வெள்ளி, 10 ஏப்ரல், 2026

லெபனான் மீது மீண்டும் குண்டு மழை: தாக்குதலை நிறுத்தச் சொல்லி பாகிஸ்தான் பிரதமருக்கு கோரிக்கை

 

லெபனான் மீது மீண்டும் குண்டு மழை: தாக்குதலை நிறுத்தச் சொல்லி பாகிஸ்தான் பிரதமருக்கு கோரிக்கை

Nawaf-Salam-Shehbaz-Sharif-express-photo

அமெரிக்கா ஈரான் இடையேயான போர் 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் லெபனான் மீதான தாக்குதலை மீண்டும் தொடங்கியுள்ளதால், போர் நிறுத்த உதவி கோரி லெபனான் பாகிஸ்தான் பிரதமரிடம் உதவி கேட்டுள்ளதாக அந்நாட்டு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. கடந்த பிப்ரவரி 28-ந் தேதி தொடங்கிய இந்த போர் உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், கச்சா எண்ணெய், எல்.பி.ஜி சிலிண்டர் விலை ஏற்றம் கண்டது. மேலும் உலகளவில் வர்த்தகம் ஆகும் கச்சா எண்ணெயின் 5 சதவீதம் செல்லும் போக்குவரத்தாக இருக்த ஹர்முஸ் ஜலசந்திரய ஈரான் அரசு மூடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஈரான் மூடிய ஹர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க உலக நாடுகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்த அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப், ஹர்முஸ் ஜலசந்தியை திறக்க கோரி ஈரானுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தார். அதே சமயம் ஈரான் மீதான தாக்குதல் தொடர்வதும், இதற்கு ஈரான் பதிலடி கொடுக்கப்பது வழக்கமாக நடந்து வந்தது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. சமீபத்தில் பாகிஸ்தான் அரசு இந்த விவகாரத்தில் தலையிட், 2 வாரங்களுக்கு போரை நிறுத்தி வைத்துள்ளது. 

இதனிடையே, ஈரான் மீது தாக்குதல் நடத்திய அதே நேரத்தில் இஸ்ரேல் லெபனான் மீதும் தாக்குதல் நடத்தியது. தற்போது ஈரான் மீதான தாக்குதல் நின்றுவிட்டாலும், லெபனான் மற்றும் அதன் மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், இந்த தாக்குதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இஸ்லாமாபாத்தின் ஆதரவை லெபனான் பிரதமர் நவாப் சலாம் கோரியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்புடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாகிஸ்தான் பிரதமரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஷெரீப் சலாமிடம் கூறுகையில், "பிராந்திய அமைதிக்காக பாகிஸ்தான் உண்மையான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது, அந்த உணர்வின் அடிப்படையில் தான் ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் கூட்டப்படுகின்றன என்று தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

09 04 2026 


source https://tamil.indianexpress.com/international/lebanons-pm-seeks-support-immediate-end-attacks-from-pakistan-update-in-tamil-11709752