25 கிலோ 100 கி.மீ வரை அனுமதி: அரசு பஸ்ஸில் மகளிர் சுய உதவிக் குழுவுக்கு சலுகை
/indian-express-tamil/media/media_files/2025/03/11/fi3kRLpXQE4cdELqOOgM.jpg)
தமிழக அரசுப் பேருந்துகளில் மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஏ.சி பேருந்து நீங்கலாக நகர மற்றும் புறநகர் பேருந்துகளில் பயணிக்கும்போது இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழக அரசுப் பேருந்துகளில் மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஏ.சி பேருந்து நீங்கலாக நகர மற்றும் புறநகர் பேருந்துகளில் பயணிக்கும்போது இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு, பெண்களுக்கு ஏராளமான நலத் திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் முக்கியமானது அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் என்பதாகும். அந்த வகையில், தற்போது மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் பேருந்துகளில் சென்றால் இலவச பயணம்தான்.
பெண்கள் தயாரிக்கும் பொருட்களை பேருந்துகளில் எடுத்துச் செல்லும் போது அதற்கு லக்கேஜ் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த நிலையில், தமிழக அரசு புதிய சலுகையை வழங்கியுள்ளது. பேருந்தில் பொருட்களை எடுத்துச் செல்லும் மகளிருக்கு கட்டணமில்லா சுமை பயணிச்சீட்டு நடத்துனரால் வழங்கப்படும்.
அதாவது 100 கி.மீ. வரை 25 கிலோ எடை கொண்ட பொருட்களை பேருந்துகளில் ஏற்றிச் சென்றால் அதற்கு சுமை கட்டணம் கேட்கக் கூடாது என பேருந்து நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுபோல் மகளிர் சுய உதவிக் குழு பெண்களை மரியாதை குறைவாக நடத்தாமல் கண்ணியமாக நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள், ஆட்சேபனைக்குரிய பொருட்கள், பேருந்தில் மற்ற பயணிகளுக்கு இடையூறாக உள்ள பொருட்களை கொண்டு செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
11 03 25