சனி, 1 ஆகஸ்ட், 2026

TNEA 2026: இன்ஜினியரிங் கவுன்சலிங் ரவுண்ட் 2; சென்னையில் இந்த கல்லூரிகளை மிஸ் பண்ணாதீங்க

 

engineering admission

பொறியியல் படிப்புகளுக்கான முதல் சுற்று கவுன்சலிங் முடிவடைந்து இரண்டாம் சுற்று தொடங்க உள்ள நிலையில், சென்னை மண்டலத்தில் எந்த கல்லூரிகளில் இன்னும் சீட் இருக்கும்? ரவுண்ட் 2-ல் எந்த கல்லூரிகளை சாய்ஸ் லிஸ்டில் வைக்கலாம்? என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 400க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் நடைபெற்று வருகிறது. இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ள நிலையில், தற்போது பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியுள்ளது. அதில் முதல் சுற்றுக்கான சாய்ஸ் ஃபில்லிங் நிறைவடைந்து, தற்போது தற்காலிக ஒதுக்கீடு வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 3 ஆம் தேதி இரண்டாம் சுற்று தொடங்குகிறது. 171 – 135.75 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ள சுமார் 93000 மாணவர்கள் ரவுண்ட் 2 கலந்தாய்வில் பங்கேற்பர்.

இந்தநிலையில், சென்னை மண்டலத்தில் எந்த கல்லூரிகளில் இன்னும் சீட் இருக்கும்? ரவுண்ட் 2-ல் எந்த கல்லூரிகளை சாய்ஸ் லிஸ்டில் வைக்கலாம்? என்பது குறித்து கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.

1). அண்ணா பல்கலைக்கழக சி.இ.ஜி கேம்பஸ், சென்னை

2). அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி கேம்பஸ், சென்னை

3). சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை

4). ராஜலெட்சுமி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

இந்தக் கல்லூரிகளில் 80% - 90% இடங்கள் நிரம்பியிருக்கும். கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ் கோர்ஸ்களில் சீட் முடிந்திருக்கும். கோர் படிப்புகளில் எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி மாணவர்களுக்கு இடங்கள் காலியாக இருக்கலாம். சில குறிப்பிட்ட படிப்புகளில் பி.சி, எம்.பி.சி பிரிவினருக்கும் சீட் இருக்கலாம்.

1). ராஜலெட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை 

2). ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

3). சவீதா இன்ஜினியரிங் காலேஜ், சென்னை 

4). ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், காஞ்சிபுரம் 

5). லயோலா ஐகேம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, சென்னை 

இந்தக் கல்லூரிகளில் 70 - 80% இடங்கள் நிரம்பியிருக்கும். கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ் கோர்ஸ்களில் பெரும்பாலான இடங்கள் முடிந்திருக்கும். கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், கோர் படிப்புகளில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு இடங்கள் காலியாக இருக்கலாம். கோர் படிப்புகளில் பி.சி, எம்.பி.சி பிரிவினருக்கு சீட் இருக்கலாம்.

1). பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை 

2). ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

3). ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

4). செயின்ட் ஜோசப் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை

5). ஆர்.எம்.டி இன்ஜினியரிங் காலேஜ், திருவள்ளூர்

6). பனிமலர் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

7). பிரின்ஸ் டாக்டர் வாசுதேவன் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை

8). ஜே.என்.என் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங், திருவள்ளூர்

9). டானிஷ் சென்னை காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை

10). ஆர்.எம்.கே காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, சென்னை

11). மீனாட்சி சுந்தர்ராஜன் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

12). எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

13). கே.சி.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, சென்னை

14). ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, சென்னை

15). வேலம்மாள் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

16). மகாலட்சுமி டெக் கேம்பஸ், செங்கல்பட்டு

17). வேல் டெக் மல்டி டெக், சென்னை

18). வேல் டெக் ஹை டெக், சென்னை

19). ஜேப்பியர் இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி, காஞ்சிபுரம்

20). எஸ்.ஏ இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

21). ஜெருசலேம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை


source https://tamil.indianexpress.com/education-jobs/tnea-2026-top-30-engineering-colleges-list-anna-university-in-tamil-nadu-chennai-round-2-counselling-12215849