28/2/25
/indian-express-tamil/media/media_files/2025/02/28/W1emngeZJYTctUz1SaHl.jpg)
"பலவகை பாயாசங்கள் வைத்திருக்கிறோம் அதை விஜய்க்கு கொடுக்க காத்திருக்கிறோம்" என்று புதுச்சேரி மாநில தி.மு.க அமைப்பாளர் சிவா தெரிவித்துள்ளார்.
பலவகை பாயாசங்கள் வைத்திருக்கிறோம் அதை விஜய்க்கு கொடுக்க காத்திருக்கிறோம் என்று புதுச்சேரி மாநில தி.மு.க அமைப்பாளர் சிவா தெரிவித்துள்ளார்.
தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் புதுச்சேரி மாநில தி.மு.க, அரசு மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனை உடன் இணைந்து நடத்திய ரத்ததான முகாம் தனியார் திருமண மண்டப வளாகத்தில் நடைபெற்றது. தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் நடைபெற்ற ரத்ததான முகாமில் புதுச்சேரி மாநிலம் முழுவதும் இருந்த சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில அமைப்பாளர் சிவா, "தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மாநிலம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட உள்ளோம். இதன் ஒரு பகுதியாக ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் வழங்கியுள்ளார்கள். உலகம் முழுக்க பாராட்டக்கூடிய தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். சிறந்த ஆட்சியாக தி.மு.க ஆட்சி உள்ளது. பலவகை பாயாசங்கள் வைத்திருக்கிறோம். அதை விஜய்க்கு கொடுக்க காத்திருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
source https://tamil.indianexpress.com/india/puduchery-dmk-siva-tvk-vijay-tamil-news-8765616