புதன், 22 ஜனவரி, 2014

மருத்துவக் கட்டுரை மயக்கம்



                                                 டாக்டர் ஜி . ஜான்சன்
          நாம் அனைவருமே எப்போதாவது மயக்கம் அடைந்திருக்கலாம். அதனால் மயக்கம் என்பது என்ன என்பதை நாம் உணர்ந்துள்ளோம்.            சிலருக்கு சில நிமிடங்கள் மயக்கம் ஏற்பட்டிருக்கலாம். சிலருக்கு சில மணி நேரங்கள் மயக்கம் நீடிக்கலாம்.சிலருக்கு எந்த விதமான நோய்கள் இல்லாமலும் மயக்கம் வரலாம். சரியான நேரத்தில் உணவு உணவில்லையெனில் மயக்கம் வரலாம். போதிய உறக்கம் இல்லாமலும் மயக்கம் வரலாம். அல்லது அளவுக்கு அதிகமாக உண்டபின்னும் மயக்கம் உண்டாகலாம். அதிக வேலை, களைப்பு , மன உளைச்சல் காரணமாகவும் மயக்கம் ஏற்படலாம். இவை அனைத்தும் நோய்கள் இல்லாவிடினும் உடல் தொடர்புடைய மயக்கங்கள்.


இதுபோல் உள்ளம் தொடர்புடைய மயக்கமும் உள்ளது.

அழகையும் இயற்கையின் எழிலையும் கண்டு மயங்குகிறோம். கலைஞன் ஓவியம், சிற்பம் , கவிதை, பாடல் என கலை அம்சங்களில் மயங்குகிறான். படைப்பாளன் படைப்பிலக்கியங்களில் மனதைப் பறிகொடுத்து மயங்குகிறான்.

காதலர்கள் காதலில் கட்டுண்டு மயங்குகின்றனர்.

கண்ணன் மீது காதல் கொண்ட ராதை மயங்கி நின்றதாக கீதகோவிந்தம் இவ்வாறு கூறுகிறது.

கேசவா ! நீ மறைந்து நிற்கிறாய் ! அவள் மயங்கி நிற்கிறாள் ! ” இந்த மயக்கம் இனிமையானது. இதற்கு மருந்து தேவை இல்லை!

ஆனால் மருத்துவ ரீதியான மயக்கம் வேறு வகையானது. இது பல்வேறு காரணங்களால் உண்டாவது.

மயக்கம் , தலை சுற்றல் , கிறுகிறுப்பு என்பதும் என்பதெல்லாம் ஒன்றுதான்.

மயக்கத்தை dizziness , giddiness என்பர் . மயக்கம் வந்து நினைவு இல்லையேல் அதை fainting என்பர்.

வயது முதிர்ந்தவர்களுக்கு அடிக்கடி மயக்கம் வருவது இயல்பு. பெண்களுக்கும் அதிகமாகவே மயக்கம் வருவதுண்டு.

நமது உடல் சமநிலையில் இல்லாவிடில் மயக்கம் உண்டாகும். இந்த சமநிலை உணர்வை மூளைக்கு உணர்த்துவது காதுகளின் உள்ளேயுள்ள வெஸ்ட்டிபுல்லார் லேபிரின்த் ( vestibular labyrinth ) என்ற உறுப்பு. நமது சுற்றுச் சூழலைப் பற்றிய தகவல்கள் இதன்மூலமே மூளைக்கு கொண்டு செல்லப் படுகிறது.

உடலின் தொடு உணர்ச்சியையும், மூட்டுகளின் செயல்பாட்டையும் பற்றிய செய்திகளைக் கொண்டு செல்பவை சோமோட்டோசென்சரி ஆஃப்பரன்ட்ஸ் ( somatosensory afferents ) என்ற நரம்புகள். இவை முதுகுத் தண்டு நரம்புகள் ( spinal cord ) வழியாக மூளைக்கு செல்கின்றன.

இத்தகைய வெளி உணர்வுகள் மூளையில் உள்ள வெஸ்ட்டிபுளார் நியூக்ளியஸ் ( vestibular neucleus ) என்ற

பகுதியை வந்தடைகின்றன . இது சிறு மூளை, எக்ஸ்ட்ரா பிரமிடல் சிஸ்டம் ( extra pyramidal system ) என்ற மூளைப் பகுதியுடன் தொடர்புடையவை.

இங்கிருந்து உள் உணர்வுகள் கண்களைச் சுற்றியுள்ள தசைகளுக்கும் , கழுத்து, கால்கள் பகுதிகளுக்கும் நரம்புகள் வழியாகச் செய்திகள் அனுப்புகின்றன.

இவ்வாறு வெஸ்ட்டிபுளார் சிஸ்டம் என்ற அமைப்பு இரண்டு வகையான செயல்களில் ஈடுபடுகிறது. அவையானவை:

* தலையை அசைக்கும்போதும் , திருப்பும்போதும் , பார்வையை அதற்கு ஏற்ப சம நிலைக்கு கொண்டு வருகிறது. உதாரணமாக நடந்துகொண்டே படிக்க முடிகிறது.

* உடல் அசைவின்போது கீழே விழுந்து விடாமல் சம நிலையில் இருக்க உதவுகிறது.

இத்தகைய மிகச் சிக்கலான அமைப்பில் எங்கேயாவது குறைபாடு உண்டானால் சம நிலை பாதிப்புக்கு உள்ளாகி தலை சுற்றலும் மயக்கமும் ஏற்படுகிறது.

சில உதாரணங்கள் வருமாறு :

* வயதானவர்களுக்கு பார்வை குறைவு காரணமாக உண்டாகும் மயக்கம் .

* நீரிழிவு நோயாளிகளுக்கு நரம்புகள் பாதிப்பு காரணமாக உண்டாகும் மயக்கம் .

* தலை, காது பகுதியில் அடி பட்டால் உண்டாகும் மயக்கம்.



மயக்கம் வருவதற்கு 3 முக்கிய காரணங்கள் கூறலாம் :

* காது தொடர்புடையது ( otological )

* மூளை தொடபுடையது ( neurological )

* பொது மருத்துவ காரணங்கள் ( general medical )

1. காது தொடர்புடையவைநடுக் காது பிரச்னை

* காயம் ( trauma )

* நீர்க் கசிவு ( discharge )

* கட்டிகள் ( tumours )

சுற்றுவட்ட வெஸ்ட்டிபுலார் குறைபாடு -

லேபிரந்த் வீக்கம்

காயம்

இரத்தக் குறைவு

மூளையைச் சுற்றியுள்ள திரை வீக்கம்

Benign paroxysmal positional vertigo – இந்த வகையான தலை சுற்றுதல் வெர்ட்டைகோ என்பது பலருக்கு உண்டாவதாகும். இது ஏற்பட சில காரணங்கள்:

தலையில் அடிபடுதல்

இரத்த ஓட்டத்தில் தடை

வைரஸ் கிருமிகள் தொற்று

ஒற்றைத் தலைவலி

Meniere’s syndrome எனும் தலை சுற்றும் குறைபாடு

2 .மூளை தொடர்புடைய காரணங்கள் -

நரம்பு கட்டிகள்

மூளைக் கட்டி

வலிப்பு நோய்

ஒற்றைத் தலைவலி

மது , மருந்துகள்

multiple sclerosis எனும் நோய்



3. பொது மருத்துவக் காரணங்கள் -

குறைவான இரத்த அழுத்தம்

நீரிழிவு நோய்

காதுகளில் இரைச்சல்

இரத்த சோகை

இருதய வீக்கம்

இருதய வால்வு நோய்கள்

இருதயத்திலிருந்து குறைவான இரத்த வெளியேற்றம்

குறைந்த இனிப்பு

தொடர்ந்த களைப்பு

இதர நோய்கள்

ஆகவே மயக்கம் உண்டாவது இவ்வளவு சிக்கல் நிறைந்ததா என்பதைக் காணும் நமக்கும் மயக்கம் வருகிறதல்லவா?

இஸ்லாத்தை நோக்கி திரும்பும் உலகம்!






 ஸ்கேன் செய்யும் மையங்களிலும், ஆண் டாக்டர் பரிசோதனை செய்யும் போதும் பெண்ணுடன் ஆண் டாக்டரோ அல்லது ஸ்கேன் செய்யும் பொறுப்பாளர்களோ தனித்து இருக்கக்கூடாது. அவர்களுடன் கூட ஒரு நபரோ அல்லது ஒரு பெண் செவிலியரோ அல்லது பெண் நோயாளியின் உதவியாளரோ இருக்க வேண்டும் என்று கடந்த வாரம் புதிய கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன.

 ஒரு அந்நிய ஆணும், அந்நிய பெண்ணும் தனித்திருக்கக்கூடாது. அவ்வாறு அவர்கள் இருவரும் தனித்திருந்தால் மூன்றாவதாக அங்கே ஷைத்தான் இருக்கின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன பொன்மொழியை உண்மைப்படுத்தும் விதமாக இந்த சட்ட திட்டத்தை அதிகாரிகள் மிக தாமதமாக போட்டுள்ளனர்.

 இஸ்லாமிய சட்டதிட்டங்கள் பிற்போக்கானவை, பெண்ணடிமைத்தனத்தை போதிக்கக்கூடியவை என்று என்னதான் இவர்கள் அவதூறு சுமத்தினாலும் கடைசியில் இஸ்லாத்தை நோக்கி திரும்புவதுதான் இவர்களது பிரச்சனைகளுக்கு இறுதி தீர்வு என்பதை வல்ல இறைவன் கண்முன்னால் காட்டிக் கொண்டிருக்கின்றான்.

 இப்படி உலகமே இஸ்லாத்தை நோக்கி திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை !

வெள்ளி, 17 ஜனவரி, 2014

கவுட் Gout மூட்டு நோய்



 டாக்டர் ஜி. ஜான்சன்


          கவுட் என்பது வினோதமான ஒருவகை எலும்பு நோய். இதற்கு ஒரு சொல்லில் தமிழில் பெயர் இல்லை. ஆகவே கவுட் என்றே அழைப்பது சுலபம். இதை மூட்டு வீக்கம் என்றும் கூறலாம்.           மூட்டுகளிலும் , காதுகளிலும், வேறிடங்களிலும் உள்ள குருத்தெலும்புகளில் சோடியம் பையூரேட் படிந்து ஏற்படும் ஒருவகை வளர்சிதை மாற்றக் கோளாறு கவுட்.


இதனால் கால் கட்டை விரல், கணுக்கால், முழங்கால் மூட்டுகள் வீங்கி கடும் வலி உண்டாகிறது இந்த வீக்கமும் வலியும் எந்தவிதமான முன் அறிவிப்புமின்றி திடீரென்று இரவில் தோன்றி .பெரும் வேதனையை உண்டுபண்ணிவிடும். ஒரு சிலரால் நடக்கவும் முடியாது. சரியான சிகிச்சை பெற்றால் சில நாட்களில் வீக்கமும் வலியும் குறைந்துவிடும். ஆனால் மீண்டும் எப்போதாவது வரும்.

பத்து பேர்களில் ஒன்பது பேர்கள் நடுத்தர வயதுடைய ஆண்களாக இருப்பர். இவர்களின் பரம்பரையில் வேறு யாருக்காவது கவுட் இருக்கலாம். பெண்களிடம் இது உண்டாவது மிகவும் குறைவு. அதைவிட பிள்ளைகளிடம் காண்பது இன்னும் குறைவு. ஆண்களில் அதிகமான உடல் பருமன் உடையோர், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கவுட் வரும் வாய்ப்பு அதிகம் இருக்கலாம்.

        கவுட் என்பது ஒருவகையான மூட்டு அழற்சி ( Arthritis ) நோய்தான். அதிர்வை அல்லது எரிச்சலை உண்டுபண்ணும் உப்புவக்கை படிமங்கள் மூட்டு இடுக்குகளில் படிவதற்கு எதிராக உடல் செயல்படுவதால் உண்டாகும் மூட்டு வீக்கமும் வலியுமே கவுட். ( Gout is actually a form of arthritis, specifically, it is the body’s reaction to irritating crystalline deposits in the space between the bones in a joint )

இப்படி வீக்கமும் வலியும் கடுமையாக இருந்தாலும் சிகிச்சையில் இது நல்ல குணமாகிறது. சிலருக்கு உணவுக் கட்டுப்பாட்டிலேயே சரியாகிறது. வேறு சிலருக்கு நீண்ட நாட்கள் சிகிச்சையும் தேவைப்படும்.

நீண்ட நாட்கள் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் கைகள், கால், காது பகுதிகளில் கடினமான தடிப்புகள் உள்ளதைக் காணலாம். இதை டோப்பை ( tophi ) என்று அழைப்பதுண்டு. இவை யூரிக் அமில படிமங்கள். இவை வலியையும் , கடின உணர்வையும் உண்டுபண்ணும்.

இதுபோன்று இவை சிறுநீரகத்தில் படிந்தால் அங்கு கற்கள் உற்பத்தியாகும் .

கவுட் மூட்டு நோய்க்கான காரணங்கள்
          இரத்தத்தில் அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம் ( Uric Acid ) இருப்பது.முக்கிய காரணமாகும்.
            இந்த அமிலம் உணவு ஜீரணிப்பதற்கு உதவுவது. இது சிறுநீரகத்தால் கழிவுப் பொருளாக வெளியேற்றப்படுகிறது.
உடலில் இந்த அமிலம் அதிகம் உற்பத்தி ஆனாலோ, அல்லது குறைவாக வெளியேற்றப்பட்டாலோ அது மூட்டுகளில் சோடியம் யூரேட் உப்பாக பதிந்து வீக்கத்தையும் வலியையும் உண்டுபண்ணுகிறது.
           கவுட் உருவாகும் தன்மை சரிவர தெரியாவிட்டாலும் , அடிபடுதல், காயம், அறுவைச் சிகிச்சை, மன உளைச்சல், மது, சில மருந்துகள் போன்றவை இது உருவாவதைத் துரிதப்படுத்துகின்றன. சில கட்டிகள், புற்று நோய் போன்றவற்றிலும் கவுட் ஏற்பாடலாம். அதோடு சிறுநீரக வியாதி, இரத்தச் சோகை, சொரியாசிஸ் தோல் வியாதியிலும் கவுட் உண்டாகலாம்.

                                       பரிசோதனைகள்

         இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு முக்கிய பரிசோதனையாகும். ஆனால் சில வேலையில் இது அதிகம் இருந்தாலும் கவுட் இல்லாமல் இருக்கலாம். வலி வந்தபின் அதன் அளவு குறைவாகவும் இருக்கலாம். இதை நிச்சயப்படுத்த எக்ஸ்ரே படம் தேவைப்படும். அல்லது வீக்கமுற்ற மூட்டு நீர் எடுத்து பரிசோதனை செய்து பார்க்கலாம்.

            சிகிச்சை முறைகள்

கவுட் மூட்டு வீக்கம் கடும் வலியைத் தருவதால் வலியைக் குறைப்பதே சிகிச்சையின் முதல் நோக்கமாகும். பாதிக்கப்பட்ட பகுதியில் துணி பட்டால்கூட வலிக்கும். ஆகவே அப்பகுதியில் கட்டு போடவேண்டிய அவசியம் இல்லை.

வலி நிவாரன மாத்திரைகள் உடன் உட்கொள்ளலாம். அவற்றில் NSAID ( Nonsteroidal anti- inflammatory drugs ) வகையானவை பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக Ibuprofen மாத்திரை அதிகம் பயன்படுத்தலாம். ஆஸ்பிரின் மாத்திரைகளைத் தவிர்க்கவேண்டும். அது யூரிக் அமில வெளியேற்றத்தைக் குறைக்கிறது.

ஆரம்ப கடும் வலியைக் குறைத்தபின் , உடலின் யூரிக் அமிலத்தைக் குறைக்கும் முயற்சியை மேற்கொள்ளலாம்.

பல நூற்றாண்டுகளாக Colchicine எனும் மருந்து பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது வீக்கத்தையும் வலியையும் குறைக்கிறது.

      உடலில் உற்பத்தியாகும் யூரிக் அமிலத்தைக் குறைக்க Allopurinol என்ற மருந்து மாத்திரையாக பயன்படுத்தலாம். ஆனால் இதை வலி உள்ளபோது உட்கொள்ளாமல் வலி நின்றபின் தடுப்பு முறையில் தினமும் உட்கொள்ளவேண்டும். அரிப்பு, தலைசுற்றல், குழப்பம் போன்ற பக்கவிளைவுகள் இதில் உள்ளன.

Probenecid, Sulfinpyrazone போன்றவை அதிகமான யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவினாலும், பக்கவிளைவுகள் அதிகம் உள்ளவை.

உடலின் யூரிக் அமிலத்தின் அளவை சம நிலையில் வைத்திருக்க சில புரோதச் சத்து அதிகமுள்ள சில உணவுவகைகளைத் தவிர்க்கவேண்டும். அவற்றில் யூரிக் அமிலத்தை உற்பத்தி செய்யும் பூரின் என்பது அதிகம் உள்ளது. அவை உறுப்புகளின் இறைச்சி ( organ meats ), இறால், நண்டு, கணவாய், கொழுப்பு மீன் வகைகள், சார்டின் மீன் வகைகள், பசலைக் கீரை வகைகள் ( spinach ) , தண்ணீர்விட்டான் கிழங்கு ( aspara gus ) அவரை வகைகள், கடலை வகைகள் .

மது அருந்துவோர் கட்டாயமாக அதை உடன் நிறுத்தவேண்டும். யூரிக் அமில வெளியேற்றத்தைத் தடை செய்கிறது.

நிறைய நீர் பருகுவது மிகவும் நல்லது!

    The price of high living

” The old image of gout sufferer as a rotund, aging aristocrat, surrounded by roast beef and flagons,of ale, swollen foot propped on a cushion, was’t entirely mythical.While gout isn’t simply a sign of ” high living ” and can occur anytime in adulthood, we now know that rich foods and alcohol can contribute to the real cause of gout and will certainly aggravate the disease after the initial attack ”

Hadis


சிலருக்குக் காற்றுப் பிரியாவிட்டாலும் காற்றுப் பிரிந்தது போன்ற உணர்வு ஏற்படும். அல்லது சிறுநீர் ஓரிரு சொட்டுக்கள் இறங்கி விட்டது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால் ஆடையில் அதற்கான எந்த அடையாளமும் இருக்காது. இவர்கள் அதற்காக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. திட்டவட்டமாகத் தெரிந்தால் மட்டுமே உளூ நீங்கி விட்டதாக முடிவு செய்து கொள்ள வேண்டும்.

 'தொழும் போது ஏதோ ஏற்படுவதாகத் தனக்குத் தோன்றுகிறது' என்று ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், '(காற்றுப் பிரியும்) சப்தத்தைக் கேட்காமல், அல்லது அதன் நாற்றத்தை உணராமல் தொழுகையை விட்டுச் செல்ல வேண்டாம்' என்று பதிலளித்தார்கள்.

 அறிவிப்dis பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)
 நூல்கள்: புகாரீ 137, முஸ்லிம் 540

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 நான்கு நோக்கங்களுக்காக ஒரு ‪#‎பெண் மணமுடிக்கப்படுகிறாள்.

 1. அவளது செல்வத்திற்காக.
 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
 3. அவளது அழகிற்காக.
 4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக.

 ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!

 அறிவிப்பவர்: அபூஹுரைரா (-) நூல்: ‪#‎புகாரி 5090


சனி, 11 ஜனவரி, 2014

Mk city - Masjid Rahman




Islam - தவ்பா



மறுப்போரை விட்டு வைத்திருப்பது பாவங்களை அதிகப்படுத்துவதற்காகவே !.


மறுமை கண்டிப்பாக உண்டு, மறுமை நாளின் போது நீதியாளன் அல்லாஹ் நியாயத் தீர்ப்பு வழங்குவான்.

அதில் உலக ரட்சகன் அல்லாஹ்வைத் தவிற யாருமில்லை என்று உறுதியாக நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தோரை சுவனத்தைக் கொண்டு கண்ணியப்படுத்துவான்.

அவனை மறுத்த கூட்டத்தாருக்கு அல்லது அவனுடன் இன்னும் பலரை இணை கற்பித்தக் கூட்டத்தாருக்கு நரகைக் கொண்டு இழிவு படுத்துவான்.
அவர்களுக்கு நரகத்தை உறுதி படுத்தவதற்காக இறைமறுப்பை அல்லது இணை கற்பித்தலை மேலும் அதிகபடுத்திக் கொள்வதற்காக இறைவன் உலகில் விட்டு வைத்திருக்கின்றான்.

அவர்கள் உலகில் சுகபோக வாழ்க்கை வாழ்வது அவர்களது இறைமறுப்பு சரியானது தான் என்று எண்ணிட வேண்டாம் என்பதை விளக்கும் வசனம்.



அனைத்து நேரங்களிலும்.

உறங்கச் செல்வதற்கு முன் அல்லாஹ்வை நினைத்து அவனிடம் பாதுகாப்புக் கோரி பிரார்த்தித்து விட்டு அவனுடைய பெயரைக் கூறி உறங்குகிறோம்.


அதே போல் உறக்கத்திலிருந்து எழுந்ததும் (சிறு மரணத்திலிருந்து) உயிர் கொடுத்த இறைவனுக்கேப் புகழ் அனைத்தும் என்றுக் கூறி அவனுக்கு நன்றி தெரிவித்து விட்டேப் படுக்கையை விட்டு எழுகிறோம்.

கழிவறைக்கு செல்லும் முன் ஷைத்தானுடைய தீய சிந்தனைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கேட்டவர்களாக நுழைகிறோம்.
கழிவறையை விட்டு வெளியேறியதும் அவனிடம் பாமன்னிப்புத் தேடியவர்களாக வெளியேறுகிறோம்.

அதனை அடுத்து அதிகாலை (ஃபஜ்ரு) தொழுகையை தொழுது விட்டு அல்லாஹ்வை நினைவு கூறுவதுடன்இ நமது தேவைகளையும் அவனிடம் கேட்டு விட்டே பள்ளியை விட்டு வெளியாகிறோம்.

உணவுக்கு முன் அல்லாஹ்வுடைய திருப்பெயர் கூறியப் பின்னரே உண்ணத் தொடங்குகிறோம்.

உண்டு முடித்ததும் அவனைப் புகழ்ந்து நன்றிக் கூறி விட்டே உண்ணுமிடத்தை விட்டு எழுகிறோம்.

வீட்டை விட்டு வெளியேறும் போது அல்லாஹ்விடம் பொறுப்பு சாட்டிவிட்டு வெளியேறுகிறோம்.

மீண்டும் வீட்டுக்குத் திரும்பியதும் அவனின் பொருட்டால் நலமுடன் திரும்பியதை நினைத்து நன்றிக் கூறுகிறோம்.

இவ்வாறு பொழுது புலர்ந்ததிலிருந்து பொழுது அடையும் வரையில் அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். என்ற அல்லாஹ்வின் கூற்றுக்கேற்ப நாள் முழுதும் இறைநினைவுகளில் மூழ்கித் திளைக்கின்றோம்.

சிந்திக்கத்தூண்டும் வானமும், பூமியும்.

பூமியில் தான் மனிதன் வசிக்கிறான், தனது குடியிருப்பை அமைக்கிறான் அந்த குடியிருப்பின் மீதும், மனிதர்கள் மீதும் இன்னும் பிற உயிரினங்களின் மீதும் புறஊதாக் கதிர்கள்இ விண் கற்கள் போன்றவை விழுந்து அழிவை ஏற்படுத்தாமல் வானமே முகடாக அமைந்து பாதுகாக்கிறது.

இன்னும் வானம் மழையை பொழிவித்து, பூமி தானியங்களை விளைவித்து மனிதர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது.

இது போன்ற எண்ணற்ற நன்மைகள் வானங்களும், பூமியும் படைக்கப்பட்டதில் இருப்பதை சிந்திக்கனிறோம்.

அதனால் இவைகள் கன்டிப்பாக வீணாக படைக்கப்பட வில்லை என்பதை சிந்தித்து உணருகிறோம்.

இன்னும் வானங்களும், பூமியும் படைக்கப்பட்டது சாதாரண காரியமா ?.
இதை இறைவனல்லாது வேறு எவராலும் படைக்க முடியுமா ?.
என்றும் சிந்திக்கின்றோம், அதனால் அவனைப் போற்றிப் புகழ்கின்றோம்.

இவ்வாறு இன்னுமுள்ள அல்லாஹ்வின் ஏனைய படைப்புகளையும் அதிகம் சிந்திப்பதன் மூலமாக இறைநம்பிக்கை மேலும், மேலும் வலுப்பெறும்.

நரகிலிருந்து பாதுகாவல்.

எந்தப் பரிந்துரையும் பயன் தர முடியாத இறுதித் தீர்ப்பு நாளில் நரகம் தீர்ப்பாக அமைந்து விட்டால் நம்மை அதிலிருந்து அங்கே காப்பது யார் ?. எது ?. யாருமில்லை, எதுவுமில்லை, அல்லாஹ்வைத் தவிற. !.

அதனால் உலக வாழ்க்கையில் நமது அன்றாடக் காரியங்களில் அல்லாஹ்வை நினைவு கூறுவதுடன், அவனுடைய படைப்புகளை சிந்தித்து அவனைப் போற்றிப் புகழ்வதுடன்

இறiவா ! எங்களை நரக வேதனையிலிருந்து காப்பாயாக ! என்ற துஆவையும் சேர்த்துக் கூற வேண்டும். சேர்த்துக் கூறும் படியே அல்லாஹ் மேற்காணும் வசனத்தில் கட்டளையிடுகிறான்.

அல்லாஹ்வை அவனுடைய ஆற்றலுக்கேற்றவாறு புகழ்ந்து விட்டே நமது தேவைகளை கேட்க வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி இருப்பதையும் இந்த வசனம் உறுதிப் படுத்துகிறது.

எழுதியபடி நானும், வாசித்தப்படி நீங்களும் அமல் செய்யும் நன்மக்களாக வல்ல அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவாயாக !




அணாதைகளின் சொத்துக்களுக்கு ஆசைப்படக் கூடாது.

அதிகம் விளக்கத் தேவை இல்லாத அளவுக்கு இந்த வசனமே விளக்குகிறது.


மரணம் திடீரென நிகழ்ந்து விடும் காரணத்தால் பலர் தங்களது சொத்துக்களை முறையாக பிரித்து வாரிசுகளுக்கு எழுத முடியாமல் போயிருக்கலாம்.

எதாவது ஒரு விபத்து அல்லது மதக் கலவரம் போன்றவற்றில் தாயையும், தந்தையையும் இழந்து அனாதை ஆகி இருக்கலாம். ஆனால் சொத்துக்களை விட்டு மரணித்திருப்பர்.

அந்த சொத்துக்களை விட்டுச் சென்றவர்களின் வாரிசுகளுக்கு அல்லாஹ்வை பயந்து முறையாக கொடுத்து விட வேண்டும்.

இது போன்ற இன்னும் வேறு வழிகளில் அனாதைகளின் சொத்துக்களோ, பணமோ, நகைகளோ இருந்தால் அவைகளையும் அவர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும். அல்லாஹ் மிக அறிந்தவன்.


பொற்குவியலையே கொடுத்திருந்தாலும் திரும்ப கேட்கக் கூடாது.

விவாகரத்து செய்து விட்டால் முஸ்லீம்கள் அப்படியே கழட்டி விட்டு விடுகின்றனர் விவாகரத்து செய்த பெண்ணுக்கு எதிர்காலத்திற்காக எதையும் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டை இஸ்லாத்தை மனமுரண்டாக எதிர்ப்பவர்கள் வைக்கின்றனர்.


ஆனால் திருமனத்திற்கு முன் மனைவிக்காக கணவன் பணமோ, நகைகளோ, நிலபுலன்களோ எதை சேர்த்துக் கொடுத்திருந்தாலும் விவாகரத்து செய்து விட்டால் அதை அப்படியே அவளிடமே விட்டு விட்டே வெளியேறச் சொல்கிறது இஸ்லாம். அது கணக்கிட முடியாத சொத்துக்களாக இருந்தாலும் சரியே.

எதையும் கணவன் கொடுத்திருக்க வில்லை என்றால் என்ன செய்வது என்ற கேள்வியும் எழலாம் ?.

இவ்வாறான சூழ்நிலை உருவாகி விடக் கூடாது என்பதற்காகத் தான் மஹர் தொகையை மணமகனிடமிருந்து முன்கூட்டியே பேசி பெற்றுக்கொண்டப் பின்னரே திருமணத்திற்கு பெண்களை சம்மதிக்கச் சொல்கிறது இஸ்லாம்.

அதை அவர்கள் தங்களுக்கு மறுமணம் முடிக்கும் வரை செலவுக்கு வைத்துக் கொள்ளலாம்.

மறுமணம் முடித்துக் கொள்ள ஆணுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளதைப் போல் பெண்ணுக்கும் வழங்கப்பட்டுள்ளதால் புதிய கணவனிடமிருந்து அவர்கள் வாழ்வாதாரத்தை தொடங்கலாம்.

ஆண்களை விட பெண்களுக்கே இஸ்லாம் கூடுதல் பாதுகாப்பு வழங்கி உள்ளதை மேற்காணும் ...அவளுக்கு ஒரு குவியலையே கொடுத்திருந்தாலும் அதில் எதையும் பிடுங்கிக் கொள்ளாதீர்கள்!... என்ற வசனம் சான்றாக இருக்கிறது.



சகிப்புத் தன்மை.

நம்பிக்கை கொண்டோரே! சகித்துக் கொள்ளுங்கள்! சகிப்புத் தன்மையில் (மற்றவர்களை) மிகைத்து விடுங்கள்! உறுதியாக நில்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள். திருக்குர்ஆன்.3:200


இறைநம்பிக்கையாளர்களாகிய நாம் (அல்லாஹ் ஒருவனே என்றக் கொள்கையின் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதால்) எத்தனையோ சோதனைகளை சந்திக்கின்றோம். (சந்திக்காமல் ஷைத்தான் விட மாட்டான்).

அதைக் கண்டு மனம் தளர்ந்து விடக்கூடாது.
மனம் தளருவது உடல் நலத்தை பாதிக்கும்.
உடல் நல பாதிப்பு உள்ளத்தை பாதிக்கும்.
உள்ளத்தின் பாதிப்பு இறைநம்பிக்கையை பாதிக்கச் செய்யும்.

இத்தனை சிரமங்களை மேற்கொள்கிறேனே நான் அனுபவிக்கும் சிரமங்கள் நான் வணங்கும் இறைவனுக்கு தெரியாமலா இருக்கும் ?.

ஏன் அதிலிருந்து என்னை என் இறைவன் காக்க வில்லை ?.

என்ற சிந்தனையை ஷைத்தான் உள்ளத்தில் விதைப்பான் இது தான் இறைநம்பிக்கையை ஆட்டம் காணச் செய்யும் செயல். நவூதுபில்லாஹ்- இதிலிருந்து அல்லாஹ் நம்மைக் காக்க வேண்டும்.

சிரமங்களை சகித்துக் கொள்ள வேண்டும் தடம் புரண்டு விடக் கூடாது என்று உறுதியான எண்ணம் கொள்வாரோ அவருடைய உள்ளத்தில் அல்லாஹ் சகிப்புத் தன்மையைப் போட்டு விடுவான். இன்னும் அவர் உறுதியாக இருப்பார்.

...யார் (இன்னல்களைச்) சகித்துக்கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் (மேலும்) சகிப்புத் தன்மையை வழங்குவான். பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை வேறெதுவும் எவருக்கும் வழங்கப்படுவதில்லை'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல் : நூல் : முஸ்லிம் 1902

இதையே மேற்காணும் வசனத்திலும் சிரமத்தை சகித்துக் கொண்டால் அதில் உறுதியாக நின்றால் வெற்றி பெறுவீர்கள் என்றே அல்லாஹ்வும் சொல்கின்றான்.

அல்லாஹ் நாடினால் அந்த வெற்றி உலகிலும் - மறுமையில் கிடைக்கலாம், அல்லது மறுமையில் கிடைக்கலாம்.

முன் சென்றோரே இதற்கு முன்மாதிரி.

நமக்கு முன் சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுபவிக்காத சிரமங்கள் இல்லை அதைக் குறைத்து மதித்திட முடியாது.

அவர்களின் பாசறையில் வார்த்தெடுக்கப்பட்ட இறைநம்பிக்கையின் குன்றாகத் திகழ்ந்த அவர்களின் ஆருயிர் தோழர்கள் படாத சிரமங்கள் இல்லை.

சத்திய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டக் காரணத்தால் அவர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் உடல் ரீதியாக கடுமையான சிரமத்தை ஏற்படுத்தியது.

ஆனால் அது உள்ளத்தில் பாதிப்பை ஏற்படுத்தி இறைநம்பிக்கையில் குறைவை ஏற்படுத்த வில்லை சகித்துக் கொண்டார்கள் அதில் உறுதியாக நின்றார்கள்.

அவர்களில் முன்கூட்டியே சொர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்டவர்களும் இருந்தனர்.

இறுதியாக அவர்களில் பலர் நாடாளும் மன்னர்களாக, கவர்னர்களாக பூமியில் ஆட்சி செய்யும் அளவுக்கு அல்லாஹ் அவர்களை உயர்த்தினான்.

முன்கூட்டியே சொர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்டக் காரணத்தால் மறுமையிலும் சொர்க்கத்தை கொடுப்பான்.

ஆக அவர்கள் அடைந்த சிரமத்திற்கேற்ப, சகித்துக் கொண்ட தன்மைக்கேற்ப இரு உலகிலும் அவர்களுக்கு அந்தஸ்த்தை உயர்த்தச் செய்தான் நீதியாளன் அல்லாஹ்.

பொருத்தார் அரசாள்வார், பொங்கினார் காடு கொள்வார் என்ற பழமொழியும் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

அதனால் பொறுமையை மேற்கொள்வோம், சகித்துக் கொள்வோம், அதில் உறுதியாக இருப்போம் உலகில் நமக்கு ஏற்படும் எந்த சிரமும் நமது இறைநம்பிக்கையை பாதிக்கச் செய்யாத அளவுக்கு சகித்துக் கொள்வோம் இதன் மூலமாக இன்ஷா அல்லாஹ் வெற்றி வெறுவோம். இதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.

நம்பிக்கை கொண்டோரே! சகித்துக் கொள்ளுங்கள்! சகிப்புத் தன்மையில் (மற்றவர்களை) மிகைத்து விடுங்கள்! உறுதியாக நில்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள். திருக்குர்ஆன். 3:200



அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்வதாகாது.

அல்லாஹ்வுடைய கட்டளைகளுக்கும், அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடைய வழிகாட்டுதலுக்கும் தான் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட முஸ்லீம்கள் கட்டுப்பட வேண்டும்.


அந்த இரண்டின் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் தான் அல்லாஹ்வுடைய அன்புக்கும்இ அருளுக்கும் பாத்தியதை ஆகி சொர்க்கத்தில் நுழையலாம்.

மாறாக அல்லாஹ்வுடைய கட்டளைக்கும், அவனது தூதருடைய வழிகாட்டுதலுக்கும் கட்டுப்படாமல் வேண்டுமென்றே இஸ்லாம் தடுத்த இணைவைப்பு, வட்டி, விபச்சாரம், வரதட்சனை, பொய், புறம், கோள், கொலை, கொள்ளை, போன்ற இன்னும் தடுக்கப்பட்டசெயல்களில் பகிரங்கமாக ஈடுபட்டு வந்தால் அது அல்லாஹ்வுடைய கோபத்தைத் தூண்டுவதாக அமைந்து விடும்.

அல்லாஹ்வுடைய கோபத்தைத் தூண்டினால் அவர்களை அல்லாஹ் நரகில் புகுத்துவான் அதிலிருந்து மீண்டும் வெளியேற்றப்படாமல் மேலும் அதற்குள் வைத்தே வேதனையை அதிகப்படுத்துவான்.

ஸமூது கூட்டத்தார் மீது இறங்கிய அல்லாஹ்வின் கோபம்.

ஸாலிஹ் நபியுடைய சமுதாயம் அவனுடைய தூதரையும் பொய்ப்பித்தனர், அல்லாஹ்வின் அத்தாட்சியாகிய ஒட்டகத்தின் கால் நரம்பையும் துண்டித்தனர்.

அது தான் அல்லாஹ்வுடைய அத்தாட்சி என்று சொன்னப் பிறகும் வேண்டுமென்றே துண்டித்து வரம்பு மீறினர்.

இதன் காரணத்தால் அல்லாஹ்வுக்கு கடும் கோபம் ஏற்பட்டு அவர்களின் மீது கடும் சப்தத்துடன் கூடிய சூறாவளியை அனுப்பினான் அதில் அவர்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துப் போயினர்.

ஸமூது சமுதாயத்தினர் தமது வரம்பு மீறுதல் காரணமாக பொய்யெனக் கருதினர். அதில் மிகவும் துர்பாக்கியசாலி முன் வந்தான். ''இது அல்லாஹ்வின் ஒட்டகம். அதை நீரருந்த விடுங்கள்!'' என்று அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் கூறினார். அவரைப் பொய்யெனக் கருதினர். அதன் கால் நரம்பைத் துண்டித்தனர். அவர்களின் பாவம் காரணமாக அவர்களுக்கு வேதனையை இறக்கி அவர்களை அவர்களின் இறைவன் தரை மட்டமாக்கினான். அதன் முடிவைப் பற்றி அவன் அஞ்சவில்லை. திருக்குர்ஆன்.9:11 முதல் 15 வரை.

இது போன்ற அல்லாஹ்வின் கட்டளையை மீறி அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்திய எத்தனையோ சமுதாயங்களை அல்லாஹ் அழித்திருக்கிறான் என்பதை திருக்குர்ஆனில் படித்திருக்கின்றோம்.

அல்லாஹ்வுடைய அன்பையும், அருளையும் பெறும் காரியங்களில் அதிகமதிகம் ஈடுபட வேண்டும். இயனற்வரை அல்லாஹ், ரசூலுக்கு கட்டுப்பட வேண்டும். மாறு செய்யக்கூடாது.

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுபவனை (அல்லாஹ்) நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு. திருக்குர்ஆன்.4:14



தவ்பாவை முற்படுத்துவோம்.

நம்மிடம் தவறு ஒன்று நிகழ்ந்து விட்டது என்றால் அதை உடனடியாக அல்லாஹ்விடம் கூறி பாவமன்னிப்புத் தேடி விட வேண்டும்.

யா அல்லாஹ் ! அறியாமல் செய்து விட்டேன் எனக்கு நானே தீங்கிழைத்துக் கெண்டேன் மன்னித்து விடு, இனி செய்ய மாட்டேன் இனி செய்யாமல் இருக்க எனக்கு உதவு என்றுக் கேட்க வேண்டும்.


அல்லாஹ்விடம் இது போன்று கேட்கப்படும் மன்னிப்பு ஒரு வகையில் அல்லாஹ்விடம் அளிக்கும் வாக்குறுதியாகவும் அமைந்து விடுகிறது.

நாளை முதல் செய்ய மாட்டேன் என்று மனிதர்களிடம் சொல்வது போன்று அல்லாஹ்விடம் சொல்ல முடியாது.

இனி செய்ய மாட்டேன் என்று ஏற்கனவே அல்லாஹ்விடம் கூறியது நினைவுக்கு வரும்போது மீண்டும் அந்த தவறை செய்யும் துனிச்சல் வராது அல்லாஹ்வின் மீதான அச்ச உணர்வே மேலோங்கும்.

தவறு செய்யாதவன் மனிதனே கிடையாது.

தவறு செய்யாத மனிதர்கள் உலகில் கிடையாது, மனிதர்கள் தவறு செய்வார்கள், மலக்குகள் மட்டுமே தவறு செய்ய மாட்டார்கள்.

ஆனால் தவறு செய்தால் தவறுக்காக வருந்த வேண்டும். அந்த அடிப்படையில் தான் மனிதர்களின் உள்ளத்தை அல்லாஹ் ஆக்கி இருக்கிறான்.

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம் என்று சொல்லக் கேட்டுள்ளோம்.

அந்த அடிப்படையில் வருந்தி தவறுக்காக தாமதமின்றி தவ்பா செய்ய வேண்டும்.

தாமதம் கூடாது.

தவ்பாவுக்கு தாமதப்படுத்தினால் தாமதப்படுத்தும் இடைவெளியில் அதே தவறை மறுபடியும் செய்வதற்கு அல்லது வேறொரு தவவை செய்யத் தூண்டுவான் ஷைத்தான்.

தவ்பாவுக்கு தாமதப்படுத்துவதால் அல்லது தவ்பாவை நாடாததால் தான் தொடர் திருட்டுஇ தொடர் கொலை, தொடர் விபச்சாரம், மடா குடி என்று தொடர்ந்து தீய காரியங்களில் மனிதன் வீழ்கிறான்.

அதனால் தான் தவறை செய்து விட்டால் தாமதமில்லாமல் மன்னிப்புக் கேட்போருக்கே எனது மன்னிப்பு உண்டு என்கிறான் எல்லாம் அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன்.

இது மாபெரும் சலுகை.

தவறா செய்தாய் ? இதற்கு உனக்கு தீர்வே கிடையாது, நரகம் தான் தீர்வு என்று அல்லாஹ் சொல்ல வில்லை, மாறாக மன்னிக்கிறேன் கேள், இனி திருந்திக் கொள் என்கிறான். அதனால் தான் அல்லாஹ்வை அளவற்ற அருளாலன் நிகரற்ற அன்புடையோன் என்கிறோம்.

அறியாமல் தீய காரியம் செய்து விட்டு தாமதமின்றி மன்னிப்புக் கேட்போருக்கே அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு உண்டு. அவர்களையே அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். திருக்குர்ஆன்.4:17 .

எவ்வளவு நாள் இந்த உலகில் வாழ்வோம் என்பது நமக்கு தெரியாது, அதனால் தாமதமின்றி தவ்பாவை முற்படுத்துவோம். நரக வேதனையிலிருந்து காத்துக் கொள்வோம்.

எழுதியபடி என்னையும், வாசித்தப்படி உங்களையும் அமல் செய்யும் நன்மக்களாக வல்ல அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக !




மரணம் நெருங்கும் போது கூறும் தவ்பா ஏற்றுக் கொள்ளப்படாது.

செய்ய வேண்டியத் தவறை எல்லாம் விரும்பியவாறு விரும்பிய நேரத்தில் செய்து விட்டு மரணம் கண் முன்னே வந்ததும் தவ்பா செய்கின்றேன் என்றால் அதில் அர்த்தமில்லை.

ஃபிர்அவ்ன் இப்படித் தான் செய்தான், கடல் பிளந்த அதிசயத்தைப் பார்த்தான்இ மூஸா(அலை)அவர்களும், அவர்களுடைய ஆட்களும் கடலை கடப்பதைப் பார்த்தான்.

தன்னுடைய பட்டாளம் மூழ்குவதைப் பார்த்தான் அதிர்ந்துப் போனான், தானும் மூழ்கும் போது, மூழ்கிக் கொண்டிருக்கும் போது தவ்பா கேட்டான்.

தவ்பா மட்டும் கேட்க வில்லை, பனு இஸ்ரவேலர்களுடைய கடவுளை ஏற்றுக் கொண்டேன் இப்பொழுது முஸ்லீம்களில் நானும் ஒருவன் என்றான்.

இது அற்புதமான வார்த்தைகள், அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்த வார்த்தைகள் ஆனால் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வில்லை.

காலம் கடந்து விட்டது அதனால் அந்த தவ்பாவையும், கலிமாவையும் இறைவன் தூக்கி எறிந்து விட்டான்.

 குறைந்த பட்சம் அவனுடைய அரண்மனையில் மூஸா(அலை) அவர்களுடைய கைத்தடி பாம்பாக மாறி சூனியக்காரர்களின் வித்தைகளை மென்று விழுங்கிய போதாவது அவன் இந்த வார்த்தைகளை சொல்லி இருக்கலாம்.

அவன் கொண்டு வந்த சூனியக்காரர்கள் அனைவரும் மூஸா(அலை) அவர்கள் செய்து காட்டிய அற்புதத்தைப் பார்த்து கண்டிப்பாக இதை இறைவனுடைய உத்தரவல்லாமல் யாராலும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து அவனுடைய கண்முன்னே இஸ்லாத்தை ஏற்று ஸஜ்தாவில் வீழ்ந்தனர்.

அப்பொழுது அவன் இஸ்லாத்தை ஏற்க வில்லை. ஏற்க மறுத்ததுடன் இஸ்லாத்தை ஏற்றவர்களை கொல்வதற்கு விரட்டினான்.

அதனால் மரணம் வருவதற்கு முன்னரே தான் செய்த தீயக் காரியங்களுக்காக படைத்தவனாகிய கருணையாளன் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு விட வேண்டும்.

இல்லை என்றால் ஃபிர்அவனுடைய தவ்பாவை வீசியது போல் வீசி விடுவான்.

மரணம் எப்பொழுது வரும் என்று யாருக்கும் தெரியாது என்பதால் தவ்பாவை மிக விரைவாக முற்படுத்திவிட வேண்டும்.

எழுதியப் படி என்னையும், வாசித்தப் படி உங்களையும் அமல் செய்யும் நன்மக்களாக வல்ல ராஹ்மான் ஆக்கி அருள் புரிவானாக !.

தீமைகளைச் செய்து விட்டு மரணம் நெருங்கும் வேளையில் ''நான் இப்போது மன்னிப்புக் கேட்கிறேன்'' எனக் கூறுவோருக்கும், (ஏக இறைவனை) மறுப்போராகவே மரணித்தோருக்கும் மன்னிப்பு இல்லை. அவர்களுக்காகவே துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம். திருக்குர்ஆன். 4:18