புதன், 19 மார்ச், 2025

கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட ரயில்வே தேர்வு… தமிழ்நாட்டு தேர்வர்கள் பரிதவிப்பு!

 ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்கள் ஆர்.ஆர்.பி. எனப்படும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பதவிக்கான ஆட்சேர்ப்பு பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 493 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கான எழுத்துத் தேர்வு சமீபத்தில் நடந்து முடிந்தது.

இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்றும், நாளையும் (மார்ச் 19, 20) இரண்டாம் நிலை கணினித் தேர்வு (CBT 2) நடைபெற இருந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தேர்வு மையங்களுக்குச் சென்ற தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நோட்டீஸ்கள் தேர்வு மையங்களில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான மாற்றுத் தேதி ரயில்வே தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்வு எழுதச் சென்றவர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.


source https://news7tamil.live/railway-exam-cancled-at-the-last-minute-candidates-shocked.html

Related Posts: