வியாழன், 27 நவம்பர், 2014

Python






Decline - Burmese python found near MKPatti, its about 6.5 feet. its hand over to forest department.

Photo: STC 

செவ்வாய், 25 நவம்பர், 2014

Quran


சாமியார் ராம்பால் ஆசிரமத்தில் பயங்கர ஆயுதங்கள்!



ஹரியானா மாநிலத்தில் கொலைக்குற்றம் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ராம்பால் சாமியாரை கைது செய்ய சென்ற போலீசார் மீது ஆசிரமத்தில் உள்ள குண்டர்கள் துப்பாக்கி வெடிகுண்டுகளுடன் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதில் ஆசிரம் வளாகம் போர்க்களம் போல் காட்சியளித்தது. மேலும் ராம்பாலை நெருங்க முடியாத அளவுக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் மனித கேடயங்களாக நிறுத்தப்பட்டனர். போலீசாரின் முயற்சியால் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மோதலில் 5 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பல்லாயிரக் கணக்கான ஆதரவாளர்களை மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டு போலீஸில் சிக்காமல் ஆசிரமத்தில் தங்கியிருந்த ராம்பாலை பர்வாலாவில் போலீஸார் கைது செய்து ஆம்புலன்ஸ் மூலம் சண்டீகருக்கு அழைத்துச் சென்றனர்.
8 வருடத்திற்கு முன்னர் உள்ள கொலை குற்றச்சாட்டு உட்பட பல குற்றச்சாட்டுக்கள் சாமியார் ராம்பால் மீது உள்ளன.
சாமியார் ராம்பால் கைது செய்யப்பட்ட பிறகு நாடு முழுவதுமுள்ள அவரது ஆசிரமங்களில் போலீசார் அதிரடியாக ரெய்டு நடத்தி வருகின்றனர்.
ஹரியானா மாநிலம் பர்வாலாவில் உள்ள ராம்பாலின் ஆசிரமத்திலிருந்து ஆயுதங்களும், வெடிப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆசிரமத்தின் அலமாரிகளிலிருந்து 32 போர் ரிவால்வர்கள், 19 ஏர் கன்கள், இரண்டு டிபிஎல் போர், இரண்டு 315 போர் ரைஃபிள்கள், 32 போர் ரிவால்வர்களுக்கான 28 லைவ் கேட்ரிட்ஜ்கள், 12 போர் ரைஃபிள்களுக்கான 50 லைவ் கேட்ரிட்ஜ்கள், 315 போர் ரைஃபிள்களுக்கான 25 லைவ் கேட்ரிட்ஜ்கள், ஒரு சில்லி க்ரேனேடு ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை இரண்டு அறைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெரிய சுவர்கள், கண்காணிப்பு டவர்கள் உள்பட ஒரு கோட்டைக்கு சமமான அளவில் ராம்பாலின் ஆசிரமம் கட்டப்பட்டுள்ளது. ராம்பாலின் பாதுகாப்பு அதிகாரிகளுக்காகவே தனியாக அறை உள்ளது. பக்தர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக ஆசிரமத்தின் அனைத்து பகுதிகளிலும் சி.சி.டி.வி காமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பக்தர்களை பரிசோதிப்பதற்காக நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் பொருத்தப்பட்டுள்ளது. நீச்சல் குளம், 24 ஏ.சி அறைகள், மாதத்திற்கு ஒரு லட்சம் பேருக்கு உணவு, உணவு தயாரிப்பதற்கான விசாலமான சமையலறை, ஒரே தடவையில் ஆயிரம் ஃப்ரெட்டை தயாரிக்கும் இயந்திரம் ஆகியன ஆசிரமத்தில் உள்ளன.
ராம்பாலுக்காக தனியாக தயாரிக்கப்பட்ட ஹைட்ராலிக் நாற்காலி, பக்தர்களுக்கு அறிவுரை வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட கண்ணாடியால் தயாரிக்கப்பட்ட தனி பகுதியும் ஆசிரமத்தில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் பெதுலிலிருந்து 10 கி.மீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலையில் 70 ஏக்கர் பரப்பளவில் ராம்பாலின் ஆசிரமம் ஒன்றும் அமைந்துள்ளது. 50 ஆயிரம் பேர் தங்கக்ககூடிய அளவில் மிகப் பிரம்மாண்டாக கட்டப்பட்டு வரும் இந்த ஆசிரமத்தில் இதுவரை தங்கியிருந்தவர்கள் தற்போது வெளியேறி வருவதால் அந்த இடமே வெறிச்சோடி காணப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த ஆசிரமம் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

‪#‎பொறாமை‬ கொள்ளக் கூடாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும்
‪#‎பொறாமை‬ கொள்ளக் கூடாது.
1.ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுத்
தந்தான். அவர் அதனை இரவு, பகல்
எல்லா நேரங்களிலும் ஓதி வருகிறார். இதைக்
கேள்விப்பட்டு அவருடைய அண்டை வீட்டுக்காரர்,
"இன்னாருக்கு வழங்கப்பட்டதுபோல் எனக்கும்
வழங்கப்பட்டிருந்தால் நானும் அவர்
செயல்படுவது (ஓதுவது) போல்
செயல்பட்டிருப்பேனே (ஓதியிருப்பேனே)!''
என்று கூறுகின்றார்.
2. இன்னொரு மனிதருக்கு ‪#‎அல்லாஹ்‬
செல்வத்தை வழங்கினான். அவர்
அதனை நேர்வழியில் செலவிட்டு வருகிறார்.
(இதைக் காணும்) ஒரு மனிதர்,
"இன்னாருக்கு வழங்கப்பட்டதுபோல் எனக்கும்
(செல்வம்) வழங்கப்பட்டிருக்குமானால் அவர் (தர்மம்)
செய்ததுபோல் நானும் செய்திருப்பேனே''
என்று கூறுகின்றார்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5026

திங்கள், 24 நவம்பர், 2014

Jeddah - KSA Rain




Quran & Hadis

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர்
ஒவ்வொரு நாளும் (தமது உடலிலுள்ள)
ஒவ்வொரு மூட்டிற்காகவும் தர்மம்
செய்வது கடமையாகும்; இறைவனைத் துதிக்கும்
ஒவ்வொரு துதிச் சொல்லும் (-சுப்ஹானல்லாஹ்)
தர்மமாகும். ஒவ்வொரு புகழ்மாலையும் (-
அல்ஹம்துலில்லாஹ்) தர்மமாகும்.
ஒவ்வொரு "ஓரிறை உறுதிமொழி'யும் (-
லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; அவனைப்
பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (-
அல்லாஹு அக்பர்) தர்மமே! நல்லதை ஏவுதலும்
தர்மமே! தீமைகளைத் தடுத்தலும் தர்மமே!
இவை அனைத்திற்கும் (ஈடாக) முற்பகல் நேரத்தில்
(ளுஹா) இரண்டு ரக்அத்கள்
தொழுவது போதுமானதாக அமையும்.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி) நூல் : முஸ்லிம் 1302


_______________
நம்பிக்கை கொண்டோரே! உங்களின்
பொருட்செல்வமும், மக்கட் செல்வமும் அல்லாஹ்வின்
நினைவை விட்டு உங்களை திசை திருப்பி விட
வேண்டாம். இதைச் செய்வோரே நஷ்டமடைந்தவர்கள்.
உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம்
உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்)
செலவிடுங்கள்! "இறைவா! குறைந்த காலம்
வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா?
தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே''
என்று அப்போது (மனிதன்) கூறுவான்.
அல்குர்ஆன் 63:9,10

சனி, 22 நவம்பர், 2014

Quran

சிலரை விட மற்றும் சிலரை ‪#‎அல்லாஹ்‬
மேன்மைப்படுத்தியுள்ளதில்
‪#‎பேராசை‬ கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள்
பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள்
பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம்
அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ்
ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக
இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4 32

Hadis

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்
சமுதாயத்தினரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின்
கட்டளையைச்
செயல்படுத்தியவண்ணமே இருப்பார்கள்.
அவர்களுக்கு இடைஞ்சல் செய்பவர்கள் அவர்களுக்குத்
தீங்கிழைக்க முடியாது. அவர்களை எதிர்ப்பவர்களும்
அவர்களுக்குத் தீங்கு செய்ய முடியாது.
இறுதியில், அவர்கள் அதே நிலையில் நீடித்திருக்க,
அல்லாஹ்வின் ஆணை ( இறுதிநாள்) அவர்களிடம்
வரும்.
நூல் புகாரி (3641)

வியாழன், 20 நவம்பர், 2014

டிப்ஸ்

இளநீர் குடித்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்
கர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைக்கும் ஏற்றது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளநீரில் எலக்ரோலைட் அதாவது மின்பகுபொருள் அதிகமாக உள்ளது. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்று நோய் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்...


************************

கீரை டிப்ஸ்
கீரையுடன் சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்தால், பசுமை மாறாமல் இருக்கும்.
வல்லாரைக் கீரை சாப்பிடுவதால் ஞாபகசக்தி அதிகரிக்கும் என்பது உண்மையே. அதற்காக, அள்ளி வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தால்... தலைவலி, மயக்கம் என்று படுத்த ஆரம்பித்துவிடும் ஜாக்கிரதை!
புளிச்சக்கீரை குடலுக்கு வலுவூட்டக்கூடியது. இதில் துவையல் செய்து சாப்பிட்டால், வயிற்றுப் புண், வயிற்றுக் கடுப்பு ஆகியவை குணமாகும்.
கீரைகளில் மசியல், கூட்டு செய்யும்போது பயத்தம்பருப்பை சேர்த்துச் செய்ய வேண்டும். இது சுவையைக் கூட்டுவதோடு... உடலுக்குச் சத்தையும், குளிர்ச்சியையும் தந்து தெம்பும் ஊட்டும்.
பாலக்கீரையில் அதிகமாக இரும்புச்சத்து இருக்கிறது. இந்தக் கீரையில் உப்பு சேர்த்து லேசாக வேக வைத்து, மிக்ஸியில் அரைத்து... கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். மலச்சிக்கலை போக்கி, உடம்பைப் புத்துணர்ச்சியாக வைக்கும்.
வயிற்றில் இருக்கும் அதிகப்படியான சதையை (தொப்பை) குறைக்கச் செய்யும் குணம் பசலைக்கீரைக்கு உண்டு. லேசாக வேக வைத்து பொரியல் செய்துகூட சாப்பிடலாம்.
மணத்தக்காளிக் காய்களை உப்பு, மோரில் பிசிறி வெயில் காய வைத்து, எண்ணெயில் பொரித்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். வாய்ப் புண், வயிற்றுப் புண் ஆகியவை குணமாகும்.
இரவு வேளையில் கீரை சமைத்து சாப்பிடக்கூடாது என்பார்கள். சரிவர ஜீரணமாகாமல் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதுதான் காரணம்.
சிறுகீரை என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், அது தரும் பலன்கள் பெரிதுதான். மிளகு, சீரகம், சோம்பு, தக்காளி, வெங்காயம் இவற்றோடு சிறுகீரையைச் சேர்த்து வேக வைத்து, சிறிது பருப்பையும் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால்... பித்தம், நீர்க்கடுப்பு, கை, கால் வீக்கம் குறையும். சர்க்கரை நோயாளிகள் இந்தக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், இன்சுன் இயல்பாக சுரக்கவும் வாய்ப்பு ஏற்படும்.
எந்தக் கீரையானாலும் துவையல் செய்தே சாப்பிடலாம். கீரையை நிறம் மாறாமல் நன்றாக வதக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், 2 பூண்டு பல், புளி, உப்பு சேர்த்து சிறிது எண்ணெயில் தனியாக வறுக்கவும். பிறகு, வதக்கிய கீரையுடன் சேர்த்து அரைத்தால் துவையல் தயார். இதைச் சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். ருசியாக இருப்பதோடு, சத்துக்களும் அப்படியே உடல் சேரும்.

நீலகிரி சிக்கன் குருமா



தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ 
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
அரைப்பதற்கு...:
சீரகம் - 1 டீஸ்பூன்,
சோம்பு - 1 டீஸ்பூன்,
கசகசா - 1 டீஸ்பூன்,
பட்டை - 1 இன்ச்,
ஏலக்காய் - 2,
துருவிய தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்,
முந்திரி - 8,
பச்சை மிளகாய் - 4,
கொத்தமல்லி - 3
டேபிள் ஸ்பூன் (நறுக்கியது),
புதினா - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது),
தண்ணீர் - 3 1/2 கப்
செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், சோம்பு, கசகசா, ஏலக்காய் மற்றும் பட்டை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, அத்துடன் முந்திரி, தேங்காய், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 3 நிமிடம் வதக்கி, தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேத்துஇ 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 7-8 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பிறகு எலுமிச்சை சாறு மற்றும் சிக்கன் துண்டுகளை போட்டு, 2 நிமிடம் பிரட்டி, 3 கப் தண்ணீரை ஊற்றி, 20-30 நிமிடம் மூடி வேக வைத்து இறக்க வேண்டும்
இப்போது சுவையாக நீலகிரி சிக்கன் குருமா ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

கேன்சரை தடுக்கும் பழங்கள், காய்கறிகள்:-



மாம்பழம்: இதில் பீட்டாகரோட்டின், வைட்டமின் `சி' செலீனியம், குயர்செடின், கந்தகம், கால்சியம் உள்ளன. மார்பகப் புற்று, குடல் புற்று, நுரையீரல் புற்று, ரத்தப்புற்று, புராஸ்டேட் புற்று, கருப்பை வாய்ப்புற்று நோய்கள் வராமல் தடுக்கிறது. இதில் ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் அளவு 170 மிகி/ 100 கிராம் உள்ளது.
வாழைப்பழம்: இதில் நார்ச்சத்து, கால்ஷியம், வைட்டமின் சி, கரோட்டின், கந்தகம், ஹிஸ்ட்டிடின், பைரிடாக்ஸின், மெதியோனைன் (அமினோ ஆசிட்) உள்ளன. ஆன்ட்டி ஆக்சிடெண்ட் அளவு 30மிகி/ 100கிராம் பைரிடர்க்ஸின் மற்றும் மெதியோனைன் உள்ள வாழைப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் புகைப்பிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும் வாய்ப்புக் குறைவு என்கிறது ஓர் ஆய்வு.
மாதுளம் பழம்: இதில் நார்ச்சத்து, கால்ஷியம், வைட்டமின் `சி' கந்தகம் பாலிடெண்ட்ஸ், ஐசோபிளேவோன்ஸ் உள்ளன. ஆன்ட்டி ஆக்ஸிடென்டு அளவு 135மிகி/100கி உள்ளது. நுரையீரல், புராஸ்டேட் புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது. மார்பகப் புற்றுநோய் செல்களை அழிப்பதாக சொல்லப்படுகிறது.
திராட்சை: இதில் நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் `சி', கரோட்டின், எலாஜின் ஆசிட், காஃபெயக் ஆசிட் உள்ளன. இதன் பழத்தோலில் ஆந்தோசையானின்கள் மற்றும் ரெஸ்வெரட்ரால் உள்ளன். ஆன்ட்டி ஆக்சிடெண்ட் அளவு 85மிகி/100 கிராம் உள்ளது. ரெஸ்வெரட்ரால், குடல் மற்றும் புராஸ்டேட் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.
இதன் விதையிலும் இச்சக்தி உள்ளது. டானின் என்ற பாலிபெனால் திராட்சை தோல் மற்றும் விதையில் உள்ளது. கட்டிகள் உருவாவதைத் தடுக்கிறது. குயர்செடின் கருப்பு திராட்சையிலும், காய்ந்த திராட்சையிலும் உள்ளன. தினசரி காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை திராட்சைப்பழம் மட்டும் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்த பெண் புற்றுநோயாளி ஒருவர், குணமடைந்ததாக மருத்துவ தகவல் கூறுகிறது.
பப்பாளி: இதில் நார்ச்சத்து, கால்சியம், கந்தகம், பீட்டாகரோட்டின், வைட்டமின் `இ' கிரிப்டோ சாந்தின், பெப்பைன், என்சைம் உள்ளன. ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் அளவு 50 மிகி/ 100 கி உள்ளது. குடல் புற்று, புராஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
சீத்தாப்பழம்: இதில் நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் `சி' உள்ளன. ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் அளவு 202மிகி/ 100கி உள்ளது. சீத்தாப்பழத்தின் மூலம் பலர் புற்றுநோயில் இருந்து குணம் அடைந்துள்ளதாக அறியப்படுகிறது. தொண்டை, குடல், ரத்தப்புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
கொய்யா: வைட்டமின் `சி' , நார்ச்சத்து, கால்சியம், லைகோபீன் உள்ளன. ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் அளவு 496மிகி/100கி உள்ளதால் புற்றுநோய்கள் வரால் தடுக்கிறது.
எலுமிச்சம்பழம்: நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் `சி' பீட்டா கரோட்டின், லிமோநீன், ஃபர்ரோகௌ மரைன்ஸ், ஃபளேவோனால்க்ளை கோசைட்ஸ், சிட்ரிக் ஆசிட், மாலிக் ஆசிட், பொட்டாசியம் சிட்ரேட் உள்ளதால் தோல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
புற்றுநோயைக் குறைக்கும் காய்கறிகள்:
உருளைக்கிழங்கு: புற்றுநோயை எதிர்க்கும் பொருள் தோலின் உட்பாகத்தில் இருப்பதால் உருளைக்கிழங்கைத் தோலுடன் சாப்பிட வேண்டும். பேபி பொட்டேட்டோ என்று அழைக்கப்படும் உருண்டையான சிறிய ரக உருளைக்கிழங்கு சிறந்தது.
பாகற்காய்: செயின்ட்லூயிஸ் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பாகற்காய்சாறு மார்பகப் புற்றுநோய் செல்களை அழிப்பது மட்டுமின்றி புற்றுநோய் செல்களைப் பெருக்கமடையாமல் தடுக்கிறது எனக் கண்டுபிடித்துள்ளனர். கருவுற்ற பெண்களும், பால் கொடுக்கும் தாய்மார்களும் பாகற்காய் உண்பதைத் தவிர்க்கவும்.
வெங்காயம்: வெங்காயத்தையும், பூண்டையும் உணவில் அதிகம் பயன்படுத்தினால் வயிற்றுப்புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வு தெரிவிக்கிறது.
தக்காளி: ஆண்கள் வாரம் பத்துமுறை தக்காளி சாப்பிட்டால் புராஸ்டேட் புற்றுநோய் வரும் ஆபத்து 45% குறைவு என்றும், வாரம் 7 முறை சமைக்காமல் சாப்பிட்டால் குடல் மற்றும் வயிற்றுப்புற்று நோய் வரும் ஆபத்து 60% குறைவு என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
தக்காளியில் உள்ள லைகோபீனின் சக்தியானது , கொஞ்சம் சமையல் எண்ணெய் விட்டு சமைத்தால் அதிகரிக்கிறது. புராஸ்டேட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி வேகத்தைக் குறைக்கிறது. செல்களைக் கொல்லவும் செய்கிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. தக்காளி நுரையீரல், வயிறு, வாய், குடல், மலக்குடல் புராஸ்டேட் புற்றுநோய்களை வராமல் தடுக்கிறது.
முட்டைகோஸ்: கணையப்புற்று, மார்பகப்புற்று, வயிற்றுப்புற்று, குடல்புற்று வராமல் தடுக்கிறது. கீமோதெரபியுடன் முட்டைகோஸ் சாற்றை, புரோகோலி மற்றும் காலிஃபிளவர் சாற்றுடன் கொடுத்து வந்தால் மார்பகப் புற்றுநோயைக் குணப்படுத்தி விடலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள். முட்டைக்கோஸைத் தொடர்ந்து சாப்பிட்டு வர கணையப் புற்றுநோய் வராது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கந்தகமும், ஹிஸ்டிடின் அமினோ அமிலமும் நோயைத் தடுப்பதாகச் சொல்கிறது மற்றொரு ஆராய்ச்சி.
சாலட்: வெங்காயம், காரட், வெள்ளரி, தக்காளி சாலட் சிறந்த புற்றுநோய் எதிர்ப்பு உணவு ஆகும். பெண்கள் கருவுறுவதற்கு முன்பும் (சுமார் 6 மாதம் முதல் 1 வருட காலத்துக்கு) கருவுற்ற காலத்திலும், குழந்தைக்குப் பால் கொடுக்கும் 6-18 மாத காலத்திலும் புற்றுநோய் எதிர்ப்பு உணவுப் பொருட்களைச் சாப்பிட்டு வருவதுடன் மற்ற அறிவுரைகளையும் கடைப்பிடித்து வந்தால் குழந்தைகளுக்கு மூளைக்கட்டி வருவதையும், அது புற்றுநோய் கட்டியாக மாறுவதையும், ரத்தப் புற்றுநோய் போன்றவைகள் வருவதையும் தவிர்க்கலாம்.
அத்துடன் இவ்வகை உணவுகளைக் குழந்தைகள் சிறுவயதில் விரும்பிச் சாப்பிடுவார்கள். காரணம், அவர்களுடைய ஜீன்களில் அவை பதிவாகி விடுவதால் அந்த வகை உணவுகளை அவர்கள் விரும்புவார்கள். பரம்பரை புற்றுநோய்கள் என்று சொல்லப்படுகின்ற தைராய்டு புற்று, கணையப் புற்று, குடல் புற்று, சிறுநீர்ப்பை புற்று போன்றவற்றை நிச்சயம் வராமல் தடுக்கலாம்

சளியைப் போக்கும் மிளகு ரசம்



சளி பிடித்திருந்தால், அப்போது மிளகு ரசம் செய்து சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் காணாமல் போய்விடும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். உங்களுக்கு மிளகு ரசம் எப்படி செய்வதென்று தெரியாவிட்டால், தமிழ் போல்ட் ஸ்கை மிளகு ரசத்தின் ஈஸியான செய்முறையைக் கொடுத்துள்ளது.
அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து மகிழுங்கள். அதிலும் இந்த ரசத்தை பேச்சுலர்கள் கூட முயற்சி செய்யலாம். சரி, இப்போது ரெசிபியைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
புளி - 1 எலுமிச்சை அளவு
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு...
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 1
வரமிளகாய் - 1
துவரம் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
நெய் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
வரமிளகாய் - 2
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் புளியை 1 கப் நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.
பின்பு அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி கொதிக்க விட வேண்டும்.
அதே சமயம் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் தாளித்ததை கொதிக்கும் ரசத்தில் ஊற்றி மீண்டும் ஒரு கொதி விட்டு, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், மிளகு ரசம் ரெடி!!!

உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள்...



ஜூஸ் குடித்தால் அடிக்கடி பசி ஏற்படுவதை குறைத்து நீண்ட நேரம் வயிற்றினை நிறைத்து வைத்திருக்கும். இதனால் கண்ட கண்ட உணவு பொருட்களை சாப்பிடமாட்டோம். இப்போது உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகளை பார்ப்போம்.
எலுமிச்சை ஜூஸ்: பொதுவாக எலுமிச்சை உடல் எடைக்குறைப்பதற்கு முக்கிய பங்கு. அதிலும் ஏழே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய, எலுமிச்சை ஜூஸில் 1 சிட்டிகை உப்பு, மற்றும் தேன் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்.
தக்காளி ஜூஸ்: ஏழே நாட்களில் எடையில் நல்ல மாற்றம் வேண்டுமெனில், 3 தக்காளியை வேக வைத்து அதனை அரைத்து, அதில் வெல்லம் சேர்த்து தினமும் மூன்று வேளை குடித்து வரவேண்டும்.
அவகேடோ ஜூஸ்: அவகேடோவை அரைத்து ஜூஸ் போட்டு, தேன் சேர்த்து குடித்து வந்தால், தொப்பை குறைந்துவிடும். மேலும் இதில் நல்ல கொழுப்புகள் இருப்பதால், உடலில் உள்ள கலோரிகளை எரித்துவிடும்.
திராட்சை ஜூஸ்: கிரேப் புரூட்டில் வைட்டமின்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் இருப்பதால், இதனை கொண்டு ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடல் எடை குறைவதோடு, சருமமும் நன்கு பொலிவோடு இருக்கும்.
கொய்யா ஜூஸ்: கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இதனை ஜூஸ் போட்டு வாரத்திற்கு இரண்டு நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும்
ஆரஞ்சு பழ ஜூஸ்: ஆரஞ்சு பழ ஜூஸை குடித்தாலும், எடையில் மாற்றம் தெரியும். அதிலும் ஆரஞ்சுப் பழ ஜூஸில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும்.
அன்னாசி ஜூஸ்: அன்னாசியை மட்டும் அரைத்தால், அது கெட்டியாக ஜூஸ் போன்று இருக்கும். ஆகவே அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து பசியாக இருக்கும் நேரத்தில் குடித்தால் பசியானது உடனே அடங்கும்.

இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்


இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் என அமெரிக்க பேராசிரியர் தனது நீண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளார். அமெரிக்காவில் அயோவா லூதர் கல்லூரியில் மத விவகாரத்துறை பேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர்-Robert F. Shedinger – இயேசு ஒரு முஸ்லிம் என்று தனது ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இவர் இயேசு ஒரு முஸ்லிம்? was jesus a muslim? என்ற தலைப்பிலான தனது புதிய நூலில் தலைப்பில் கேட்டும் கேள்விக்கு அந்த நூலில் திடமாக ஆம் எஸ் அவர் ஒரு முஸ்லிம்தான் என்று தெரிவித்துள்ளார் . இந்த நூல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்த நூல் இந்த ஆண்டில் வெளிவரவுள்ளது
மதங்கள் குறித்த பேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர் கற்பித்தல் குறித்து வகுப்பில் ஒரு முஸ்லிம் மாணவி 2001-ஆம் ஆண்டில் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து அவர் இஸ்லாத்தைக் குறித்தும் இதர மதங்களைக் குறித்தும் அதிகமாக ஆராய தீர்மானித்துள்ளார்.
"இஸ்லாத்துடன் தொடர்பில்லாத காரியங்களை நான் கற்பிப்பதாக முஸ்லிம் மாணவி ஒருவர் சுட்டிக்காட்டியது எனக்கு இஸ்லாத்தைக் குறித்து அதிகமாக ஆராய தூண்டுகோலாக அமைந்தது"- எனபேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர் தெரிவிக்கிறார்.
பாக்ஸ்நேசன் செய்தி சேவைக்கு பேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர் வழங்கிய பேட்டியில் : ‘எனது கற்பித்தல் முறை மற்றும் மதங்களைக் குறித்த அனைத்து புரிதல்களையும் மீளாய்வுக்கு உட்படுத்த மாணவியின் தலையீடு தூண்டுகோலாக அமைந்தது. இயேசுவிற்கு ஏற்ற மதம் இஸ்லாமாகும். ஏனெனில் அது ஒரு மதம் அல்ல. மாறாக அது சமூக நீதிக்கான இயக்கமாகும். இயேசுவின் வாழ்க்கையும், அவரது நீதிக்கான செயல்பாடுகளும் இஸ்லாத்தோடு ஒத்துப்போகிறது. ஆகையால்தான் இயேசு முஸ்லிம் என நான் முடிவுச்செய்தேன்.’ என்று தெரிவித்துள்ளார்.
இவர் நீண்டகாலமாக இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்தான் என்று தெரிவித்து வருகிறார். தற்போது அவர் எழுதிய நூல் வெளிவரவுள்ளது என்பதால் மீண்டும் இந்த தகவல் சூடு பிடித்துள்ளது.
Jesus was a Muslim, claims U.S. religions professor
source: lankamuslim-org
குர் ஆன்
(நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்; மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை; (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
3:47 قَالَتْ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي وَلَدٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌ ۖ قَالَ كَذَٰلِكِ اللَّهُ يَخْلُقُ مَا يَشَاءُ ۚ إِذَا قَضَىٰ أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُن فَيَكُونُ
3:47. (அச்சமயம் மர்யம்) கூறினார்: “என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” (அதற்கு) அவன் கூறினான்: “அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.”
19:20 قَالَتْ أَنَّىٰ يَكُونُ لِي غُلَامٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌ وَلَمْ أَكُ بَغِيًّا
19:20. அதற்கு அவர் (மர்யம்), “எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?” என்று கூறினார்.
19:22 فَحَمَلَتْهُ فَانتَبَذَتْ بِهِ مَكَانًا قَصِيًّا
19:22. அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.
19:27 فَأَتَتْ بِهِ قَوْمَهَا تَحْمِلُهُ ۖ قَالُوا يَا مَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْئًا فَرِيًّا
புதிய எற்படு மத்தேயு அதிகாரம் 1
18. இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.
20. அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.
21. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
22. தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
23. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.
24. யோசேப்பு நித்திரை
தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;
25. அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.

மதரஸாக்களில் தீவிரவாதம் எனக்கூவிய மானங்கெட்டவர்களே!

6,720 Views













அரியானா மாநிலத்தில் சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பாலை கைது செய்யச் சென்ற போது ஏற்பட்ட கலவரத்தில் அவரது ஆதரவாளர்கள் ஆசிரமத்தில் இருந்து கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால் துணை ராணுவ படை குவிக்கப்பட்டு காலையில் இருந்து இரு தரப்பாருக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது!
இதுவே ஒரு மதரஸாவில் நடந்து இருந்தால் இந்நேரம் இந்த ஊடகங்கள் எப்படி சொல்லி இருக்கும்? 'மதரஸா உள்ளே இருந்து தீவிரவாதிகள் வெடிகுண்டு வீச்சு' ஆனால் இப்போது குண்டு வீசுபவர்கள் சாமியாரின் ஆதரவாளர்களாம்!
இந்த லட்சணத்தில் மதரஸாக்களை கண்காணிக்க வேண்டும் என சங்பரிவார் குரல் எழுப்புகின்றனர்!
துணை ராணுவத்தோடு மோதும் அளவிற்கு ஆயுதங்கள் இந்த சாமியார்களுக்கு எங்கிருந்து வந்தது.இதுவரை இவர்கள் இந்த ஆயுதங்களை வைத்து நாட்டில் என்ன சதி செயல்களை அரங்கேற்றினார்கள் என்பதெல்லாம் மர்மமாகவே உள்ளது !
கண்காணிக்க வேண்டியது பஞ்சத்தில் வாடும் மதரஸா மாணவர்களை அல்ல! மஞ்சத்தில் ஆடும் சாமியார்களை! துறவிகள் எனும் பெயரில் கோடிகோடியாய் சொத்து சேர்த்து வைத்து இருக்கும் ஆசிரமங்களை ! கொலைக்கும் அஞ்சாத மடங்களை! குண்டுவீசி துணைராணுவப் படையை எதிர்க்கின்ற தீவிரவாத ஆதரவாளர்களை !
செய்யுமா மத்திய காவி அரசு?
பாபா ராம் தேவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கும் கேடு கெட்ட அரசு எப்படி செய்யும்?
-செங்கிஸ்கான்.


இந்த வீடியோவை பாருங்கள் பகிருங்கள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
இந்த வீடியோவை பார்த்த பிறகு .....நான்டுக்கிட்டு சாவுங்கடா இப்பம் சொல்லுங்கடா தீவிரவாதிகள் யார் என்று.

இஸ்லாமிய நண்பன்




எவருக்கும்
அருகதை கிடையாது :எங்கள்
நாட்டின் சட்டம் புனித
குர்ஆனுக்கு உட்பட்டதே:அமெரி
க்காவில்
சவுதி நீதியமைச்சர்
எச்சரிக்கை!வாஷி
ங்டன்:எங்கள் நாட்டின்
சட்டதிட்டங்கள்
இறைமறையான
அல்குர்ஆனுக்கு உட்பட்டதாக
இருக்கின்றது.
இறைவனால் இவ்வுலக
மக்களுக்கு அருளப்பட்ட
சட்டங்களையே நாங்கள் எங்கள்
நாட்டில் கடைப்பிடிக்கின்
றோம். என
அமெரிக்காவின்
தலைநகரான
வாஷிங்டனில் இடம்பெற்ற
சட்டத்தரணிகள், சட்ட
ஆலோசகர்கள் மற்றும் மனித
உரிமை அதிகாரிகள்
கலந்துகொண்ட கூட்டத்தில்
சவுதி அரேபியாவின்
நீதி அமைச்சர் முஹம்மத் அல்
ஈஸா எச்சரித்துக்
கூறினார்.முஹம்மத் அல்
ஈஸா மேலும்
கூறுகையில்.எமது
நாட்டின்
சட்டங்களை இழுவுபடுத்தியும
், மனித
உரிமைகளுக்கு அப்பாற்பட்ட
சட்டங்களை எமது நாடு கடைப்பிடிப்பதாக
வும் உலக ஊடகங்களும்,
மனித
உரிமை அமைப்புக்களும்
பிழையாக
எங்களை விமர்சித்து வருகின்றனர்.இதை
ப்பற்றி எங்களுக்குக்
கவலை இல்லை.
ஆளுமைமிக்க ஒரு நல்ல
மனித சமுதாயத்தைக்
கட்டடிக் காக்க
அல்குர்ஆனின் சட்டங்கள்
இவ்வுலகிற்கு இன்றியமையாதவை.
இஸ்லாம் பற்றியும்,
அல்குர்ஆன் பற்றியும்
அறியாத பல
மேற்கத்தேயர்கள்இஸ்லாம்
மீதுள்ள பொறாமையில்,
சவுதி அரேபியாவின்
சட்டங்களை மாத்திரம்
எதிர்த்து வருகின்றனர்.
விமர்சித்தும்
வருகின்றனர்.
எங்களது சட்டங்கள்
எப்போதும் மனித
உரிமைகளுக்கு எதிரானது அல்ல.சட்டத்திற்
கு அமைய
குற்றவாளிகளின்
தலையைத்
துண்டிப்பதையும்,
கையைத்
துண்டிப்பதையும்
சவுதி நிறுத்த
வேண்டும். இதற்கு மாறாக
வேறு சட்டங்களை ஏற்படுத்துங்கள்
என எங்களை பலர்
வற்புறுத்துகின்றனர்.
ஆனால், இச்சட்டங்களை,
தண்டனைகளை எங்களால்
மாற்ற முடியாது.
ஏனெனில் குர்ஆனில் உள்ள
சட்டங்களை மாற்றும்
அதிகாரம் எங்களுக்குக்
கிடையாது.தலைகளை
துண்டிப்பதோ.
கைகளை துண்டிப்பதோ.எங்
களது சுய
லாபத்திற்கு அல்ல.
சந்தேகத்திற்கிடமான
குற்றவாளிகள் எவருக்கும்
நாங்கள்
இத்தண்டனைகளை வழங்குவதில்லை.
குற்றம் நிரூபிக்கப்பட்ட
ால்
மாத்திரமே இறைவனின்
பெயரால்
இத்தண்டணை வழங்கப்படுகிறது
.கடந்த 1400 வருடங்களுக்கும்
மேலாக இஸ்லாம்
இவ்வுலகில் ஆணித்தரமாக
காலூன்றி இருக்கின்றது.
இருந்தும் வருகிறது.
இஸ்லாத்தில் பொய்களும்.
மனித
உரிமைகளுக்கு எதிரான
சட்டங்களும் இருப்பின்.
இஸ்லாம் இவ்வுலகில்
எப்போதே அழிக்கப்பட்டிரு
க்கும்.ஆனால் பல
மில்லியன் கணக்கான மக்கள்
இன்றுவரை இஸ்லாத்தில்
இணைகின்றனர். இவர்கள்
எவரும் உலக மனித
உரிமைச் சட்டங்களைப்
பின்பற்றி வரவில்லை.
மாறாக அல் குர்ஆனைப்
படித்து, விவாதித்து,
ஆய்வு செய்தே இஸ்லாத்துக்குள்
நுழைகின்றனர்.என
வே இஸ்லாம் மீதுள்ள
காழ்ப்புணர்ச்சியால்
சவுதி அரேபியாவின்
சட்டங்கiளுயும்,எங்கள்
இறைமைகளையும்
விமர்சிப்பதை இத்துடன்
உலகம் நிறுத்த
வேண்டும்.என
சவுதி அரேபியாவின்
நீதி அமைச்சர் அல்
ஈஸா வாஷிங்டனில்
இடம்பெற்ற
கூட்டமொன்றில்சவ
ுதி அரேபியாவின்
சட்டத்தை விமர்சிப்பவர்கள
ுக்கு எச்சரிக்கை விடுத்து உரையாற்றினார்.

புதன், 19 நவம்பர், 2014

சர்க்கரை நோய் பரிசோதனை முகாம்

நமதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது (19/11/2014/)இதில் 200 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றாற்கள்


















சவுதி தமிழ் தர்ஜூமாவில் பிழை!


ீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீ
இலங்கையிலுள்ள ஸலஃபிகளால் மொழிபெயர்க்கப்பட்டு சவுதி அரேபியாவிலிருந்து வெளியிடப்பட்ட திருக்குர்ஆன் தர்ஜூமாவில் பிழை இருப்பதாக தெரிகின்றது. அத்தியாயம் 39ல் வசனம் 75ல் மலக்குகளில் சிலரை அல்லாஹ் நரகத்தில் புகுத்துவான் என்று எழுதி இருக்கின்றனர்.
மலக்குகள் நரகம் புகுவார்களா?
இது சம்பந்தமாக எத்தனை பேர் சுட்டிக்காட்டி இருக்கின்றீர்கள்?
இதை எழுதியவர்கள் வழிகேடர்கள் என்று மேடை போட்டு பேசி இருக்கின்றீர்கள்?
எத்தனை பேர் எழுதியவர்களை விவாதத்திற்கு அழைத்தீர்கள்?
பீ.ஜே அவர்களின் தர்ஜூமாவை ஒவ்வொரு எழுத்தாக லென்ஸ் வைத்து பார்த்தவர்களுக்கு இந்த மாபெரும் பிழை கண்ணுக்கு தெரியவில்லையா?
அவரை மட்டுமே குறை காண வேண்டும் என்ற ஒரே இலக்கில் மேடைகள் தோறும் முழங்கியவர்கள் இதற்கு பதில் சொல்வார்களா?
ஒரு போஸ்ட் கார்டில் சுட்டிக்காட்டினாலே நாங்கள் அதை திருத்திக் கொள்வோம் என்று சகோ.பீ.ஜே சொன்ன பிறகும் கூட
‘பீ.ஜே மொழி பெயர்த்த குர்ஆன் தர்ஜூமாவில் பிழை”.
பீ.ஜே வழிகேடர்’
‘தவ்ஹீத் ஜமாஅத்தினர் வழிகேடர்கள்’ என்று பேசியும் எழுதியும் வருபவர்கள் அதே அளவுகோலை இலங்கை மற்றும் தமிழக சலஃபிகளுக்கும் பொருத்தி பார்ப்பார்களா?
மனிதன் தவறு செய்பவன், தவறே செய்யாதவன் இறைவன் மட்டுமே?
எதையும் கண்ணியத்துடன் சுட்டிக் காட்டுங்கள்!
LikeLike ·  · 

கொள்கையற்றவர்கள் யார் ?.

ஏக இறைவனின் திருப்பெயரால்....



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கொள்கையற்றவர்கள் யார் என்ற தலைப்பில் அதிராம்பட்டிணத்தில் நான்கு நாட்கள் விவாதம் நடந்ததை அறிவீர்கள். அது தொடர்பாக நமக்கு பலரும் எழுதி கேட்டதால் சில தகவல்களை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

வெற்றுக் கூடாரத்தை நிரப்ப விவாத விளம்பரம்.
சூனியம் என்ற (இல்லாத ஒன்று) கடந்த அகோரி மணிமகண்டனுடைய இமாலய தோல்வியுடன் தமிழ் நாட்டில் சூனியம் ஞான சூனியமாகி (முடிவுக்கு வந்து) விட்டது. தமிழ்நாட்டில் உள்ள மக்களில் முஸ்லிமல்லாதோரும் கூட இதை ஏற்றுக்கெண்டனர். சூனியம் என்பது வெறும் 'பீலாதான் என்றும்சூனியத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மூலம் சூனியம் வைக்கப்பட்டு விட்டது என்று தெளிவாக ஊடகங்களும் எழுதி முடித்து வைத்து விட்டன.

ஆனால் இதை இலங்கையில் உள்ள சில ஆலிம்கள் (எல்லோரும் அல்ல) ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். அவர்கள் தங்களுடைய சூனியம் உண்டு என்ற கொள்கையை மீண்டும் தமிழகத்தில் விதைத்து மறு குழப்பத்தை ஏற்படுத்தியே ஆக வேண்டும் என்ற திட்டம் அவர்களிடம் இருந்தது. அதை செய்வதற்கு அதிரை தாருத்தவ்ஹீத் என்ற சூனியக் கூடம் வழிவகுத்துக் கொடுத்துள்ளது. தாருத்தவ்ஹீத் காரர்களுக்கு பல வருடங்களாக காலியாக கிடந்த வெற்றுக் கூடாரத்தை இந்த விவாத விளம்பரம் மூலமாக ததஜவின் எதிர்ப்பாளர்களைக் கொண்டு நிரப்பி விடுவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டனர்.

ரஷாதி வியாதி
சும்மாக் கிடந்த என்னை இந்தளவுக்கு மக்களிடம் பிரபலடுத்தியதற்கு காரணமே பீஜே அவர்கள் தான். விரட்டி விரட்டிப் பிடித்து என்னை இந்த விவாத மேடையில் அமரச் செய்து விளம்பரம் தேடித் தந்து விட்டார் அதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் என்று செய்ஃபுதீன் ரஷாதி அறிவித்ததிலிருந்து ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்த பல செல்லாக் காசுகள் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து எங்களையும் விளம்பரப்படுத்தி விடுங்கள் என்று வீதியில் நின்றுக் கொண்டு ஒப்பாறி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதில் ஒன்று தான் தாருத்தவ்ஹீத் கார்களின் இந்த விவாத எற்பாடும் அடங்கும் அதற்காகத்தான் இதை ரஷாதி வியாதி என்கின்றோம்.

சூனியத்துக்கு நாங்களும் எதிரானவர்களே !.
1984லேயே நன்பர் பீஜே அவர்களுடைய சூனியம் தொடர்பான விளக்கதை கேட்டு தெளிவு பெற்று அப்பொழுதே சூனியம் இல்லை என்ற பிரச்சாரத்தை நானே கையிலெடுத்து செய்தேன் என்கிறார் ஜமீல் பிறகு ஏன் இந்த விவாதம் ?. அது தான் நீ மாவு கொடு நான் அப்பம் தருகிறேன் எனும் இலங்கை சூனியக் காரர்களுடனான இவர்களுடைய மறைமுக ஒப்பந்தம்.
நான்கு நாட்களும் அதிகம் பேசப்பட்டவை சூனியம் தொடர்பானவை தான் அதுவும் அரைத்த மாவையே அரைக்கிறீர்களே என்று வெட்கமில்லாமல் அந்த அணியினர் சொல்லிக் கொண்டே வந்தது பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது.

அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் இவர்கள் அரைத்தனரா அல்லது ததஜ தாஇகள் அரைத்தனரா ?. கடந்த ரமலான் தொடர் உரையில் சகோ: பீஜே அவர்கள் பத்து நாட்கள் தெளிவுப்படுத்தி விட்டு 50 லட்சமும் பரிசு அறிவிக்கப்பட்டு அதை ஏற்று ஒருவர் தோற்கவும் செய்து விட்டார் மேட்டர் ஓவர்.  இதன் மூலமாக அரைத்து அவித்து கொடுத்து சாப்பிட்டு முடிந்தப் பின் மாவு அரைக்கப் போதவில்லை என்று பிதற்றுவது ஜமீல் அவர்களின் அறியாமையின் உச்சக்கட்டம் ?.

கொள்கையற்றவர்கள் யார் ?.
அடுத்தது இவர்கள் நம்மைப் பார்த்து கொள்கையற்றவர்கள் என்றுக் கூறுவதற்கு வெட்கப்பட வேண்டும்.

இவர்கள் பத்து பேர் இருந்து கொண்டு அதற்கு அமைப்பு என்று பெயர் வைத்துக்கொண்டுபல லட்சக்கணக்கான ஊறுப்பினர்ளைக் கொண்டு உலகம் முழுவதிலும் பல நூறு கிளைகளைக் கொண்ட மாபெரும் மக்கள் பேரியக்கத்தை கொள்கையற்றவர்கள் என்றுக் கூறுவது மல்லாந்து படுத்துக் கொண்டு வானை நோக்கி உமிழ்ந்ததாக கருதப்படாதா ?.

தவ்ஹீத் கொள்கையில் முக்கியமானது ஏகஇறைவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கலாகாது 
என்பது தலையாய அம்சம். சூனியத்தை எந்த வழியில் நம்பினாலும் இணைவைப்பில் சேரும் என்று பொட்டிலறைந்தாற்போல் ரமலான் தொடர் உரையில் விளக்கப்பட்டுள்ளது. அறிவின் பொக்கிஷம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஆறு மாதங்கள் யூதன் செய்த சூனியத்தால் அறிவை இழந்து முன்னுக்குப் பின் முரனாக பிதற்றிக் கொண்டிருந்தார்கள் என்றுக் கூறுவது தான் கொள்கையா ?.

1984ல் சூனியத்திற்கு எதிரான நம்பிக்கை 2014ல் சூனியத்திற்கு ஆதரவான நம்பிக்கையாக மாறியது எப்படி ?. இதன் மூலமாக தாருத்தவ்ஹீதுக்கு கூலிக்கு மாறடிக்க இலங்கை காரர்கள் வந்தார்களா ?. இலங்கை காரர்களுக்கு கூலிக்கு மாறடிக்க தாருத் தவ்ஹீத் களம் அமைத்தார்களா ?.

கடிதத்தில் ஸலாம் இல்லை.
அவர்களுக்கு பதில் எழுதிய கடிதத்தில் சில கடிதங்களில் ஸலாம் இருக்கிறது சில கடிதங்களில் இல்லை. ஒட்டு மொத்த கடிதங்களிலும் இல்லை என்பது பொய். இதை வைத்துக் கொண்டு நாம் ஸலாத்திற்கு எதிரானவர்கள் போன்ற தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்துவதற்கு முனைகின்றனர்.

தமிழகத்திலேயே முதல் முதலாக இந்த ஸலாத்தை கடிதங்களிலும் பரப்ப வேண்டும் என்றுக் கூறி ஏகஇறைவனின் சாந்தியும்சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாகஏகத்துவ சிந்தனையில் இக்கடிதம் உங்களை சந்திக்கட்டுமாக என்று கடிதங்களில் கூட ஸலாத்தையும்தவ்ஹீதையும் அழகிய முiறியல் அiஅமத்துப் பரப்பியது தவ்ஹீத் ஜமாத் தான் என்பதை உலகறியும்.
இஸ்லாம் கூறுகின்ற அனைத்து நற்செயல்களையும் தங்களுக்கும் நடைமுறைப்படுத்திக் கொண்டு மக்களுக்கும் ஏவுவதற்கு ஆர்வமூட்டியது இந்த தவ்ஹீத் ஜமாத் தான். இன்று இவர்கள் இந்த மேடையில் உட்கார்ந்து கொண்டு ஒன்றிரெண்டு குர்ஆன் -ஹதீஸை கூறுகின்றார்கள் என்றால் அதை இந்த ததஜவில்  இருந்து கற்றுக்கொண்டது தான்.

மஞ்சள் பத்திரிகைக்கு நிகரான அதிரை வவெத இணையதளம் ?,
இவர்களை அதிரை ததஜ இணையதளத்தில் மஞ்சள் பத்திரிகை ரேஞ்சில் எழுதி உள்ளதாகவும்பல இடங்களில் வால்போஸ்டர்கள் மூலம் சீண்டியதாகவும் இதனால் தான் விவாதத்திற்கு ஏற்பாடு செய்தது போலவும் ஒரு மாயையை தோற்றுவிக்கின்றனர்;. உண்மை அதுவல்ல ஜமீல் ததஜவுடன் ஒற்றுமையாக இருக்கும் போதே தாருத்தவ்ஹீதை ஆரம்பித்தார். 

எந்த சிறிய மனஸ்தாபமும் ஏற்படாமல் மாநில தலைமையுடன் நெருக்கமாக இருக்கும் போதே மாநில தலைமையின் அனுமதிப் பெறாமல் தனி அமைப்பு கண்டு அதில் நிகழ்ச்சிக்கு (சாரா கல்யாண மண்டபத்தில்) ஏற்பாடு செய்து மாநில தலைமையிலிருந்து தாஇக்களை கேட்டார்மாநிலத் தலைமை திட்டவட்டமாக மறுத்து விட்டது. அதில் ஜமீல் கடுப்பானார்.

1997ல் சகோ: அமீன் தலைமையில் நான் உட்பட அண்ணன் அவர்களை வைத்து ஏகத்துவ எழுச்சி மாநாடு நடத்தியபோது தாருத் தவ்ஹீதின் நகரச் செயலாளர் சகோ: தமிமுன் அன்சாரி அண்ணன் அவர்களை மரியாதை நிமித்தம் சந்திக்க வந்தார் அப்பொழுது அண்ணன் அவர்களுடன் நானும் இருந்தேன்.

அப்பொழுது அண்ணன் அவர்கள் நீங்கள் இவ்வாறு தவ்ஹீத் ஜமாத்திற்கு ஆதரவாளர்களாக இருந்துக் கொண்டு தனியாக அமைப்பு நடத்துவது சரி அல்ல என்று தமீம் அன்சாரி அவர்களிடம் அட்வைஸ் செய்தார்கள். ஏற்க மறுத்தனர் அது இன்று விபரீதமாக மாறியதை நான் காண்கினறேன். இவர்களுடைய இந்த அமைப்பை மாநிலத் தலைமை ஏற்றிருந்தால் இன்று இலங்கை சூனியகாரர்களுக்கு கூஜா தூக்கி இருக்க மாட்டார்கள்.

ஜமாலியாக மாறிய ஜமால்.
ஒரே நாளில் முடிய வேண்டிய ஒன்றுமில்லாத இந்த விவாதத்தை முடிய விடாதவாறு தடுத்துக் கொள்ளும் வேலை(?)யை ஜமால் கையிலெடுத்துக் கொண்டு ஜமாய்த்து விட்டார்.

கேட்டதற்கெல்லாம் தௌளத் தெளிவாக பதிலளித்தப் பின் சேக் அப்துல்லாஹ் ஜமாலி ஸ்டைலில் இன்ன இன்ன கேள்விகள் கேட்டோம் இதுவரை பதில் இல்லை என்று வெட்கப்படாமல் பொய் சொல்லிக் கொண்டே நான்கு நாட்களை இழுத்தடிப்பதற்கு துபாயிலிருந்து ஸ்பெஷலாக இவரை வரவழைத்துள்ளார் ஜமீல் அவர்கள்.

அரைத்த மாவை திருப்பி அரைப்பது யார் ?
ராஜேந்தர்தேவநாதன் மேடையில் ஏற்றியது எப்படி இதற்கெல்லாம் பதிலளிக்கப்பட்டு எத்தனை மாதங்கள்எத்தனை வருடங்கள் ஆகி விட்டன ?.

தங்களைப் பற்றி மட்டும் எங்காவது எழுதி இருக்கிறதா என்று நோட்டமிடுவது மட்டும் தான் அமைப்பு நடத்துபவர்களுக்கு அழகா ?. இவைகளுக்கு ஏற்கனவே பதிலளிக்கப்பட்டு விட்டன. இருந்தும் இதிலும் பதிலளித்து நேரம் வீணடிக்கப்பட்டுள்ளன. தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த வீணர்களுக்காக நான்கு நாட்கள் வீணடிக்கப்பட்டது மிகவும் வருத்தத்திற்குரியது.

கொள்யைற்றவர்களும்கையாளாகதவர்களும் இவர்கள் தான்.
இவர்கள் கையாளாகாதவர்கள்கொள்கையற்ற்வர்கள்நேர்வழி பொற்றபின் தடம் புரண்டவர்கள் உறுதியாக இவர்கள் தான் என்பதற்கு இவர்களுடைய கொள்கையை எடுத்துச் சொல்ல கூலிக்கு மாரடிக்க கடல் கடந்து இறக்குமதி செய்ததும்சூனியத்தை தாங்கிப் பிடித்ததும் தெளிவான சான்றுகள்.எங்கள் இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே!81 எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.3:8 திருக்குர்ஆனில் இடம் பெறும் இந்த துஆவை இவர்கள் அதிகமாக ஓத வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

சில நேரங்களில் அகிலங்களின் அதிபதியாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எதிரியைக் கொண்டே உண்மையை வெளிக் கொண்டு வந்து விடுவான். அவன் சூழ்ச்சி காரனுக்கெல்லாம் சிறந்த சூழ்ச்சிக் காரனல்லவா ?.
கூலிக்கு மாரடிக்க வந்தவர்களில்  ஒருவர் ஹூதைஃபா (ரலி) அவர்கள் அறிக்கக் கூடிய ஹதீஸை அறிவித்தார்.

பிந்தைய காலத்தில் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவனை நரகத்தில் அவர்கள் எறிந்துவிடுவார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்இந்த (மனிதர்களைச் சந்திக்கும்) நிலையை அடைந்தால் என்ன செய்ய வேண்டுமென்று எனக்குக் கட்டளையிடுகின்றீர்கள்என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பை)யும் அவர்களின் தலைவரையும் (இறுகப்) பற்றிக் கொள் என்று பதிலளித்தார்கள்.

அதற்கு நான், 'அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லாமல் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள் என்றால் என்ன செய்வது என்று கேட்டேன். ஆதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அந்தப் பிரிவுகள் அனைத்தையும் விட்டு விலகி  ஒதுங்கிவிடுஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்துஅதே நிலையில் மரணம் உன்னைத் தழுவிக் கொண்டாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் சேர்ந்துவிடாதே) என்று பதிலளித்தார்கள். என்று கடுமையான சப்தத்துடன் உணர்ச்சிப் பொங்கக் கூறினார்.

ததஜவிலிருந்து பாடம் பயின்று அதன் கூட்டமைப்பையும்அதன் தலைவரையும் பற்றிப் பிடிக்கால் தனியே பிரிந்து மக்களை நரக வாயிலை நோக்கி அழைக்கும் தாருத்தவ்ஹீதை தாங்கிப்பிடிக்க எப்படி இவர் கடல் கடந்து வந்தார்.

கொள்கையற்றவர்களுடன்கொள்கையற்றவர்கள்.
இவர்களுக்காகத் தான் அல்லாஹ்வின் தூதுர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால்அது அவர்களின் கழுத்தெலும்பை (தொண்டையை) தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச்சென்று விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் செல்வார்கள்...இவர்கள் மக்களிடத்திலே பிரிவினையை ஏற்படுத்தப் படுவார்கள் என்றும் எச்சரித்துக் கூறினார்கள். புகாரி 3610.

அதனால் அவர்களின் வெற்றுக் கூடாரத்தை நிரப்புவதற்கு ரஷாதி வியாதி இவர்களை பற்றிப் பிடித்துக் கொண்டது அதனடிப்படையில் தான் இந்த விவாத விளம்பரம்.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104.

Reported by Adirai Farook