ஜீ, ஒரு சின்ன கதை சொல்லவா.....?
source https://www.facebook.com/photo/?fbid=1643934123454083&set=a.106377510543093
தமிழ்நாட்டில் அண்ணாதுரை என்று ஒரு தலைவர் இருந்தார்.
அவரை கட்சிக்காரர்களும், திராவிட உணர்வாளர்களும் "அண்ணா" என்றும், எங்களைப் போன்ற பொது ஜனங்கள் " அறிஞர் அண்ணா" என்றும் அன்போடு அழைப்போம்.
இதே அண்ணாதுரை எங்களுக்காக விட்டுச் சென்றிருக்கும் சீதனம், உரிமை, பெருமை என்றால்
1. இந்த மண்ணிற்கு தமிழ்நாடு என்ற பெயர்
2. சுயமரியாதைத் திருமணம்
3. இரு மொழிக் கொள்கை
இன்று தமிழ்நாட்டு இளைஞர்கன் பெருவாரியாக அமெரிக்க, ஐரோப்பிய, ஆஸ்ட்ரேலியா போன்ற நாடுகளில் கோலோச்சக் காரணம் அண்ணா எங்களுக்காகக் கொடுத்துச் சென்ற மூன்றாவது சீதனமான இரு மொழிக்கொள்கை.
ஜீ, எங்கள் அண்ணா பேசிய ஆங்கில உரை கேட்டு இந்திய பாராளுமன்றம், அமெரிக்க அறிஞர் சபையும் கூட ஆச்சரியப் பார்வை பார்த்ததுண்டு.
நேரு போன்ற மெத்தப் படித்தவர்களே அண்ணாவின் ஆங்கிலச் சொல்லாட்சி கண்டு புருவம் உயர்த்திய நிகழ்வுகளும் உண்டு.
தமிழ்நாடு இன்று வளர்ச்சிக் குறியீட்டில் முன்னிலையிலும், பொருளாதாரம், மருத்துவம் என அனைத்துத் துறைகளிலும் முன்னிலை வகுப்பதற்குக் காரணம் இருமொழி கொள்கைதான்.
ஹிந்தி மொழி நல்ல மொழிதான். அதை நாங்கள் குறை சொல்லவில்லை. எங்களுக்கு வேண்டாம் என்றுதான் சொல்கிறோம்.
எங்கள் மொழி தொன்மையானது என்பதற்காய் நாங்கள் உங்களை தமிழை படிக்கச் சொல்லவில்லை.
உலகத் தொடர்பு மொழியாம் ஆங்கிலம் படியுங்கள் ஜீ.
தமிழ்நாட்டு இருமொழி கொள்கை உங்களுக்கு வழிகாட்டும். ஹிந்தி என்கிற பேரினவாதத்தை, தாங்கள் தான் என்கிற
ஆணவத்தையும்
தூக்கி எறிந்துவிட்டுச் சிந்தித்துப் பார்த்தால்
உண்மை விளங்கும்.
எங்கள் நாட்டின் பிரதமர் ஒருவர் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளும் புரியாமல், பதில் சொல்லவும் தெரியாமல் உலக அரங்கே பார்த்துக் கேலி செய்யும் விதத்தில் தலை குனிந்து நின்றது இந்திய நாட்டிற்கான தலைகுனிவு.
உங்கள் கையில் அதிகாரம் இருப்பதால் ஹிந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான் நிதி தருவோம் என மாநிலங்களை மிரட்டலாம்.
அமெரிக்கர்களோ இதர உலக நாட்டவர்களோ உங்கள் வசதிக்காக ஹிந்தி படிக்க மாட்டார்கள்.
நம்ம நிர்மலா ஜீ யின் நுண் அறிவு பட்ஜெட் ஒதுக்கீடுகள் வெளிநாட்டவரை ஒருபோதும் பாதிக்காதல்லவா?
நிதியின் பெயரால் மிரட்ட முடியாதல்லவா ?
எங்கள் அண்ணா நமது நாடாளுமன்றத்தில் பேசிய வார்த்தைகள்,
"அதிக எண்ணிக்கையில் உள்ளது என்பதற்காக வைக்க வேண்டுமென்றால் காக்கையைத்தான் நாம் தேசியப் பறவையை வைத்திருக்க வேண்டும். எண்ணிக்கையில் சிலவே என்றாலும் ஏதோ ஒரு வகையில் சிறப்பு என்பதால்தான் மயிலை தேசியப் பறவையாக வைத்திருக்கிறோம்" என்றார்.
அதே போல குட்டி எலி, தாய் எலி போய் வருவதற்காக சின்னதாக ஒரு வழியும், பெரிதாக ஒரு வழியும் ஏற்படுத்தத் தேவையில்லை. ஒரே ஒரு பெரிய வழி இருந்தால் போதும் குட்டியும், தாயும் அந்த பெரிய வழியில் வந்து போய்விடும் என்ற உதாரணத்தைச் சொல்லி தமிழ்நாட்டு மக்கள் வடவர்களிடம் தொடர்புகொள்ள ஹிந்தியும், வெளிநாட்டவரோடு தொடர்பு கொள்ள ஆங்கிலமும் தனித்தனியாகப் படிக்கத் தேவையில்லை. ஒரே ஒரு மொழி போதும் அது உலகத் தொடர்பு மொழியான ஆங்கிலம் போதும் என்றார்.
மும்மொழி என்று சொல்லிவிட்டு ஆங்கிலம் கூட சொல்லித் தராமல், ஹிந்தி என்கிற ஒரு மொழியோடு முடங்கிப் போய்விட்டு உங்களுக்காகவும் சேர்த்து மும்மொழி கொள்கையை எங்கள் மீது திணிப்பது அநீதி மட்டுமல்ல அறிவீனமும் கூட.
உங்க சுமையையும் நாங்கள் தூக்கிச் சுமக்க வேண்டும் என்று எண்ணாமல் இருமொழிக் கொள்கையைக் கடைபிடித்து ஆங்கிலம் படிக்க ஆவன செய்யவும்.
மும்மொழிக் கொள்கை என்கிற பம்மாத்து இல்லாது சிரத்தையோடு இருமொழிக் கொள்கை பயிற்றுவிக்கப்பட்டிருந்தால் வடநாட்டு இளைஞர்கள் வேலை இல்லாத சூழலில் தமிழ்நாடு நோக்கிப் படையெடுப்பதற்குப் பதிலாக ஃபாரின் கன்ட்ரிகளுக்கு படையெடுத்திருப்பார்கள், நீங்களும் அமெரிக்க ஊடகத்திற்கு முன் ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்வி புரியாமல் திருதிருவென்று விழித்துக்கொண்டு நிற்க வேண்டிய சூழலும் வந்திருக்காது ஜீ.
குறைந்த பட்சம் எங்கள் அண்ணாவின் வழிகாட்டுதலை பின்பற்ற முயலுங்கள். உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கலாம்.
வாழ்த்துக்கள்.
ஒரு சாதாரண இந்தியக் குடிமகன், பெருமைமிகு தமிழ்மகன்.





