இந்திய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் ரவி பச்சமுத்து பேட்டி
இந்திய ஜனநாயக கட்சியின் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் துடியலூர் பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்திய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் ரவி பச்சமுத்து பேட்டியளித்துள்ளார்.
கட்சியை எப்படி சிறப்பாக வழி நடத்துவது என்று ஆலோசனை மேற்கொண்டதாகவும், விவசாயிகள் நடத்தும் கள் விடுதலை கருத்தரங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறோம், அதில் ஐ.ஜே.கே கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறினார்.
மும்மொழி கொள்கை பற்றி உங்களுடைய கருத்து என்ன என்ற கேள்விக்கு மும்மொழி கொள்கை என்பது தற்போது வந்தது அல்ல, இது பல ஆண்டுகளாகவே உள்ளது. அவர்களுக்கு விருப்பப்பட்ட மொழியை அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். தாய்மொழி தமிழ் உடன் பிறந்தது, அதை யாராலும் பிரிக்க முடியாது.
இந்தியர்கள் எதிலுமே முன்னோடியாக திகழ்வார்கள் அதிலும், தமிழ் மூத்த முன்னோடி எந்த மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நாம் சொல்லித் தர வேண்டியது இல்லை, இளைஞர்களுக்கு எந்த மொழி தேவைப்படுகிறதோ..? அதை அவர்களே தேடி கற்றுக் கொள்வார்கள்.
எப்படி இருந்தாலும், தமிழை நாம் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. எங்களின் நிலைப்பாடு எத்தனை மொழி வேண்டும் என்றாலும் கற்றுக் கொள்ளலாம். எதையும் யாரும் திணிக்க கூடாது, அவரவர் விருப்பம் போல கற்றுக் கொள்ளலாம்.
தமிழ்நாட்டின் கடன் ஒன்பதரை லட்சம் கோடி என்று ஆளுநர் சொல்லி இருக்கிறாரே என்ற கேள்விக்கு, இங்கு கடனை பற்றி பேசுவதை விட இந்த கடனை எதற்காக பயன்படுத்துகிறார்கள், என்ன செய்து இருக்கிறார்கள், அந்தக் கடனை இன்ஃப்ராஸ்ட்ரக்சருக்காக பயன்படுத்தினால் நாடு வளரும்.
பச்சை முத்து ஐயா முன்னரே இலவசம் தவிர்ப்போம் எனக் கூறினார், ஏனென்றால் இன்றைய தினம் அது இலவசமாக தெரியும் பின் நாட்களில் அது நமக்கே சுமையாக மாறிவிடும். ஒரு டீ குடித்தால் கூட அதற்கு வரி விதிக்கப்படும். சிறிய, சிறிய விஷயங்களில் கூட விலைவாசி ஏறிவிடும்.
இன்ஃப்ரா ஸ்ட்ரக்சருக்கு பயன்படுத்து இருந்தால் வேலை வாய்ப்பு உயரும், கடன் வாங்குவது பிரச்சனை இல்லை அந்தக் கடன் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, என்பது தான் பிரச்சனை. போட்டி, போட்டுக் கொண்டு கடன் வாங்க கூடாது.
சீமானின் வழக்கை விசாரிக்க வேண்டாம் என உச்ச நீதிமன்றம் தடை போட்டு இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு, இது சீமானின் தனிப்பட்ட பிரச்சனை, இதை அரசியலாக கூடாது. அரசியல் வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கள் விவசாயிகளுக்கு தமிழக அரசு இதுபோன்று ஆதரவு கொடுக்க வேண்டும், என்று நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, உலகம் முழுவதும் விவசாயிகளுக்கு லாபம் கொடுக்கும் வகையில், பிராந்தியோ, விஸ்கியோ விற்றார்கள் என்றால் நன்றாக இருக்கும்.
ஆனால் அதை தடுத்து விட்டு இப்பொழுது ஒரு இண்டஸ்ட்ரியாக அதை கொண்டு வந்து தொழிலை செய்யும் போது விவசாயிகளுக்கு அதில் எந்த பயனும் இல்லாமல் போய் விடுகிறது. மக்களின் உடல்நலம் கெட்டுப் போகாமல் ப்ராசசிங்கை மாற்றி செய்தால் பொதுமக்கள் நிறைய பேர் வளர்ச்சி அடைய உதவும் என்று இவ்வாறு கூறினார்.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்
source https://tamil.indianexpress.com/tamilnadu/ijk-party-press-meet-about-tamil-language-8776245