புதன், 25 பிப்ரவரி, 2026

நல்லக்கண்ணு மரணம்

 

nalla

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலர் நேரிலும் சமூக வலைதளத்தின் மூலமாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நல்லக்கண்ணு மறைவு குறித்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த 1-ஆம் தேதி நல்லக்கண்ணு உடல் நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 24-ஆம் தேதி சிகிச்சையின் போது அவரது உடல் நிலையில் ஏற்றத்தாழ்வுகள் இருந்து வந்தது. பல்துறை மருத்துவக் குழு தீவிர சிகிச்சையும் அதிதீவிர கண்காணிப்பையும் தொடர்ந்து வந்தனர். இன்று (பிப்.25) அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்து அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. 

அதி திவீர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால் நல்லக்கண்ணு இன்று பிற்பகல் 1.55 மணியளவில் நம்மை விட்டு பிரிந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மேலும், அவரது சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவக் குழுக்களுக்கும் தமிழக அரசுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-rajiv-gandhi-hospital-circular-about-nallakannu-death-11154779