/tamil-ie/media/media_files/uploads/2023/05/Chengalpattu-doctor-protest.jpg)
மருத்துவர்கள் போராட்டம்
மார்ச் 11, 2025 முதல், அரசு மருத்துவர்கள் நிறைவேற்றப்படாத பல கோரிக்கைகளுக்காக தொடர்ச்சியான போராட்டங்களை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த போராட்டம் மேட்டூரில் தொடங்கி சென்னை நோக்கி பேரணியாக செல்ல உள்ளதாகவும் அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக்குழு தெரிவித்துள்ளது.
மார்ச் 18 ஆம் தேதி அரசு மருத்துவர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முதலமைச்சர் மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மின்னஞ்சல் அனுப்புவதாகவும் மார்ச் 19 அன்று, நகரத்தில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த அரசாங்க மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
மருத்துவக் கல்வி இயக்குநர் வளாகத்தில் பிற்பகல் 3 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாநிலத் தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்தார்.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் பணியில் இருந்தபோது இறந்த மறைந்த டாக்டர் விவேகானந்தனின் மனைவி திவ்யாவுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசாங்க உத்தரவு 354 இன் படி ஊதிய உயர்வு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி வருவதாக எல்.சி.சி கூறியது. மருத்துவர்கள் மட்டுமல்ல, முதுகலை பட்டதாரிகளும் அதிக வேலைப்பளுவால் அவதிப்படுவதாகவும், முதுகலை மாணவர்களுக்கு போதுமான நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மாநில அரசு ஆர்வம் காட்டி வரும் நிலையில், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருத்துவப் பணியாளர்களை நியமிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-government-doctors-announce-series-of-protests-8776098