விடியல் வார்த்தை நீக்கம்; வைகோவின் விமர்சனம்: அமைச்சர் வன்னி அரசு அதிரடி பதில்
கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வன்னியரசு, மகளிர் இலவச பயண திட்ட பேருந்துகளில் விடியல் என்ற வார்த்தையை நீக்கியது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், “எந்த அறிவிப்பும் இல்லாமல், அதைப் பற்றி அரைகுறையாக நான் பதில் சொல்லக்கூடாது” என்று கூறினார்.
திருமாவளவன் மீதான வைகோவின் விமர்சனம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் வன்னி அரசு, “ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மீது எப்போதுமே விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மதிப்பு உண்டு, மரியாதை உண்டு. எங்களுடைய தலைவர் திருமாவளவன் கூறிய கருத்து என்பது வைகோ வருவதற்கு முன்பாகவே தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைப்பதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து இந்த ஐந்து ஆண்டுகளும் ஆட்சி எந்த விதமான தடையும் இல்லாமல் தொடர வேண்டும் என்ற அடிப்படையில் தான் நாங்கள் ஆதரவளித்திருக்கிறோம் என்று எங்களுடைய தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார். அதனால். வைகோ இந்த மாதிரி பேசுவது ஏற்புடையது அல்ல, மிக முக்கியமாக அவரைப் போன்ற மூத்த தலைவரிடம் இருந்து இப்படியான கருத்துகள் வருவது என்பது வருத்தம் அளிக்கிறது” என்று கூறினார்.
9 7 26
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-politics-weather-and-chennai-news-karur-incident-case-live-updates-in-tamil-12147171





