வெள்ளி, 17 ஜனவரி, 2014

Hadis


சிலருக்குக் காற்றுப் பிரியாவிட்டாலும் காற்றுப் பிரிந்தது போன்ற உணர்வு ஏற்படும். அல்லது சிறுநீர் ஓரிரு சொட்டுக்கள் இறங்கி விட்டது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால் ஆடையில் அதற்கான எந்த அடையாளமும் இருக்காது. இவர்கள் அதற்காக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. திட்டவட்டமாகத் தெரிந்தால் மட்டுமே உளூ நீங்கி விட்டதாக முடிவு செய்து கொள்ள வேண்டும்.

 'தொழும் போது ஏதோ ஏற்படுவதாகத் தனக்குத் தோன்றுகிறது' என்று ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், '(காற்றுப் பிரியும்) சப்தத்தைக் கேட்காமல், அல்லது அதன் நாற்றத்தை உணராமல் தொழுகையை விட்டுச் செல்ல வேண்டாம்' என்று பதிலளித்தார்கள்.

 அறிவிப்dis பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)
 நூல்கள்: புகாரீ 137, முஸ்லிம் 540

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 நான்கு நோக்கங்களுக்காக ஒரு ‪#‎பெண் மணமுடிக்கப்படுகிறாள்.

 1. அவளது செல்வத்திற்காக.
 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
 3. அவளது அழகிற்காக.
 4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக.

 ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!

 அறிவிப்பவர்: அபூஹுரைரா (-) நூல்: ‪#‎புகாரி 5090