வியாழன், 9 ஜனவரி, 2014

சச்சார் கமிட்டிப் பரிந்துரையை அமல்


சச்சார் கமிட்டிப் பரிந்துரையை அமல் படுத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி முடிவு..! கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறுபான்மையினருக்கு சமஉரிமை வழங்கும் புதிய சட்டத்தை கொண்டு வர காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்ட வரைவை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் தயாரித்து வருகிறது. மத ரீதியான பின்புலத்தைக் கொண்டு அவர்கள் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து வகையிலும் அவர்களுக்கு சமஉரிமையை சட்டப்பூர்வமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. 18.5 சதவீதம் இருக்கும் சிறுபான்மை இனத்தவர்களில் 2.5 சதவீதம் மட்டுமே அதிகாரிகளாக உள்ளனர். இதனால் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் சமஉரிமை அளித்து அவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் போது தான் இதை எல்லாம் அறிவிப்பார்கள், இதற்கு மேலும் அறிவிப்பார்கள் தேர்தல் முடிந்து ஆட்சியில் அமர்ந்து விட்டால் இதை மறந்து விடுவார்கள். மறந்து விட்டுப் போகட்டும் ஆனால் குறைந்த பட்சம் மதக்கலவரத்திலாவது காப்பாற்ற வேண்டாமா ?. அதைச் செய்யவும் மறுப்பார்கள், இதெல்லாம் ஏட்டுச் சுரைக்காய் என்பதை நாம் அறிந்து வைத்திருப்பதால் ஜனவரி 28 அன்று நமது உரிமைக்குரலை தமிழகத்தில் உய்ரத்தி உரிமையை வென்றெடுப்போம் இன்ஷா அல்லாஹ்.