ஹார்முஸ் ஜலசந்தி குறித்த பேச்சுவார்த்தை
/indian-express-tamil/media/media_files/2026/03/19/iran-considers-charging-toll-fees-for-ships-passing-through-strait-of-hormuz-2026-03-19-16-58-22.jpg)
கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இப்போரில் இதுவரை 3,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் ஈரானில் 1900-க்கும் அதிகமானோரும், லெபனானில் 1,200 பேர் மற்றும் இஸ்ரேலில் 19 பேர் அடங்குவர். மேலும், 13 அமெரிக்க வீரர்களும் உயிரிழந்துள்ளனர். தங்கள் நாட்டின் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் அமெரிக்க படைத் தளங்கள் உள்ள நாடுகள் மீதும் ஈரான் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் மூடியுள்ளதால், இந்தியா உட்பட பல நாடுகளில் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய ராணுவ தாக்குதலில் ஈரானில் 1,937 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 24,800 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலில் 24 பேரும் அமெரிக்க வீரர்கள் 13 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் போரால் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலியர்கள் 6,239 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் இதுவரை 1,268 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3,750 பேர் காயமடைந்துள்ளனர்.
பஹ்ரைனில் உள்ள அமேசானின் கிளவுட் கம்ப்யூட்டிங் மையம், ஈரானியத் தாக்குதலைத் தொடர்ந்து சேதமடைந்ததாக ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையின் அறிக்கை ஒன்று தெரிவித்தது. முன்னதாக, அந்த வளைகுடா நாட்டின் உள்துறை அமைச்சகம், கூடுதல் விவரங்கள் எதையும் அளிக்காமல், "ஈரானிய ஆக்கிரமிப்பு" என்று அது விவரித்ததன் காரணமாக நிறுவனத்தின் மையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க குடிமைப் பாதுகாப்புப் படைகள் பணியாற்றி வருவதாகத் தெரிவித்திருந்தது.





