வியாழன், 9 ஜனவரி, 2014

Nice New Year 2014


இதுபோல் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் தேவையா ? கீழ்காணும் பெண் செத்துப்போகல சனியனுக்கு போதை சமீபத்தில் ஒரு குடிமகள் சைதாப்பேட்டையில் குடித்துவிட்டு ரோட்டின் ஓரத்தில் தன் பாய் ப்ரண்டால் படுக்க வைத்துவிட்டு போனதும் அந்த பெண்ணிடம் சாலை ஓர ரோமியோக்கள் லீலையில் ஈடுபட ரோந்து வந்த போலீசார் எல்லோரையும் தூக்கி கொண்டுபோய் உள்ளே வைத்து அர்ச்சனை செய்து அனுப்பியதும் நினைவு இருக்கலாம்.தாராளமயம் மற்றும் மேற்குலக பண்பாடு போன்ற காரணங்களால் நாட்டில் பப்-கள் கொடிகட்டி பறக்கின்ற மிகபெரிய கலாச்சார சீரழிவு, இதெல்லாம் தவறே இல்லை என்ற ஓர் மனநிலையை ஏற்படுத்தியுள்ளது எனக்கு ஒரு சந்தேகம் அந்த கிளப் நடத்துபவர்களின் மகள்கள் இப்படி குடித்துவிட்டு பப்களில் (ஸ்ட்ரிபிங்) நடனம் ஆடினாலோ,இல்லை உயர் காவல் அதிகாரிகளின் மகள்கள் அரசியல்வாதிளின் மகளோ ஆடினாலோ பெற்றோர் என்ற முறையில் ஏற்றுகொள்வார்களா? ( இந்த கேடுகெட்ட கலாசாரத்தை செய்வதே பெரிய இடத்து பிள்ளைகள்தான் என்பது வேறு விசயம்)நான் மேலே குறிப்பிட்ட மக்கள் தங்களை மேட்டுகுடிகளாக நினைத்துக்கொண்டு செய்யும் கலாசார கற்பழிப்பு கொஞ்சமில்லை இவர்களை எல்லாம் நாம் லிஸ்டில் சேர்க்கவே கூடாது மேல சொன்ன எந்த விசயத்திலும் அடங்காமல் ஒரு குரூப் சுத்துவானுக நாம அவன் விசயத்துக்கு வருவோம் புத்தாண்டு வந்தாலே நம்ம பயபுள்ளைக நிறைய சபதம் போடுவான் தண்ணி அடிக்கமாட்டேன் தம் அடிக்கமாட்டேன் எல்லாமே இந்த வருடத்தின் கடைசி நாளான இன்று மட்டும்தான்னு சொல்லிவிட்டு வெறித்தனமா ஒரு பாக்கெட சிகிரெட் வாங்கி ஒன்னு மாத்தி ஒன்னு பற்றவைத்து புகையை விடுற அழகு இருக்கே அடடா..அடடா....(அவனுக சபதத்தை பாராட்டியே ஆகணும்) ஆனால் என்ன ஆகும் தெரியுமா சரியா 31-12 இரவு 11 மணிக்குதான் இவங்க குடிக்கும் நிகழ்வு ஆரம்பம் ஆகும்.
12 மணி ஆகுவதற்குள் குவாட்டர் சரக்கை உள்ள தள்ளிட்டு முக்கால் போதையோட இருப்பான் பக்கத்துல இருக்குறவன் கிட்ட சரக்கு பத்தலை மச்சான்னு சொல்லிவிட்டு சரியாக 12 மணிக்கு அடுத்த புல் பாட்டிலை திறந்து ஹாப்பி நியூ இயர்-னு ஒரு உற்சாக குரலில் கத்திவிட்டு அடுத்த ரவுண்டு குடிப்பான் பாருங்க மணி இப்போ 12:15 ஆக புது வருடம் போதையில் ஆரம்பம்.ஹி...ஹி... இவருக்கு போதை தலைக்கு ஏறியதும் பாக்கெட்டில் இருக்கும் தம்மை எடுத்து ரொம்ப ஸ்டைலா பற்றவைப்பார் இரண்டாவது சத்தியமும் போச்சா. தெரியாமதான் கேக்குறேன் இந்த யளவு கலாச்சாரம் நமக்கு தேவையா??? ஏன் நாம தமிழ்புத்தாண்ட நம்ம முறைப்படியே ஆர்ப்பாட்டமில்லாம கொண்டாடக்கூடாது...ஆங்கில புத்தாண்டை தவிர்த்து தமிழ்புத்தாண்டு கொண்டாட ஆர்வமிக்கவர்களும் .. ஆங்கிலப்புத்தாண்டு காலத்தின் அவசியம் னு சொல்லுறவங்களும் வாங்க வந்து கருத்து யுத்தம் நடத்துங்க...