/indian-express-tamil/media/media_files/2025/03/12/EwAkDTn3OOfX5jvC0ZPQ.jpg)
தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரை செய்யப்பட்ட மும்மொழி கொள்கை, நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மருத்துவு நுழைவுத்தேர்வில், அதிக முக்கியத்துவம் பெற்ற, இந்திய மொழிகள் குறித்து மணி கண்ட்ரோல் இணையதளம் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளது.
12 3 25
இது குறித்து மணி கண்ட்ரோல் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2024 ஆம் ஆண்டில், மருத்துவ நுழைவுத் தேர்வில் 2.41 மில்லியனுக்கும் அதிகமானோர் பங்கேற்றபோது, ஆங்கிலத்தை ஒரு மொழியாகத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் விகிதம் மூன்று ஆண்டுகளில் மிகக் குறைந்த நிலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், மார்ச் 7 அன்று, தமிழ் மொழியில் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வியைத் தொடங்குமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், மத்திய அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், மாணவர்களின் நலனுக்காக, தமிழகத்தில் தமிழில் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வியைத் தொடங்குமாறு நான் தமிழக முதல்வரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்," என்று கூறிய நிலையில், மாநிலத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
தமிழ் மற்றும் பெங்காலி போன்ற சில உள்ளூர் மொழிகள் காலப்போக்கில் இடம் பெற்றுள்ளன என்பதை தேசிய தேர்வு முகமையின் தரவுகள், காட்டுகிறது. மருத்துவ நுழைவுத் தேர்வு அல்லது தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.
அதேபோல், தமிழில் தேர்வெழுத விரும்பும் மாணவர்கள் எண்ணிக்கை, 2020-ம் ஆண்டு 17,101 ஆக இருந்து 2024- ல் 36,333 ஆக உயர்ந்துள்ளது.. நீட் தேர்வுக்கு பதிவுசெய்த மாணவர்களில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தினருக்கு ஆங்கிலம் முதன்மை மொழியாக இருந்தது, இருப்பினும் அதன் விகிதம் 2019-ல் 79.3 சதவீதத்திலிருந்து 2024-ல் 78.6 சதவீதமாக குறைந்துள்ளது.
குஜராத்தியில் தேர்வெழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 2019-ல் 59,395 ஆக இருந்து 2024-ல் 58,836 ஆகக் குறைந்துள்ளது. ஒடியா மொழியில் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களில், 2019 -ல் 31,490 ஆக இருந்து 2024 இல் 1,312 ஆகக் குறைந்துள்ளது, உருது மொழியில் தேர்வெழுத விரும்பும் மக்கள் 1,858 இல் இருந்து 1,545 ஆகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-language-is-a-top-4th-in-indian-language-among-medical-exam-8845453