சனி, 29 மார்ச், 2025

100 நாள் வேலை நிதி: பணமில்லையா? மனமில்லையா? -ஸ்டாலின் கேள்வி

 

28 3 25

a

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மத்திய அரசை குற்றஞ்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, இரத்த ஓட்டமாக #UPA அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட #MGNREGA மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது இரக்கமற்ற பா.ஜ.க. அரசு


உங்களுக்கு 'வேண்டப்பட்ட' கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய்க் கடனைக் கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே? வேகாத வெயிலில் உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை? பணமில்லையா அல்லது மனமில்லையா? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாடெங்கும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கழக உடன்பிறப்புகளும் ஏழை மக்களும் எழுப்பும் குரல் டெல்லியை எட்டட்டும்! #SadistBJP அரசின் மனம் இரங்கட்டும் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்


source https://tamil.indianexpress.com/tamilnadu/bjp-is-trying-to-abolish-the-100-day-work-program-cm-stalin-accuses-8902529

Related Posts:

  • நாங்கள் விரும்பினால் தான் நீங்கள் உயிரோடு இருக்க முடியும் முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை : நாங்கள் விரும்பினால் தான் நீங்கள் உயிரோடு இருக்க முடியும் - உமாபாரதி வெறித்தன பேச்சு........!!  இந்துத்துவ தலை… Read More
  • Documentary On Kashmir Why The Government Doesn’t Want You To Watch This Documentary On Kashmir The documentary has been twice stopped from being screening at the Univer… Read More
  • Islam மாற்றார்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்லும் நமக்கு. கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான கேள்விகளுக்கான பதில். கண்டிப்பாக அனைவரும் படிக்க தவர… Read More
  • நூஹ் நபி நூஹ் நபியின் கப்பல் தங்கிய மலை கண்டுபிடிப்பு – விஞ்ஞானம்.இதனை முழுமையாக படிக்கவும். படித்த பின் இதனை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும். “திருக… Read More
  • News கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.முடிவு அறிவிக்கப்பட்ட 205 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி… Read More