/indian-express-tamil/media/media_files/2026/07/22/markandeyan-2-2026-07-22-15-30-34.jpg)
முதல்வர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க. எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவில்பட்டியில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய விளாத்திக்குளம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், பேசும்போது இவ்வளவு கேவலமான ஒரு முதலமைச்சரை தமிழகம் மட்டும் அல்ல இந்திய வரலாறே கண்டது கிடையாது. தேர்தல் வெற்றி பெற்று தான் தி.மு.க மீண்டும் வெற்றி பெற வேண்டுமா என்றால் உறுதியாக இல்லை. அடுத்த தேர்தல்களில் 5 சதவீத வாக்குகள் கூட பெற முடியாமல் நடிகர் விஜய் தோற்று அவன் கட்சியும் தோற்றுப்போகும். மக்கள் மத்தயில் ஓட்டு வாங்க முடியாது.
சட்டமன்றத்தில் உங்க அப்பாவை தேடுகிறேன் என்று சொல்கிறானே மானம்கெட்ட தமிழ்நாட்டில் முதலமைச்சர், என்னை சட்டமன்றத்திற்கு நுழைந்து பாத்துக்கிறோம் டா, சட்டமன்றத்தை பூட்டுவோம் என்று சொல்கிறான், பூட்டினால் எலும்பு இருக்காது. உடைத்து தான் உன்னை அனுப்பிவிடுவார்கள். கரூரில் இருந்து நீ ஓடினாய், நாங்கள் ஒன்றும் பயந்து ஓடவில்லை. தமிழ்நாட்டின் முதல்வர் பேய் அடித்தது போன்று சட்டமன்றத்தில் உட்கார்ந்திருந்தார் என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதனிடையே முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே ஜாமீன் கோரி மார்க்கண்டேயன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவரது மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு சார்பில் போடப்பட்ட வழக்கு, சட்ட விதிகளுக்கு முரணாது என்றும், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும், தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி மார்க்கண்டேயன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று (ஜூலை 30) நடைபெற்ற நிலையில், மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-dmk-mla-markendaiyan-bail-petition-rejected-in-district-court-12213660





