லாம் காலியாய் போய் ஒன்றுமில்லாமல்
இருந்தது. அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள்
ஆட்சிக்கு வருகிறார்கள். வந்த உடனே எல்லாவற்றையும்
முடுக்கி விடுகிறார்கள். அப்போது பஹ்ரைனில் இருந்து பணம்
வரும் என்று தகவல் வந்தவுடன் அபூபக்கர் (ரலி)
ஓரிரு நாட்கள் தாமதிக்கிறார்கள். அப்போது பஹ்ரைனில்
இருந்து பணம் அல்லது பேரித்தம் பழம்
அல்லது கோதுமை ஏதோ ஒன்று அங்கிருந்து வந்த உடன் அபூபக்கர்
(ரலி) அவர்கள் மக்களை எல்லாம் அழைத்துக் கூறினார்கள்.

"மக்களே! ஒரு பொருள் வந்திருக்கிறது. அதில்
யாரிடத்திலாவது நபி (ஸல்) அவர்கள் கடன்
பட்டு இருந்தால் அல்லது வாக்குறுதி அழித்திருத்தால்
அதை அவர் பெற்றுக் கொள்ளட்டும்''
என்று கூறினார்கள். அதனை ஏன் அபூபக்கர் நிறைவேற்ற
வேண்டும்? தந்தையுடைய கடனை எப்படி மகன் நிறைவேற்ற
வேண்டுமோ அதே போன்று ஆட்சியாளர் பெற்ற
கடனுக்கு அவருக்குப் பிறகு யார் வருகிறாரோ அவர் தான்
அதற்கு பொறுப்பாளி.

எப்படிநல்லதுகெட்டதுக்குபொறுப்பாளியோஅப்படித்
தான் கடனுக்கும் அவர் பொறுப்பாளியாவார்.
எனவே அதனை அவர் நிறைவேற்ற வேன்டும் இதன் அடிப்படையில்
அதனை அபூபக்கர் (ரலி) நிறைவேற்றினார்கள். அந்த அடிப்டையில்
அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: யாரிடத்தில்
அல்லாஹ்வுடைய தூதர் கடன் வாங்கியிருந்தார்களோ அவர்
வந்து எடுத்து கொள்ளட்டும் என்று கூறினார்கள்.
அப்போது ஆளுக்கு ஆள் அதனை வாங்கிப் போக
ஆரம்பித்தார்கள்.

அந்த அடிப்படையில் ஜாபிர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்)
அவர்கள் உனக்கு ஒன்று தருவேன்
என்று வாக்களித்திருந்தார்கள். அதனைப் போய் கேட்டவுடன்
அப்படியே அள்ளி, அள்ளி ஐநூறு திர்ஹத்தைக்
கொடுக்கிறார்கள். திரும்பவும் இன்னும்
கொஞ்சத்தை கொடுங்கள் என்று கேட்கிறார்.
மீண்டும் ஐநூறு திர்ஹத்தைக் கொடுக்கிறார்கள்.
மீண்டும் கொஞ்சம் கொடுங்கள் என்று கேட்க,
மீண்டும் ஐநூறு திர்ஹம், ஆக மொத்தம்
ஆயிரத்தி ஐநூறு திர்ஹங்கள் ஜாபிருக்கு அபூபக்ர் (ரலி)
கொடுக்கிறார்கள்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"பஹ்ரைன் நாட்டிலிருந்து (ஸகாத்) பொருட்கள்
வந்தால் உமக்கு இன்னின்ன பொருட்களைத்
தருவேன்!'' என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம்
கூறியிருந்தார்கள். அவர்கள்
இறக்கும்வரை பஹ்ரைனிலிருந்து பொருட்கள் வரவில்லை.
அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியில்
பஹ்ரைனிலிருந்து பொருட்கள் வந்தபோது, "நபி (ஸல்)
அவர்கள் யாருக்காவது வாக்களித்திருந்தால்
அல்லது யாரிடமாவது கடன்பட்டிருந்தால் அவர் நம்மிடம்
வரட்டும்!'' என்று அபூபக்ர்(ரலி) அவர்கள்
பிரகடனப்படுத்தினார்கள். நான் அவர்களிடம்
சென்று "நபி (ஸல்) அவர்கள் எனக்கு இன்னின்ன
பொருட்களைத் தருவதாகக் கூறியிருந்தார்கள்!''
என்றேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்குக் கை நிறைய
நாணயங்களை அள்ளித் தந்தார்கள். அதை நான் எண்ணிப்
பார்த்தபோது ஐநூறு நாணயங்கள் இருந்தன. "இதுபோல்
இன்னும்
இரண்டு மடங்குகளை எடுத்துக்கொள்வீராக!''
என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.


நூல்: புகாரி 2296 2298 2683 3137 3165 4383

நாம் மேலே விவரித்தது எல்லாம் கடன் வாங்கியவர்
கடைப்பிடிக்க வேன்டிய விஷயங்கள் ஆகும்.