ஞாயிறு, 3 நவம்பர், 2013

உதிரப் போக்கு உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அபூஹுபைஷின் மகள் ஃபாத்திமா வந்தார். "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு தொடர் உதிரப் போக்கு உள்ளது.

நான் ஒரு நாளும் சுத்தமாவதேயில்லை. எனவே நான் தொழுகையை (எப்போதும்) விட்டு விடலாமா?'' என்று கேட்டார்.

அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "கூடாது! அது நோயின் காரணமாக வெளிப்படும் இரத்தமாகும். மாதவிடாய் இரத்தம் அல்ல! எனவே மாதவிடாய் வரும் போது தொழுகையை விட்டு விடு!

மாதவிடாய் நின்றதும் இரத்தத்தைக் கழுவி விட்டு ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்து தொழு!'' என்று கூறினார்கள்.

(புகாரி 228)