ஞாயிறு, 29 டிசம்பர், 2013

மருத்துவக் கட்டுரை அல்ஜைமர் நோய்



 டாக்டர் ஜி. ஜான்சன்

அல்ஜைமர் நோய் ( Alzheimer Disease ) என்பது நிரந்தரமான நினைவிழத்தல் நோய் எனலாம். இது ஏற்பட்டால், தொடர்ந்து நோய் முற்றி மரணம் நேரிடும். இதை குணப்படுத்தக்கூடிய சிகிச்சைகள் இல்லை. இவர்கள் தாங்கள் யார் என்பதை மறந்து செயல்படுவதால், உறவினர்களுக்கு பெரும் துன்பம் நேரிடும்.

இந்த வினோத நோயை 1906 ஆம் வருடத்தில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மனோவீயல் மருத்துவரும், நரம்பியல் நோயியல் நிபுணருமான ( psychiatrist and neuropathologist ) அலோய்ஸ் அல்ஜைமர் ( Alois Alzheimer ) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டதால் அவருடைய பெயரிலேயே இந்த நோய் அழைக்கப்படுகின்றது.

இந்த நோய் 65 வயதைத் தாண்டியவர்களைத் தாக்குகிறது.

2006 ஆம் வருடத்தில் உலக அளவில் இந் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26.6 மில்லியன்.

2050 ஆம் வருடத்தில் உலகளாவிய நிலையில் 85 பேர்களில் ஒருவர் இந் நோயால் பாதிக்கப்படுவார் என்று கணித்துள்ளனர்.

இந்த நோய் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் ஏற்பட்டாலும் அனைவருக்கும் சில பொதுவான அறிகுறிகள் தோன்றலாம்.

துவக்க கால அறிகுறியை முதிர் வயது அல்லது மன உளைச்சல் காரணம் என்று பலர் தவறாக எண்ணுவதுண்டு. பொதுவாக சமீபத்திய நிகழ்வுகளை மறந்து விடுவதுதான் பலருக்கு முதல் அறிகுறியாகும். அதைத் தொடர்ந்து குழப்பம், குணத்தில் மாற்றம், மொழியைப் பயன்படுத்துவதில் சிரமம், நீண்ட கால நினைவு இழப்பு, குடும்பத்திலிருந்து தனித்திருப்பது, உடலின் அன்றாட செயல்பாடுகள் இழத்தல் போன்றவை உண்டாகி மரணத்தில் முடியும்..

நோய் உள்ளதை குணத்தில் தோன்றிய மாற்றங்களின் அளவையும், நினைவாற்றலை அறியும் சோதனைகளின் மூலமும் துவக்க காலத்தில் நிர்ணயம் செய்கின்றனர். சிலருக்கு மூளை ஸ்கேன் பரிசோதனையும் தேவைப்படும்.

சிலருக்கு நோய் உள்ளது தெரியாமலேயே நீண்ட நாள் பாதிக்கும். நோய் உள்ளது தெரிந்தபின் 7 வருடங்களே உயிர் வாழ முடியும். நோயின் வளர்ச்சியைக் குறைக்க மருந்துகள் இல்லை. அதனால் மரணம் நிச்சயம் எனலாம்.

அல்ஜைமர் நோய் எவ்வாறு தோன்றுகிறது என்பது இன்னும் சரிவரத் தெரியவில்லை. ஆனால் இது மூளையில் ஊத்தைகள் ( plaques ) , சிக்கல்கள் ( tangles ) உண்டாவதால் ஏற்படுகிறது என்று நம்பப் படுகின்றது.

அல்ஜைமர் நோய் இப்படியும் உண்டாகலாம் என்ற சில கருதுகோள்கள் ( hypothesis ) உள்ளன.

* நரம்புகள் வ்ழியாக செய்திகள் அனுப்பும் அசிட்டில்கோலின் ( Acetylcholine ) எனும் இரசாயனம் மூளையில் குறைவு படுவதால் இது உண்டாகிறது. இதுவே மிகவும் பழமையான கருதுகோள்.

* அமைலாய்ட் ( Amyloid ) எனும் கொழுப்பு வகை மூளையில் படிவதால் இது உண்டாகிறது என்றும் நம்பப்படுகிறது.

* டாவ் ( Tau ) எனும் ஒருவித புரோதம் மூளை நரம்புகளில் சிக்கல்களை ( tangles ) ஏற்படுத்துவதால் இது உண்டாகிறது.

அல்ஜைமர் நோயை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

1.நோய்க்கு முன் : ஞாபக மறதி , ஒரு இடத்தில் வைத்த பொருளை மறந்து போவது, எதையும் கவனித்து செயல்பட முடியாத நிலை, ஒதுங்கி வாழ விரும்புதல், எளிதில் எறிந்து விழுதல் அல்லது மனச் சோர்வு .

2. நோய் ஆரம்ப நிலை : குறுகிய கால நினைவிழத்தல், நினைவு இழந்தது தெரியாமல் போவது , நடத்தையில் மாற்றத்தை உறவினர் உணர்வது, சில குழப்பமான சூழ்நிலைகள், வார்த்தைகளை உபயோகிப்பதில் சிரமம், பழைய நினைவுகள் இல்லாமல் போவாது , புதிதாக எதையும் செய்ய இயலாதது, முன்பு செய்தவற்றை செய்ய முடியாமல் போவாது, எழுதுவது, வரைவது, உடை உடுத்துவது தெரியாமல் போவது., இவர்கள் தங்களுக்காக செய்ய முயலும் காரியங்களில் அடுத்தவரின் உதவி தேவைப்படும்.

3. நடு நிலைசமீபத்தில் நடந்தவற்றை நினைவு கூறுவதில் அதிக சிரமம், பல சூழல்களில் அதிக குழப்பம், அதிகமான ஆவேசம் அல்லது தயக்கம், தன்னைப் பற்றிய நினைவு கூட இல்லாமல் போவது.

தான் அன்றாடம் செய்து வந்த சுயமான வேலைகளை செய்ய முடியாமல் போய்விடும். பேசும்போது சில வார்த்தைகளை நினைவில் கொண்டு வர முடியாமல் தடுமாறுவார்கள். படிப்பதும், எழுதுவதும் பாதிக்கப்படும். தசைகள் இயக்கம் குறைவதால் அடிக்கடி கீழே விழுந்து விடுவார்கள். நினைவாற்றல் பெரிதும் பாதிப்பதால் நெருங்கிய உறவினர்களைக்கூட அடையாளம் தெரியாமல் போய்விடும். இத்தகைய மாற்றங்களால் உறவினர்களுக்கு பெரும் மன உளைச்சல் உண்டாகும்.

இறுதி நிலைநோயாளி முற்றிலுமாக அன்றாட செயல்பாடுகளுக்கு அடுத்தவரின் உதவியை நாடுவர். பேசுவது சில சொற்கள் மட்டுமே என்ற் நிலையில் குறைந்து போகும். அதன் பின்பு முழுமையாக பேச முடியாமலும் போய்விடலாம். ஆவேசம் இருந்தாலும், அடிக்கடி மிகவும் பயந்த நிலையில் ஒதுங்கி இருப்பர்.

சாதாரண அன்றாட வேலைகள் எதுவும் செய்ய முடியாது. உணவு கூட சொந்தமாக உண்ண இயலாது. தசைகள் முற்றிலும் செயல் படாத நிலையில் படுத்த படுக்கையாகி விடுவர். அல்ஜைமர் நோய் மரணத்தை நோக்கிச் செல்லும் நோய். ஆனால் மரணம் இந்த நோயால் உண்டாவதில்லை. இதன் பின்விளைவுகளான படுக்கைப் புண்களில் கிருமித் தொற்று, நிமோனியா போன்றவற்றால் உண்டாவதாகும்.

அல்ஜைமர் நோய் என்பதை உறுதி செய்ய அதிக சிரமம் இல்லை. நோயாளியின் தோற்றமும், பேச்சும், நடத்தையும், அவரைப் பற்றி உறவினர் விவரிப்பதும் ஏறக்குறைய போதுமானது. சில சமயங்களில் சி.டீ. ஸ்க்கேன், எம். ஆர். ., பி..டீ. ஸ்க்கேன் பரிசோதனைகள் செய்து பார்க்கலாம்.

சிகிச்சை முறைகள்

அல்ஜைமர் நோய்க்கு முறையான சிகிச்சை இல்லை. இந்த நோயைக் குணப்படுத்த இயலாது.இருப்பினும் நோயுடன் சேர்ந்த சில அறிகுறிகளைக் குறைக்க மருத்துவ உதவி தேவைப்படும்.

சில மருந்துகள் பயன்படுத்தினாலும் அதனால் ஏற்படும் பலன்கள் குறைவே. சில சமுதாயமனோவீயல் முறைகள் ( psychosocial ) மூலமாகவும் உதவும் முயற்சிகள் மேற்கொண்டாலும் அவற்றிலும் பலன்கள் குறைவுதான். ஆகவே நோயாளியை உடன் இருந்து அவர்மேல் அன்பு செலுத்தி , அவரின் தேவைகளைப் பூர்த்தி செய்து , அக்கறையுடன் கவனித்துக் கொள்வதே சிறந்த அணுகுமுறையாகும்.

கடவுளுக்கு ஆயுதம் தேவையா?



 - இந்து கிறித்தவ அன்பர்கள் கவனத்திற்கு....

 ஆம் ஆத்மி கட்சியின் கெஜ்ரிவால் தனக்கு பாதுக்காப்பு அளிக்க இசட் பிரிவு பாதுகாப்பு தேவையில்லை என்றும், இறைவன் தான் தனக்கு பாதுகாப்பு என்றும் கூறியதற்கு பதிலளித்த சாமியார் ரவி சங்கர் பாபா, “கடவுள்களே தங்களை பாதுகாத்துக் கொள்ள ஆயுதங்கள் வைத்திருக்கும் போது உங்களது பாதுகாப்புக்கு போலீசார் மிக மிக அவசியம்என்று கூறியுள்ளார்.

 கடவுளுடைய ஆற்றல் குறித்து இவர்கள் என்ன நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்று நமக்கு புரியவில்லை.

 கடவுளுக்கு ஆயுதம் தேவையா?

 ஆயுதங்கள் வைத்திருக்கும் கடவுள்(?) அந்த ஆயுதத்தை வைத்து ஒரு போதும் தன்னை காத்துக் கொள்வதில்லை.

 அந்த கடவுள்(?)களையே கடத்திக் கொண்டு போய் விடுகின்றார்கள்.

 அதை காக்க போலீஸ் தேவைப்படுகின்றது.

 இப்படித்தான் இவர்கள் இறைவனை நம்பிக்கொண்டுள்ளார்கள்.

 இது ஒருபுறம் என்றால் மறுபுறம் கிறித்தவ நண்பவர்கள், “யாக்கோபு என்பவருடன் கடவுள் சண்டை போட்டு ஜெயிக்க முடியாததால், அவரது மர்ம உறுப்பை பிடித்து கடவுள் வெற்றி(?) பெற்றார்என்று பைபிளில் வசனத்தை வாசித்து வருகின்றார்கள்.

 இந்த நம்பிக்கைகள் சரியா?

 கடவுளுக்கு ஆயுதம் தேவையா?

 இத்தகையவர் கடவுளாக இருக்க முடியுமா?

Quran


பெண்களை இழி பிறவிகளாகவும் பெண்களை போகப் பொருளாகவும் மட்டும் பயன்படுத்தி வந்த காலகட்டத்தில் பெண்களை உயிருடன் புதைக்க வும் செய்த கொடுமை நடந்தபோது பெண்களின் பிறப்பு ஓர் ‪#‎நற்செய்தி என்றும் அவர்களை உயிருடன் புதைப்பது மோசமான காரியம் என்றும் ‪#‎இஸ்லாம் கண்டித்தது.

 அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப் பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தியினால் சமுதாயத்தி லிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது.

 (‪#‎அல்குர்ஆன் 16:58,59)

வியாழன், 26 டிசம்பர், 2013

நிய்யத்

நிய்யத் என்பதை முஸ்லிம்களில் சிலர் தவறாக விளங்கி வைத்துள்ளனர். குறிப்பிட்ட வார்த்தைகளை அரபு மொழியில் வாயால் மொழிவது தான் நிய்யத் என்று எண்ணுகின்றனர்.
உஸல்லீ ஸலாத்தஸ் ஸுப்ஹி... என்பன போன்ற சில அரபிச் சொற்களைக் கூறுவது தான் நிய்யத் என்று கருதுகின்றனர். இதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை.
நிய்யத் என்ற சொல்லுக்கு வாயால் மொழிதல் என்று பொருள் இல்லை. மனதால் நினைத்தல் என்பதே அதன் பொருளாகும்.
மேலும் உளூச் செய்யும் போதோ, தொழும் போதோ, நோன்பு நோற்கும் போதோ நபி (ஸல்) அவர்கள் எதனையும் வாயால் மொழிந்து விட்டுச் செய்ததில்லை.
ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது மட்டுமே வாயால் மொழிந்துள்ளனர். மற்ற எந்த வணக்கத்திற்கும் வாயால் மொழிந்ததில்லை.
நான் இப்போது தொழப் போகின்றேன் என்ற எண்ணம் உள்ளத்தில் இருக்குமானால் அதுவே நிய்யத் ஆகும். வாயால் எந்தச் சொல்லையும் மொழியக் கூடாது. அவ்வாறு மொழிவது பித்அத் ஆகும். இது அவசியம் என்றால் நபி (ஸல்) அவர்கள் வாயால் மொழிந்து நமக்கு வழி காட்டியிருப்பார்கள்

உலகில் கிடைப்பதை விட மறுமையின் பொக்கிஷங்கள் மேலானவை.

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ



قُلْ أَؤُنَبِّئُكُم بِخَيْرٍ مِّن ذَلِكُمْ لِلَّذِينَ اتَّقَوْا عِندَ رَبِّهِمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَأَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَرِضْوَانٌ مِّنَ اللّهِ وَاللّهُ بَصِيرٌ بِالْعِبَادِ {15}
'' இதை விடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' ' என்று கேட்பீராக! (இறைவனை) அஞ்சுவோருக்குத் தம் இறைவனிடம் சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். தூய்மையான துணைகளும், அல்லாஹ்வின் திருப்தியும் உள்ளன. அல்லாஹ் அடியார்களைப் பார்ப்பவன்.திருக்குர்ஆன்.3:15.

உலகில் கிடைப்பதை விட மறுமையின் பொக்கிஷங்கள் மேலானவை.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் போன்ற செல்வங்களின் மீது உலக வாழ்க்கையில் ஆசை கொள்வது மனிதர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக 3:14வது வசனத்தில் அல்லாஹ் சொல்லிக்காட்டி விட்டு,
இதை விடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று கேட்பீராக! (இறைவனை) அஞ்சுவோருக்குத் தம் இறைவனிடம் சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். என்று மேற்காணும் 3:15வது வசனத்தில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
உலக வாழ்க்கையில் மேற்காணும் செல்வங்களை மனிதர்கள் திரட்டினாலும் அவைகளை நிரந்தராமாக அவர்களால் அனுபவிக்க முடியாது, காரணம் அவர்களை மரணம் திடீரென கவ்விக் கொள்ளும்.
ஆனால் மறுமையில் மரணம் வராது, அங்கே நிரந்தரமாக அனுபவிக்கலாம்.
அதனால் தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மறுமையில் கிடைக்கும் சில இன்பங்களை பட்டியலிட்டுக் கூறி விட்டு அல்லாஹ்வை அஞ்சுவோர் அவற்றை நிரந்தரமாக அனுபவிப்பார்கள் என்று திருக்குர்ஆனில் 3:15 வசனத்திலும் இன்னும் பல வசனங்களில் சொல்லிக் காட்டுகிறான்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மறுமையில் கிடைக்கும் இன்பங்களில் மேற்காணும் 3:15 வசனத்தில் ஒன்று இரண்டை மட்டுமே கூறி இருக்கின்றான் இதை விட ஏராளமான இன்பங்கள் மறுமையில் அல்லாஹ்வை அஞ்சுவோருக்குக் காத்திருக்கின்றன அவற்றை எவராலும் வார்த்தைகளால் வர்ணிக்கவே இயலாது.
எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் (கற்பனையிலும்) உதித்திராத இன்பங்களை என் நல்லடியார்களுக்காக நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்'' என்று அல்லாஹ் கூறினான். நீங்கள் விரும்பினால், 'மனிதர்கள் எவரும் தமக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிர்ச்சி (தரும் சொர்க்கத்து இன்பங்)களை அறிய மாட்டார்கள்' என்னும் (திருக்குர்ஆன் 32:17) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி.3244.
மறுமையில் மனம் விரும்புவதெல்லாம் கிடைக்கும், அது மனம் விரும்பியதற்கு மேலாகவும் அமைந்திருக்கும், மனதை மையல் கொள்ளும் விதமாகவும் அமைந்திருக்கும், கண்கள் குளிரும் விதமாகவும் இருக்கும்.
சோலைகளில் வீற்றிருப்பர்

உலகில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடக் கூடிய ஆறுகள், நதிகளுக்கருகில் மரங்களும், செடி-கொடிகளும் நிறைந்த பசுமையான இடங்களில் சற்று நேரமாவது அமர்ந்திருக்க நம்முடைய உள்ளம் விரும்பும்.
அதற்காக செலவு செய்து பல மைல் தூரம் பயணிக்கவும் செய்கின்றோம்.
எத்தனை செலவு செய்தாலும், எத்தனை மைல் தூரம் பயணித்துச் சென்றாலும் அங்கு நம்மால் நிரந்தரமாக தங்கி இருக்க முடிவதில்லை.
சிறிது நேரம், அல்லது ஒரு சில நாட்களே தங்கி இருக்க நேரிடும். மீண்டும் வெயிலை நோக்கி, வியர்வையை நோக்கி வெகு விரைவில் திரும்பி விடுகின்றோம்.
ஆனால் மறுமையில் (இறைவனை) அஞ்சுவோருக்குத் தம் இறைவனிடம் சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அல்லாஹ்வை அஞ்சுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.

உலக வாழ்வில் மார்க்கம் அனுமதித்த வழியில் பொருள் சேர்ப்பதில், அதை நேசிப்பதில் தவறில்லை என்றாலும் இதையே முழு மூச்சாகக் கொண்டு வாழ்நாளை கடத்தி விடக் கூடாது.
அல்லாஹ்வை அஞ்சுவதற்கு ( வணங்கி வழிபடுவதற்கு) நேரத்தை ஒதுக்க வேண்டும், ஏன் என்றால் ? மறுமையின் நிரந்தர வாழ்க்கை அல்லாஹ்வை அஞ்சுவோருக்கே கிடைக்கும். என்று மேற்காணும் வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.
நிரந்தரமான மறுமை வாழ்வுக்கு சிறிது நேரத்தை ஒதுக்கி உழைக்க வேண்டும் இயன்றவரை நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் (தஃவா) பணியை செய்ய வேண்டும்.
எழுதியபடி நானும், வாசித்தப்படி நீங்களும் அமல் செய்யும் நன்மக்களாக வல்ல அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக!.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

பில்லி சூனியம்

முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பாழாக்குவதில் பில்லி சூனியம் முக்கிய இடத்தை வகிக்கின்றது.

திருக்குர் ஆனையும், உரிய முறையில் நபிமொழிகளையும் சிந்தித்தால் பில்லி சூனியம் என்பது ஏமாற்றும் தந்திர வித்தை தவிர வேறில்லை என்பதை அறியலாம்.

ஈமான் தொடர்புடைய பிரச்சனையாக இது உள்ளதால் இது பற்றி முழுமையாக ஆய்வு செய்து அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதால் கீழ்க்காணும் தலைப்புக்களில் பில்லி சூனியம் பற்றி விரிவாக அலசும் நூல்.

· இறைத்தூதர்களுக்கு சூனியக்காரர் என்ற பட்டம்
· மூஸா நபியும் அற்புதங்களும்
· ஈஸா நபியும் அற்புதங்களும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அற்புதங்களும்
· மூஸா நபியின் காலத்தில்...
சூனியத்தை உண்மை எனக் கூறுவோரின் ஆதாரங்கள்
· நபிகள் நாயகத்துக்கு சூனியம்
பாதுகாக்கப்பட்ட இறை வேதம்
· எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன்?
இறைத் தூதர்கள் நிராகரிக்கப்பட்டிருப்பர்
· இறைத்தூதர்கள் என்பதற்கான சான்றுகள்
சூனியம் வைக்கப்பட்டவர் அல்லர்
· ஹதீஸ்களும் மார்க்க ஆதாரங்களே!
முரண்பட்ட அறிவிப்புக்கள்
· 113, 114வது அத்தியாயங்கள்
முடிச்சுக்களில் ஊதும் பெண்கள்
· தவறான மொழிபெயர்ப்பு
சரியான மொழி பெயர்ப்பு
ஹாரூத் மாரூத்
இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம்
'ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது எவ்வித சாதனங்களையும் பயன்படுத்தாமல் உடல் அளவிலோ, உள்ளத்திலோ பாதிப்பு ஏற்படுத்த முடியும்' என்ற நம்பிக்கை அறியாத மக்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ளது.

முஸ்லிம் சமுதாயத்திலும் இந்த நம்பிக்கையுடையோர் கனிசமான எண்ணிக்கையில் காணப்படுகின்றனர். இது பில்லி, சூனியம், ஏவல், செய்வினை என்று பல்வேறு சொற்களால் குறிப்பிடப்படுகின்றது.

'ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி ஒருவன் இன்னொருவனின் உடலில் காயத்தையோ, வேதனையையோ ஏற்படுத்த முடியும்' என்பதை நாம் நம்பலாம். கண் கூடாக இது தெரிவதால் இதற்கு மார்க்கத்தின் அடிப்படையில் எந்த ஆதாரத்தையும் நாம் தேட வேண்டியதில்லை.

ஆனால் புறச் சாதனங்கள் எதையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலம் இது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த இயலும் என்றால் மார்க்கத்தில் அதற்கு ஆதாரம் இருக்க வேண்டும்.

திருக்குர்ஆனிலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளிலும் இது பற்றி கூறப்படுவது என்ன என்பதை நாம் மேலோட்டமாகப் பார்க்கும் போது முரண்பட்ட இரண்டு கருத்துக்களுக்கும் இடம் தருவது போல் அமைந்துள்ளன.

இதன் காரணமாகத் தான் முஸ்லிம் அறிஞர்களும் இந்த விஷயத்தில் முரண்பட்டு நிற்கின்றனர்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது முரண்பட்ட இரண்டு கருத்துக்களுக்கு இடமிருப்பது போல் தோன்றினாலும் கவனமாக ஆராயும் போது ஒரு கருத்து தான் சரியானது என்ற முடிவுக்கு நாம் வர முடியும்.

'மக்களை ஏமாற்றுவதற்காகவும், கவர்வதற்காகவும் செய்து காட்டப்படும் தந்திர வித்தைகள் தான் சூனியம்; உண்மையில் சூனியத்தின் மூலமாக எந்த அதிசயமும் நிகழ்வதில்லை' என்பது தான் சரியான அந்த முடிவாகும்.
சூனியம் என்பதற்கு அரபு மொழியில் ஸிஹ்ர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் இந்தச் சொல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை நாம் ஒவ்வொன்றாக ஆய்வு செய்தால் ஸிஹ்ர் என்பது பித்தலாட்டம், மோசடி, ஏமாற்றும் தந்திர வித்தை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

இறைத்தூதர்களுக்கு சூனியக்காரர் என்ற பட்டம்

மக்களை நல்வழிப்படுத்துவதற்காக இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களுக்கு தம்மை இறைத் தூதர்கள் என்று நிரூபிக்க சில அற்புதங்களை இறைவன் வழங்கினான்.
உதாரணமாக மூஸா நபியவர்கள் இறைவனின் கட்டளைப்படி தமது கைத்தடியைக் கீழே போட்டவுடன் அது சீறும் பாம்பாக உருமாறியது. கைத்தடி பாம்பாக உருமாறிய நிலையில் அதைத் தொட்டுப் பார்த்தாலும், எந்த வகையான சோதனைக்கு உட்படுத்தினாலும் அது பாம்பு தான்' என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகும். இது தான் அற்புதம் எனப்படுவது.

கைத்தடி பாம்பு போல் தோற்றமளித்து அதைத் தொட்டுப் பார்த்தாலோ, சோதனைக்கு உட்படுத்தினாலோ அது கைத்தடியாக இருந்தால், நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பது தெரிய வந்தால் அதைத் தந்திர வித்தை - மேஜிக் எனக் கூறுவோம்.

இறைத் தூதர்கள் செய்து காட்டிய அற்புதம் முதல் வகையிலானது. அதில் எந்த விதமான தில்லுமுல்லும், ஏமாற்றுதலும் கிடையாது.

ஆனாலும் இறைத் தூதர்கள் தமது தூதுத்துவத்தை நிரூபிக்கும் அற்புதங்களைச் செய்து காட்டிய போது அதனை அந்த மக்கள் அற்புதம் என்று நம்பவில்லை. மாறாக 'இவர் நமக்குத் தெரியாத வகையில் ஏதோ தந்திரம் செய்கிறார்; நம்மை ஏமாற்றுகிறார்' என்று அவர்கள் நினைத்தனர்.

இதைக் குறிப்பிட ஸிஹ்ர் - சூனியம் என்ற சொல்லையே அவர்கள் பயன்படுத்தினார்கள்.

இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரிடம் எந்தத் தூதர் வந்தாலும் பைத்தியக்காரர் என்றோ சூனியக்காரர் (ஸிஹ்ர் செய்பவர்) என்றோ கூறாமல் இருந்ததில்லை.

திருக்குர்ஆன் 51:52

ஸிஹ்ர் என்ற சொல்லுக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட அற்புதம்' என்பது பொருள் என்றால் இறைத் தூதர்களை நிராகரிப்பதற்கு ஸிஹ்ர் என்ற காரணத்தைக் கூறியிருக்க மாட்டார்கள்.

'இவர் எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. தந்திரம் செய்து நம்மை ஏமாற்றப் பார்க்கிறார். நடக்காததை நடந்தது போல் நம்ப வைக்கிறார்' என்ற கருத்தை உள்ளடக்கித் தான் நபிமார்களின் அற்புதங்களை ஸிஹ்ர் (சூனியம்) எனக் குறிப்பிட்டு நிராகரித்தனர்.

வானங்களும், பூமியும் வீணாக படைக்கப்படவில்லை.

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

الَّذِينَ يَذْكُرُونَ اللّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىَ جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ

அவர்கள் நின்றும்> அமர்ந்தும்> படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். ''எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்;10 எனவே நரக வேதனையிரிருந்து எங்களைக் காப்பாயாக!'' (என்று அவர்கள் கூறுவார்கள்) திருக்குர்ஆன்.3:191


வானங்களும், பூமியும் வீணாக படைக்கப்படவில்லை.

* * * * * * * * * *

அனைத்து நேரங்களிலும்.



உறங்கச் செல்வதற்கு முன் அல்லாஹ்வை நினைத்து அவனிடம் பாதுகாப்புக் கோரி பிரார்த்தித்து விட்டு அவனுடைய பெயரைக் கூறி உறங்குகிறோம்.



அதே போல் உறக்கத்திலிருந்து எழுந்ததும் (சிறு மரணத்திலிருந்து) உயிர் கொடுத்த இறைவனுக்கேப் புகழ் அனைத்தும் என்றுக் கூறி அவனுக்கு நன்றி தெரிவித்து விட்டேப் படுக்கையை விட்டு எழுகிறோம்.



கழிவறைக்கு செல்லும் முன் ஷைத்தானுடைய தீய சிந்தனைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கேட்டவர்களாக நுழைகிறோம்.



கழிவறையை விட்டு வெளியேறியதும் அவனுக்கு நன்றியை தெரிவித்தவர்களாக வெளியேறுகிறோம்.



அதனை அடுத்து அதிகாலை (ஃபஜ்ரு) தொழுகையை தொழுது விட்டு அல்லாஹ்வை நினைவு கூறுவதுடன், நமது தேவைகளையும் அவனிடம் கேட்டு விட்டே பள்ளியை விட்டு வெளியாகிறோம்.



உணவுக்கு முன் அல்லாஹ்வுடைய திருப்பெயர் கூறியப் பின்னரே உண்ணத் தொடங்குகிறோம்.



உண்டு முடித்ததும் அவனைப் புகழ்ந்து நன்றிக் கூறி விட்டே உண்ணுமிடத்தை விட்டு எழுகிறோம்.



வீட்டை விட்டு வெளியேறும் போது அல்லாஹ்விடம் பொறுப்பு சாட்டி விட்டு வெளியேறுகிறோம்.



மீண்டும் வீட்டுக்குத் திரும்பியதும் அவனின் பொருட்டால் நலமுடன் திரும்பியதை நினைத்து நன்றிக் கூறுகிறோம்.



இவ்வாறு பொழுது புலர்ந்ததிலிருந்து பொழுது அடையும் வரையில் அவர்கள் நின்றும்> அமர்ந்தும்> படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். என்ற அல்லாஹ்வின் கூற்றுக்கேற்ப நாள் முழுதும் இறைநினைவுகளில் மூழ்கித் திளைக்கின்றோம்.



சிந்திக்கத்தூண்டும் வானமும், பூமியும்.



பூமியில் தான் மனிதன் வசிக்கிறான், தனது குடியிருப்பை அமைக்கிறான் அந்த குடியிருப்பின் மீதும், மனிதர்கள் மீதும் இன்னும் பிற உயிரினங்களின் மீதும் புறஊதாக் கதிர்கள், விண் கற்கள் போன்றவை விழுந்து அழிவை ஏற்படுத்தாமல் வானமே முகடாக அமைந்து பாதுகாக்கிறது.



இன்னும் வானம் மழையை பொழிவித்து , பூமி தானியங்களை விளைவித்து மனிதர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது.



இது போன்ற எண்ணற்ற நன்மைகள் வானங்களும், பூமியும் படைக்கப்பட்டதில் இருப்பதை சிந்திக்கனிறோம்.



அதனால் இவைகள் கன்டிப்பாக வீணாக படைக்கப்பட வில்லை என்பதை சிந்தித்து உணருகிறோம்.,



இன்னும் வானங்களும், பூமியும் படைக்கப்பட்டது சாதாரண காரியமா ?.

இதை இறைவனல்லாது வேறு எவராலும் படைக்க முடியுமா ?.

என்றும் சிந்திக்கின்றோம்,அதனால் அவனைப் போற்றிப் புகழ்கின்றோம்.



இவ்வாறு இன்னுமுள்ள அல்லாஹ்வின் ஏனைய படைப்புகளையும் அதிகம் சிந்திப்பதன் மூலமாக இறைநம்பிக்கை மேலும், மேலும் வலுப்பெறும்.



நரகிலிருந்து பாதுகாவல்.



எந்தப் பரிந்துரையும் பயன் தர முடியாத இறுதித் தீர்ப்பு நாளில் நரகம் தீர்ப்பாக அமைந்து விட்டால் நம்மை அதிலிருந்து அங்கே காப்பது யார் ?. எது ?. யாருமில்லை, எதுவுமில்ரைல, அல்லாஹ்வைத் தவிற. !.



அதனால் உலக வாழ்க்கையில் நமது அன்றாடக் காரியங்களில் அல்லாஹ்வை நினைவு கூறுவதுடன், அவனுடைய படைப்புகளை சிந்தித்து அவனைப் போற்றிப் புகழ்வதுடன் இறைவா ! எங்களை நரக வேதனையிலிருந்து காப்பாயாக ! என்ற துஆவையும் சேர்த்துக் கூற வேண்டும். சேர்த்துக் கூறும் படியே அல்லாஹ் மேற்காணும் வசனத்தில் கட்டளையிடுகிறான்.



அல்லாஹ்வை அவனுடைய ஆற்றலுக்கேற்றவாறு புகழ்ந்து விட்டே நமது தேவைகளை கேட்க வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி இருப்பதையும் இந்த வசனம் உறுதிப் படுத்துகிறது.



எழுதியபடி நானும், வாசித்தப்படி நீங்களும் அமல் செய்யும் நன்மக்களாக வல்ல அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவாயாக !.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

வியாழன், 19 டிசம்பர், 2013

make any shot by just 1 blink


கூகுள் கண்ணாடியில் கண்சிமிட்டலில் புகைப்படம் எடுக்கும் புதிய வசதி

கூகுள் கிளாஸ் எனப்படும் அணிந்து கொள்ளும் வகையிலான கணினியில் புதிய தொழி்ல்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். இதன்படி இதை அணிந்திருப்பவர்கள் கண்சிமிட்டலின் மூலம் புகைப்படங்களை எடுக்க முடியும்.

அது மட்டுமல்லாது எக்ஸ் ஈ 12 (XE12) என்ற குறியீட்டோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய கண்ணாடியில் வீடியோக்களை யூ டியூபில் ஏற்றி பகிர்‌ந்து கொள்ளும் வசதியும், ஸ்கிரீன் லாக் வசதியும் உள்ளது.

அணிந்து கொள்ளும் வகையிலான சாதனங்களின் சந்தை வளர்ச்சியடைந்து வரும் நிலையில், அத்தகைய சாதனங்களில் இது போன்ற புது வித வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.

thanks @ NewGenerationMedia 

மது அடிமைத்தனம்



 டாக்டர் ஜி. ஜான்சன்

                                                   டாக்டர் ஜி. ஜான்சன்
          நம் சமூகத்தினரிடையே மதுவுக்கு அடிமையாவது மிகவும் சுலபமாகக் காணப்படுகின்றது.
          இதனால் பல குடும்பங்கள் பாழாகியவண்ணமுள்ளன.
          தற்போது இளம் வயதிலேயே குடிக்க பழகிக்கொண்டு எதிர்காலத்தையே வீணடிக்கும் பல இளைஞர்களும் பெருகி வருகின்றனர்.
          இவர்கள் குடி போதையில் தகாத செயல்களில் ஈடுபட்டு குற்றவாளிகளாகின்றனர். கொலை, தற்கொலை, விபத்து கொள்ளை, வன்முறை, கற்பழிப்பு போன்ற தகாத செயல்களின் பின்னால் குடி என்ற அரக்கன் உள்ளது குடி போதையில் தெரிவதில்லை.

           மதுவின் சரித்திரம் சரித்திர காலத்திற்க்கு முட்பட்டது எனலாம். இதை எப்படியோ எல்லா நாடுகளிலும் மனிதன் எப்படியோ கண்டுபிடித்து அருந்தி மகிழ்கிறான்.

இதை அளவோடு அருந்தினால் உடலுக்கு நல்லது என்றாலும், அளவுக்கு மீறினால் இது விஷத்தன்மை மிக்கது என்பது அநேகமாக அனைவருக்கும் தெரிந்த உண்மைதான்.

அமெரிக்காவில் மட்டும் வருடத்தில் 100,000 க்கு மேற்பட்டவர்கள் மதுவுக்கு அடிமையானதால் அகால மரணம் அடைகின்றனர். உலகின் இதர நாடுகளிலும் இந்த அளவில் இருந்தாலும் சரியான புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை.

மதுவின் விலை வருடா வருடம் உயர்ந்து வந்தாலும், குறைந்த விலையில் கள்ளச் சாராயம் கிடைப்பதால் ஏழைகளும் இதை வாங்கிப் பருகும் அவலம் உள்ளது. இவர்கள் வீட்டில் உள்ள பொருட்களை விற்றும்கூட மது வாங்கி பருகுவதுண்டு. அதோடு வீட்டில் மனைவியையும், பிள்ளைகளையும் கவனிக்காமல் அவர்களையும் துன்புறுத்துவதுண்டு .

சில நாடுகளில் மது தாரளாமாக கிடைக்கிறது. சில நாடுகளில் மது விலக்கு கட்டாயப் படுத்தப் பட்டுள்ளது.சில மதங்கள் குடிப்பது பாவம் என்று கூறி தடை விதிக்கின்றன. சில மதங்கள் இதை பெரிது படுத்துவதில்லை.

வள்ளுவர்கூட கள்ளுண்ணாமை எனும் அதிகாரத்தில் பத்து குறள்கள் எழுதியுள்ளார். அவற்றில் உடல் நலக் கேடு உண்டாக்கும் மது பற்றி இவ்வாறு அருமையாகக் கூறியுள்ளார்:

கையறி யாமை யுடைத்தே பொருள் கொடுத்து

மெய்அறி யாமை கொளல் .”

மதுவை உட்கொண்ட உடனேயே லேசான மனநிலை மாற்றம் முதல், முற்றாக சுயக் கட்டுப்பாடு இல்லாத நிலைக்கு ஒருவர் உட்படலாம். பார்வை, பேச்சு, அங்க அசைவுகள் கூட மாறலாம்.

இதை தற்காலிக உடல் நச்சூட்டு ( temporary systemic poisoning ) எனலாம். இதையே போதை ( alcohol intoxiication or drunkennness ) என்கிறோம்.

தொடர்ந்து குடிக்கவில்லையெனில் ஒரு சில மணி நேரத்தில் இந்த தற்காலிக நிலை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும். ஒவ்வொரு முறையும் குடிக்கும் போது இதுபோன்ற தற்காலிக நிலை எழும்.

இரத்தத்தில் 0.08 சதவிகிதம் மது இருந்தால் அதை போதைக்கான குறியீடாக குற்றப் பிரிவினர் நிர்மாணிக்கின்றனர் இவர்கள் வாகனம் ஓட்டுவதும் சட்டப்படி குற்றமாகும்.

அளவுக்கு அதிகமான மது இரத்தத்தில் இருக்க நேர்ந்தால் மூளை பாதித்து நினைவு இழந்து உயிருக்கு ஆபத்தாகலாம்.

நீண்ட கால மது அடிமைத்தனம் ( Chronic Alcoholism ) தொடரக்கூடிய ஆபத்தான பின்விளைவுகளை உண்டாக்கவல்லது. இப்படிப் பட்டவர்களின் உடல் மதுவுக்குப் பழக்கப்பட்டு , அதிக மதுவை நாடும். அதோடு மதுவைச் சார்ந்த வாழ்க்கைக்குத் தள்ளப்படுவர்.

இவர்களால் மதுவை நிறுத்துவது சிரமம். இப்படி இவர்கள் அடிமையானது அடுத்தவருக்கு தெரியலாம் அல்லது தெரியாமல் கூட போகலாம். இவர்களில் ஒரு சிலர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு பிரச்னைகளில் மாட்டிக்கொள்வதுண்டு. வேறு சிலரோ ஓரளவு குறைத்துக்கொண்டு சாதாரண நிலையில் உள்ளதுபோல் சமாளித்து விடுவதுண்டு. ஆனால் இந்த இரண்டு வகையினரும் மதுவுக்கு அடிமையானவரே .

மது அடிமைத்தனத்தின் அறிகுறிகள்

* தற்காலிக ஞாபக மறதி, திடீர் நினைவிழத்தல் ( Blackouts )

* குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடம் அடிக்கடி சண்டைச் சச்சரவு

* இளைப்பாற, உற்சாகமடைய, தூங்க, பிரச்னையை எதிர்நோக்க, இயல்பாக இருக்க மதுவை நாடுதல்.

* மதுவை நிறுத்தினால் தலைவலி, பரபரப்பு, பயம், தூக்கமின்மை, குமட்டல் போன்றவை உண்டாகுதல்.

* நடுங்கும் கைகள், தொடந்த வயிற்றுப் போக்கு, தனிமையில் குடிப்பது, காலையிலேயே குடிப்பது. இரகசியமாகக் குடிப்பது.

மது அடிமைத்தனத்தால் உண்டாகும் உடல் ரீதியான வியாதிகள்

* இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. சக்திக்கு எரிபொருள் சர்க்கரை. அளவுக்கு அதிகமான சர்க்கரை கெடுதி என்றாலும், குறைவான சர்க்கரையும் கெடுதியே.

* வயிற்றில் புண்ணை உண்டுபண்ணி அது புற்று நோயாகவும் மாறும் ஆபத்து உள்ளது.

* கணைய அழற்சியை உண்டுபண்ணி , கடுமையான வலியை உண்டுபண்ணுவதோடு புற்று நோயாகவும் மாறலாம்.

* உணவுக் குழாய், வயிறு, குடல் போன்றவற்றில் புற்று நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகமாகிறது.

* கல்லீரல் சுருங்கி கரணை நோய் ( Cirrhosis Liver ) உண்டாகி கல்லீரல் செயல் இழந்து உயிர் பிரியும். மதுவுக்கு அடிமையானவர்களில் ஐந்து பேர்களில் ஒருவர் இதனால் பாதிப்புக்கு உள்ளாகிறார்.

* சிறுநீரகம், மூளை, இருதயம், இரத்தக் குழாய்கள் போன்றவையும் பாதிப்புக்கு உள்ளாகி உயிருக்கு ஆபத்தை உண்டுபண்ணலாம்.

மது அடிமைத்தனத்துக்கு முக்கிய காரணங்கள்

மரபணு, மனோவீயல் , உடல், சுற்றுச் சூழல், சமுதாயம் ஆகியவை முக்கியப் பங்கு வகிப்பதாகக் கருதப் படுகின்றன. இவை ஆளுக்கு ஆள் மாறலாம். இவற்றில் மரபணுவின் பங்கு முக்கியமானது. பெற்றோர் ஒருவருக்கு மதுப் பழக்கம் இருந்தால் பிள்ளைக்கு நான்கு அல்லது ஐந்து தடவைகள் அதிகமாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒரு சில பிள்ளைகள் வைராக்கியத்தின் மூலம் இதிலிருந்து தப்பும் வாய்ப்பும் உள்ளது.

           சிகிச்சை முறைகள்

மது அருந்துவதை நிறுத்துவதே நிரந்தரமான குறிக்கோள். ஆனால் மதுவுக்கு அடிமையானவர் திரும்பத் திரும்ப அதை நாடும் நிலை ஏற்படுவதால் இந்த குறிக்கோள் நிறைவேறுவதில் சிரமம் உள்ளது. அடிமையானவர்கள் எப்போதும் ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்மதுவுக்கு மீண்டும் திரும்ப. இதனால் சிகிச்சை முறைகள் வெற்றி காண்பதில் சிரமம் உள்ளது.

முன்பெல்லாம் மனதில் உறுதி இல்லாதவர்கள், குணத்தில் மாறுபட்டவர்கள் என்று இவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர். ஆனால் இப்போது இது யாரை வேண்டுமானாலும் தாக்கவல்ல ஒரு வியாதியாகக் கருதப்படுகிறது.

சமுதாயத்தின் ஊக்குவிப்பும், தன்முனைப்பும் மது அடிமைத்தனத்தில் உள்ளவர்கள் அதிலிருந்து வெளிவர பெரிதும் பயனளிக்கும் என்று கருதப் படுகிறது. இவர்களில் 50 சதவிகிதத்தினர் நிரந்தரமாகக் குணம்பெறும் வாய்ப்பு உள்ளது. ஆனால் சமுதாயத்தால் புறக்கணிக்கப் பட்டவர்கள், உடல் நலம் குன்றியவர்கள், தன்முனைப்பு இல்லாதவர்கள் திரும்பவும் மதுவுக்கு அடிமையாகும் வாய்ப்பு நிறையவே உள்ளது. நீண்ட நாட்கள் குடிக்காமல் இருப்பது, குறைவான அளவு குடிப்பது, ஆரோக்கியமான உடல் நலம், சமுதாய நிகழ்வுகளில் பங்கேற்பது போன்றவை வெற்றியின் அளவுகோல்கள்

பாதிப்புக்கு உள்ளானவர் முதலில் தனக்கு மதுப் பிரச்னை உள்ளது என்பதை அறிந்து அதை நிறுத்திவிட சம்மதிக்கவேண்டும். இதை குணப்படுத்தி மதுப் பழக்கத்திலிருந்து விடுபடலாம் என்று நம்ப வேண்டும்.

சிகிச்சையில் இரண்டு பிரிவுகள் உள்ளன:

* வெளியேறுவது அல்லது நச்சுத்தன்மையை உடைப்பது – Withdrawal or Detoxification.

வெளியேறினாலும் மீண்டும் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுவதால் குணம்பெறுதல் மிகவும் சிரமம்தான். தொடர்ந்து குடிக்காமல் இருப்பது பெரும் சவாலாகும். வெளியேறியதும் பரபரப்பு, தூக்கமின்மை போன்றவை உண்டாகும். நீண்ட நாட்கள் அடிமையானவருக்கு நடுக்கம், பயம், பரபரப்பு பிரமை, மருட்சி, மாயத் தோற்றம் ( Hallucinations of Delirium Tremens ) உண்டாகும்.இவற்றை விலக்கல் நோய்க் குறி ( Withdrawal Syndrome ) என்று அழைப்பதுண்டு. இதை முறையாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறாவிடில் 10 சதவிகிதத்தினர் இறக்க நேரலாம்.

இதற்கு சில மருந்துகள் உள்ளன.

* டைசல்பிராம் ( Disulfiram ) – இந்த மருந்து மதுவின் ஜீரணிப்பை தடுக்கிறது. இதனால் கொஞ்சம் மது அருந்தினாலும் குமட்டல், வாந்தி, குழப்பம் , மூச்சுத் திணறல் உண்டாகி மேலும் குடிப்பதை வெறுக்கச் செய்கிறது.

* நேல்ட்ரெக்சொன் ( Naltrexone ) – மதுவை நாடுவதைக் குறைக்கும் மருந்து இது.

* பென்ஸோடையஜெப்பீன்ஸ் ( Benzodiazepines ) – இவை பரபரப்பு, பயம், நடுக்கம், தூக்கமின்மை போன்றவற்றுக்குப் பயன்படும்.

* குணமாதல் – Recovery

முற்றிலும் குணமாக மீண்டும் மதுவுக்குத் திரும்பாமல் இருக்க வேண்டும். இதற்கு மருத்துவரின் கண்காணிப்பு, உறவினரின் ஒத்துழைப்பு, தன்முனைப்பு ஆகியவை இன்றியமையாதவை.

????? CV/Resume/Bio data


Hadis


அல்லாஹ்வைப்
பற்றி எச்சரிக்கை செய்தல்

நபி (ஸல்) அவர்கள் தம்முடைய
தோழர்களுக்கு அல்லாஹ்வின்
அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள். எந்தக்
காரியத்தைச் செய்தால்
இறைவனின் கோபமும், தண்டனையும்
கிடைக்குமோ அதைப் பற்றியும்
எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

நான் என் அடிமையைச் சாட்டையால்
அடித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது எனக்கு பின்னால்
யாரோ நினைவிருக்கட்டும் அபூமஸ்வூத்
என்று கூறியதைக் கேட்டேன். ;போது நான்
கோபத்தில் இருந்ததால் அந்தக்
குரலை (நன்கு) விளங்கிக்
கொள்ளவில்லை. அவர்
என்னை நெருங்கி வந்த
போது (பார்த்தால்)
அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் இருந்தார்கள்.
அப்போது அவர்கள் நினைவிருக்கட்டும்
அபூமஸ்வூத், நினைவிருக்கட்டும்
அபூ மஸ்வூத் என்று சொல்லிக்
கொண்டிருந்தார்கள்.
உடனே நான் என் கையிலிருந்த சாட்டையைக்
கீழே போட்டேன். அப்போது அவர்கள்
நினைவிருக்கட்டும் அபூமஸ்வூத்
உமக்கு இந்த அடிமையின் மீதிருக்கும்
அதிகாரத்தை விடப்
பன்மடங்கு அதிகாரம் உம்
சொன்னார்கள்அல்லாஹ்வுக்குமீதுஇருக்கிறதுஎன்று.
நான் இநதன் பின்னர் ஒரு போதும்
நான் எந்த அடிமையையும் அடிக்க
மாட்டேன் என
உறுதிமொழிந்தேன்.

நூல் : முஸ்லிம் 3413

முஸ்லிமின்
மற்றொரு அறிவிப்பில் :
நபி (ஸல்) அவர்கள் இந்த அடிமையின்
மீதிருக்கும் அதிகாரத்தை விட
பன்மடங்கு அதிகாரம்
உம்மீதுஅல்லாஹ்வுக்குஇருக்கிறதுஎன்றுசொன்னதும்
அச்சத்தால் எனது கையிலிருந்த
சாட்டை கீழே விழுந்துவிட்டது என
அபூமஸ்வூத் (ரலி) அவர்கள்
கூறினார்கள்.
முஸ்லிமின்
மற்றொரு அறிவிப்பில் :
அல்லாஹ்வின் உவப்புக்காக
(இவரை நான்
விடுதலை செய்துவிட்டேன்) இவர்
சுதந்திரமானவர் என்று கூறினார்கள்.
உடனே நபி (ஸல்) அவர்கள்
அபூதர்ரே அறிந்து கொள் நீ
இவ்வாறு செய்திருக்காவிட்டால்
நரகம் உம்மை எரித்திருக்கும்
அல்லது நரகம் உம்மைத் தீண்டியிருக்கும்
என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 3414

தவறைச் சுட்டிக் காட்டுதல்

நபித்தோழர்களும் மனிதர்கள்தான்,
நபித்தோழர்கள் தவறு செய்யும்
பட்சத்தில் உடனே நபி (ஸல்) அவர்கள்
அந்தத் தோழரை கண்டித்தும் விடுவார்கள்.
காரணம் அப்போதுதான் அவர்கள்
அந்தத் தவறை விட்டும்
தவிர்ந்து கொள்வார்கள்.

மஅரூர் பின் சுவைத் அவர்கள்
கூறியதாவது: நான் அபூதர்
அல்கிஃபாரீ (ரலி)
(அவர்களை மதீனாவுக்கருகில் உள்ள
"ரபதா' எனுமிடத்தில் சந்தித்தேன்.
அப்போது) அவர்கள் மீது ஒரு மேலங்கியும்,
அவர்களுடைய அடிமையின்
மீது (அதே மாதிரியான) ஒரு மேலங்கியும்
இருக்கக் கண்டேன். நான்
(அவர்களிடம்), "(அடிமை அணிந்திருக்கும்)
இதை நீங்கள் வாங்கி (கீழங்கியாக)
அணிந்து கொண்டால்
(உங்களுக்கு) ஒரு ஜோடி ஆடையாக
இருக்குமே! இவருக்கு வேறோர் ஆடையைக்
கொடுத்துவிடலாமே''
என்று சொன்னேன்.
அப்போது அபூதர் (ரலி) அவர்கள்
கூறினார்கள்:
எனக்கும் ஒரு மனிதருக்கும்
இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.
அம்மனிதரின் தாய்
அரபியரல்லாதவர் ஆவார். ஆகவே,
நான் அவருடைய தாயைக்
குறிப்பிட்டு (இழிவாக)ப் பேசிவிட்டேன்.
உடனே அம்மனிதர் நபி (ஸல்)
அவர்களிடம் என்னைப் பற்றி முறையிட்டார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம்,
"நீர் இன்னாரை ஏசினீரா?''
என்று கேட்டார்கள். நான், "ஆம்''
என்று சொன்னேன். "அவருடைய
தாயைக் குறிப்பிட்டு (இழிவாக)ப்
பேசினீரா?'' என்று கேட்டார்கள். நான்
(அதற்கும்) "ஆம்'' என்று பதிலளித்தேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "நீர்
அறியாமைக் காலத்துச் கலாச்சாரம்
உள்ள மனிதராகவே இருக்கின்றீர்''
என்று சொன்னார்கள்.
நான், "வயோதிகத்தை அடைந்துவிட்ட இந்தக்
காலகட்டத்திலுமா?
(அறியாமைக்கால குணம்
கொண்டவனாய் உள்ளேன்?)''
என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள்,
"ஆம்'' என்று கூறிவிட்டு,
"(பணியாளர்களான) அவர்கள்
உங்கள் சகோதரர்கள் ஆவர்.
அவர்களை அல்லாஹ் உங்கள்
ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ளான்.
ஆகவே, யாருடைய ஆதிக்கத்தின் கீழ்
அவருடைய சகோதரரை அல்லாஹ்
வைத்துள்ளானோ அவர் தம் சகோதரருக்குத்
தாம் உண்பதிலிருந்து உணவளிக்கட்டும்.
தாம்
அணிவதிலிருந்து அவருக்கு அணியத்
தரட்டும். அவரது சக்திக்கு மீறிய
பணியை அவருக்குக்
கொடுத்து அவரைச் சிரமப்படுத்த
வேண்டாம்.
அவ்வாறு அவரது சக்திக்கு மீறிய
பணியை அவருக்குக்
கொடுத்தால் அவருக்குத்
தாமும் ஒத்துழைக்கட்டும்''
என்று கூறினார்கள்.

நூல்கள் : புகாரீ 6050, முஸ்லிம்

அபூதர் (ரலி) அவர்களை நபி (ஸல்)
அவர்கள் கண்டித்ததும் தம்முடைய
நடவடிக்கையே மாற்றி அமைக்கின்றார்கள்.
தான் அணிந்திருக்கும்
அதே ஆடையை தன்னுடைய அடிமைக்கும்
அணிவிக்கின்றார்கள். தான்
சாப்பிடும்போது தன்னுடைய
அடிமையோடு சேர்ந்து சாப்பிடுகின்றார்.
அடிமையின் சக்திக்கு அப்பாற்பட்டு எந்த
வேலையையும் அபூதர் (ரலி) அவர்கள்
கொடுக்கவில்லை.

தாராளமாகக்
கொடுத்தல்

நபி (ஸல்) அவர்கள் தம்முடைய
தோழர்களுக்குபொருளாதாரத்தைவாரிக்
கொடுக்கக்கூடியவர்களாக
இருந்தார்கள். தம்மிடம் இருப்பதில்
கஞ்சத்தனம் காட்டமாட்டார்கள்.

ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள்
கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள், "ஹுனைன்'
போரிலிருந்து திரும்பி வந்த போது நான்
அவர்களுடன்
சென்று கொண்டிருந்தேன்.
மக்களும் உடன் இருந்தனர்.
அப்போது (கிராம) மக்கள் நபியவர்களைச்
சூழ்ந்து கொண்டு (தர்மம்)
கேட்கலானார்கள்; "சமுரா' என்னும்
(கருவேல) முள் மரம் வரை நபி (ஸல்)
அவர்களை நெருக்கித்
தள்ளி விட்டார்கள். நபியவர்களின்
சால்வை முள்மரத்தில் சிக்கிக்
கொண்டது. ஆகவே நபி (ஸல்)
அவர்கள் சற்று நின்று, "என்
சால்வையை என்னிடம்
கொடுங்கள். என்னிடம் இந்த
முள் மரங்களின் எண்ணிக்கையில்
ஒட்டகங்கள் இருந்திருந்தாலும் கூட
அவற்றை உங்களிடையே பங்கிட்டிருப்பேன்.
பிறகு என்னை நீங்கள் கருமியாகவும்
காண மாட்டீர்கள்;
பொய்யனாகவும் காண
மாட்டீர்கள்; கோழையாகவும் காண
மாட்டீர்கள்'' என்று கூறினார்கள்.

நூல் : புகாரீ 2821