வியாழன், 2 ஏப்ரல், 2026

அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 1,937 பேர் பலி; 24,800 பேர் காயம்

 

அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 1,937 பேர் பலி; 24,800 பேர் காயம்

iran

அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 1,937 பேர் பலி; 24,800 பேர் காயம்

கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இப்போரில் இதுவரை 3,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் ஈரானில் 1900-க்கும் அதிகமானோரும், லெபனானில் 1,200 பேர் மற்றும் இஸ்ரேலில் 19 பேர் அடங்குவர். மேலும், 13 அமெரிக்க வீரர்களும் உயிரிழந்துள்ளனர். தங்கள் நாட்டின் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் அமெரிக்க படைத் தளங்கள் உள்ள நாடுகள் மீதும் ஈரான் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் மூடியுள்ளதால், இந்தியா உட்பட பல நாடுகளில் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, ஈரானுடன் தொடர்பில் இருப்பதாகவும், இந்த மோதலுக்கான தீர்வு மிக அருகில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஈரான் தங்கள் நாட்டின் மீதோ அல்லது உள்கட்டமைப்புகள் மீதோ நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலுக்கும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.  குறிப்பாக, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), ஏப்ரல் 1 முதல் இப்பகுதியில் செயல்படும் அமெரிக்காவுடன் தொடர்புடைய நிறுவனங்களைக் குறிவைக்கத் தொடங்குவோம் என்று அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள், இன்டெல், ஐபிஎம், டெஸ்லா மற்றும் போயிங் போன்ற முக்கிய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

கடல்வழிப் போக்குவரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க எடுக்கும் முயற்சி போரை நீட்டிக்கக்கூடும் என்பதால், அது மூடப்பட்டிருந்தாலும் போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. அதேவேளையில், இந்த பாதை திறக்கப்படாவிட்டால் ஈரானின் எண்ணெய் மற்றும் எரிசக்தி மையங்கள் தாக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். இதற்கிடையில், சீனா மற்றும் பாகிஸ்தான் இணைந்து இப்பகுதியில் அமைதியை மீட்டெடுக்க 5 அம்சத் திட்டத்தை முன்மொழிந்துள்ளன. இந்நிலையில், தி டெலிகிராஃப் பத்திரிகைக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், ஈரான் மீதான போரில் சேரத் தவறியதைத் தொடர்ந்து, நேட்டோவிலிருந்து அமெரிக்காவை வெளியேற்றுவது குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து இருக்கிறார்.

2 4 2026 


source https://tamil.indianexpress.com/india/iran-israel-america-war-today-news-live-updates-in-tamil-11441638