/indian-express-tamil/media/media_files/2025/12/23/half-yearly-holidays-tamil-nadu-tn-school-holidays-special-classes-banschool-education-department-tn-2025-12-23-11-28-35.jpg)
தமிழகத்தில் அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கும் வரும் ஏப்ரல் 17-ந் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்ப்பட்டுள்ளது. மேலும் ஜூன்1-ந் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த கல்வி நிறுவனங்களில் லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இதில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை பொதுத்தேர்வு நடத்தப்பட்டு மாணவர்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் 2-ந் தேதி 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், மார்ச் 26-ந் தேதி இந்த தேர்வு நிறைவடைந்தது. அதேபோல் மார்ச் 11-ந் தேதி தொடங்கிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ந் தேதி நிறைவடைந்த நிலையில், தற்போது 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதேபோல், 6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ந் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், ஏப்ரல் 16-ந் தேதியுடன் தேர்வுகள் முடிந்து ஏப்ரல் 17-ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு கோடை விடுமுறை தினம் 45 நாட்கள் ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 17-ந் தேதி தொடங்கும் கோடை விடுமுறை மே 31-ந் தேதியுடன் நிறைவடைந்து ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் காலத்தில் பல பள்ளிகள் வாக்குச்சாவடி மையங்களாக மாற்றப்படுவது வழக்கம். அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள பள்ளி வளாகங்கள் தேவையாக இருப்பதால், தேர்வுகளை விரைவாக முடித்து விடுமுறை வழங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-government-announced-summer-holyday-for-school-students-update-in-tamil-11709580






/indian-express-tamil/media/media_files/2026/04/09/nawaf-salam-shehbaz-sharif-express-photo-2026-04-09-20-23-25.jpg)
/indian-express-tamil/media/media_files/2026/04/09/iran-2026-04-09-07-07-34.jpg)
/indian-express-tamil/media/media_files/2026/04/08/p-chidambaram-condemned-election-commission-for-transferring-the-state-chief-secretary-n-muruganandan-tn-election-2026-tamil-news-2026-04-08-23-00-10.jpg)
/indian-express-tamil/media/media_files/2026/01/09/gr-swaminathan-hc-2026-01-09-19-31-11.jpg)
/indian-express-tamil/media/media_files/2026/03/15/strait-of-hormuz-oil-blockade-2026-03-15-12-31-54.jpg)
/indian-express-tamil/media/media_files/2026/04/08/donald-trump-iran-two-week-ceasefire-deal-strait-of-hormuz-reopening-april-2026-2026-04-08-07-47-15.jpg)