/indian-express-tamil/media/media_files/2026/02/25/trump-2026-02-25-13-39-58.jpg)
ஈரான் - அமெரிக்கா இடையிலான பிரச்சனை தொடர்ந்து வலுப்பெற்று கொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அணுசக்தி தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதாவது, ஈரானிடம் அணுசக்தி இருக்கிறது. அதனால் ரஷ்யாவின் உதவியால், தன்னிச்சையாக அணு சக்தியை பயன்படுத்தி தனது மின்சார தேவை மற்றும் ஆயுத தேவையை பூர்த்தி செய்ய ஈரான் திட்டமிட்டு வருகிறது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, ஈரான் அணு சக்தியை வைத்துக்கொண்டு அணு குண்டை தயாரிக்கும். இது உலக நாடுகளுக்கு பெரும் ஆபத்து என்று எதிர்த்து வருகிறது. இப்படி நிலமை இருக்கையில் தான் உருவாக்கியிருக்கும் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என ஈரானை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஒருவேளை ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றாலோ, அல்லது ஒப்பந்த கையெழுத்துக்கு தாமதம் ஏற்படுகிறது என்றாலோ ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் டிரம்ப் மிரட்டியுள்ளார்.
இது வெறும் வாய் வார்த்தை தான் என்று நினைத்த நிலையில் ஈரான் அருகே தனது 2 சக்திவாய்ந்த விமானம் தாங்கி போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ளது அமெரிக்கா. டிரம்ப் லேசாக கண் அசைத்தால் போதும் ஈரான் மீது தாக்குதலை நடத்த அமெரிக்க போர்க்கப்பல்கள் தயாராக உள்ளது. இதுதான் சர்வதேச அளவில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
இதனால் ஈரானும் உச்சக்கட்ட பதற்றத்தில் இருக்கிறது. இந்த அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக 2 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் 2 நாடுகளுக்கு இடையே எந்த உடன்பாடும் எட்டவில்லை. தன்னை தற்காத்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஈரான், அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் நாங்களும் தாக்குதல் நடத்துவோம் என்று கூறியுள்ளது.
இந்நிலையில், ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய டிரம்ப், தெஹ்ரானை கடுமையாக சாடினார். போராட்டங்களின் போது 32,000 மக்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டார். மேலும், இந்த பிரச்சனைகளை தூதரக பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதே எனது விருப்பம். ஆனால் ஒரு விஷயம் உறுதி, உலகின் முதல் நிலை தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடாக இருப்பவர்களுக்கு அணு ஆயுதம் கிடைக்க நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார்.
source https://tamil.indianexpress.com/international/trump-says-will-never-allow-the-worlds-number-one-sponsor-of-terror-to-have-a-nuclear-weapon-11154134





