பொதுவாகவே வீண்பேச்சுக்களைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்; பேசுவதாக
இருந்தால் நல்லதைப்
பேச வேண்டும்
என #இஸ்லாம்
அறிவுறுத்துகிறது. அதிலும் குறிப்பாக
ஆண்களும் பெண்களும்
தங்களுக்கு மஹ்ரமாக இல்லாதவர்களிடம் பேசும் போது
மிகவும் கவனமாக
இருக்க வேண்டும்.
தேவையின்றி பேசுவது, ஈர்க்கும் விதத்தில் குழைந்து
நெளிந்து பேசுவது,
இரட்டை அர்த்தங்களுடன்
பேசுவது போன்றவற்றைத்
தவிர்த்துக் கொள்ள வேண்டும். அந்தரங்கமான விஷயங்களைப்
பற்றிப் பேசுவதும்
ஆபாசமாகப் பேசுவதும்
அறவே கூடாது.
ஆனால் நட்பு என்று
சொல்லிக் கொண்டு
பொதுவாக எந்த
விஷயங்களை மற்றவர்களிடம்
பேசுவதற்கு வெட்கம் கொள்வோமோ அத்தகைய செய்திகளை
எந்தவொரு கூச்சமும்
இறையச்சமும் இல்லாமல் பேசும் நபர்கள் இருக்கிறார்கள்.
இவ்வாறு இருக்கும்
ஆண்கள் நபிகளாரிடமிருந்து
நாணம் எனும்
பண்பைக் கற்று
நல்ல முறையில்
நடந்து கொள்ள
வேண்டும்.
அன்சாரிப் பெண்கüல்
ஒருவர் நபி
(ஸல்) அவர்கüடம் (வந்து),
"மாதவிடாயி-ருந்து தூய்மையாகிக் கொள்ள நான்
எவ்வாறு குüக்க வேண்டும்?''
என்று கேட்டார்.
நபி (ஸல்)
அவர்கள் நறுமணம்
தோய்க்கப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து "மூன்று
முறை சுத்தம்
செய்!' என்றோ
அல்லது "அதன் மூலம் சுத்தம் செய்!'
என்றோ சொன்னார்கள்.
பிறகு #நபி
(ஸல்) அவர்கள்
வெட்கப்பட்டுக் கொண்டு தமது முகத்தைத் திருப்பிக்
கொண்டார்கள். உடனே நான் அந்தப் பெண்மணியைப்
பிடித்து (என்
பக்கம்) இழுத்து
நபி (ஸல்)
அவர்கள் சொல்ல
வருவதை அவருக்கு
விளக்கிக் கொடுத்தேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ர-),
நூல்: புகாரி
315
#நாணத்தைக்கடைப்பிடிப்போம்
********
தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது.
மக்கள் தம்
தொழுகை வரிசைகளை
சீர் செய்தனர்.
அப்போது அல்லாஹ்வின்
தூதர் (ஸல்)
அவர்கள் (தொழுவிப்பதற்காக)
முன்னே நின்றார்கள்.
அப்போது அவர்கள்
பெருந்துடக்குடனிருந்தார்கள். (நினைவில்லாமல் நின்று
விட்டதால்) "அப்படியே இருங்கள்!'' என்று (மக்கüடம்) கூறிவிட்டு
(தம் இல்லத்திற்குத்)
திரும்பிச் சென்று நீராடினார்கள். பிறகு தம்
தலையி-ருந்து
நீர் சொட்டிக்
கொண்டிருக்க(த் திரும்பி) வந்து மக்களுக்குத்
தொழுகை நடத்தினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-),
நூல்: புகாரி
640