Tamilnadu Interim Budget updates: இடைக்கால பட்ஜெட்: புதிய அறிவிப்புகள் ஏன் இல்லை? -தமிழக அரசு
17 2 2026
தமிழகத்தின் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இந்த ஆண்டின் இடைக்கால பட்ஜெட் மதிப்பீட்டின்படி, மாநிலத்தின் வருவாய்ப் பற்றாக்குறை 48,696.32 கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சரின் கணிப்புப்படி, 2027-28 நிதியாண்டில் இது 42,964.61 கோடி ரூபாயாகவும், அதற்கடுத்த 2028-29 நிதியாண்டில் 35,115.33 கோடி ரூபாயாகவும் குறைய வாய்ப்புள்ளது. மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) மதிப்பில் நிதிப்பற்றாக்குறையின் விகிதம் 2.99 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தவும், பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்தவும் புதிய கடன்களைப் பெறுவது தவிர்க்க முடியாததாகிறது. அந்த வகையில், 2026-27 நிதியாண்டில் தமிழக அரசு 1,78,308.05 கோடி ரூபாய் அளவிற்கு மொத்தக் கடன் பெறத் திட்டமிட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-interim-budget-live-update-today-11114769





