ஞாயிறு, 30 மார்ச், 2025

பணமில்லையா? மனமில்லையா? - மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி ஸ்டாலின் எக்ஸ் பதிவு

 3- 3 25

stalin  protest

புகைப்படம்: ஸ்டாலின் எக்ஸ் பதிவு

மத்திய அரசு கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4,034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதி வழங்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் 100 நாள் வேலை உறுதி திட்டத்துக்கு ரூ.4,034 கோடி நிதியை வழங்காத மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “ காந்தியை பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை. இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இரத்த ஓட்டமாக ஐக்கிய முற்போக்க கூட்டணி அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது இரக்கமற்ற பாஜக அரசு.

உங்களுக்கு வேண்டப்பட்ட கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய் கடனை கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே? வேகாத வெயிலில் உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை? பணமில்லையா அல்லது மனமில்லையா?தமிழ்நாடெங்கும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கழக உடன்பிறப்புகளும் ஏழை மக்களும் எழுப்பும் குரல் டெல்லியை எட்டட்டும்! அரசின் மனம் இரங்கட்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/stalin-x-page-post-about-mahatma-gandhi-100-days-work-salary-pending-8905580

Related Posts: