28 3 25
/indian-express-tamil/media/media_files/2025/03/28/2ZHBft0BqxQwqgTnRRZV.jpg)
மே மாதம் ஒன்றாம் தேதி முதல் ஏ.டி.எம் பணப்பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை உயர்த்தி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ரூ. 21-ல் இருந்து ரூ. 23-ஆக இதன் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இன்று (மார்ச் 28) வெளியிடப்பட்ட அறிக்கையில் இது குறித்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதனடிப்படையில், ஒரு ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி அதே வங்கி ஏ.டி.எம் மையத்தில் இருந்து 5 முறை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ள முடியும்.
இது தவிர மற்ற வங்கி மெட்ரோ ஏ.டி.எம் மையத்தில் மூன்று முறையும், மெட்ரோ அல்லாத ஏ.டி.எம் மையத்தில் இருந்து ஐந்து முறையும் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இந்த இலவச பணப்பரிவர்த்தனை எண்ணிக்கை தாண்டும் போது, ஒரு முறை பணம் எடுத்தால் ரூ. 23 கட்டணமாக வசூலிக்கப்படும்.
இந்த நடைமுறை மே மாதம் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே, இதற்கு ஏற்றார் போல் வாடிக்கையாளர்கள் தங்கள் பணப்பரிவர்த்தனைகளை திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
source https://tamil.indianexpress.com/business/banking-finance-rbi-announces-increase-in-atm-fee-effective-from-may-1-2025-8901794