திங்கள், 21 ஏப்ரல், 2025

திருவண்ணாமலைக்கு புதிய மினி டைடல் பூங்கா.. டெண்டர் கோரியது தமிழக அரசு

 Mini tidal

திருவண்ணாமலைக்கு புதிய மினி டைடல் பூங்கா.. டெண்டர் கோரிய அரசு!

தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாநிலம் முழுவதும் இரண்டாம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மேம்படுத்தும் வகையில் மினி டைடல் பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி விழுப்புரம், சேலம், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் மினி டைட்டில் பார்க்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை மாட்டுத்தாவணியில் மிகப்பெரிய அளவில் டைடல் பார்க் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. அதேபோல, திருச்சியிலும் பிரமாண்டமாக டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து, கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஐ.டி துறையில் தலா 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க, புதிய மினி டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும் என கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக சட்டப்பேரவையில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அறிவித்து இருந்தார். ரூ.34 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும் என மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

அதன்படி கரூர், திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான வரைபடத் தயாரிப்பு, திட்ட மேலாண்மை என கடந்த ஆண்டே முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தனைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைக்க, கட்டடத்துக்கான டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு.

ரூ. 34 கோடி செலவில் 4 தளங்களுடன் அமைக்கப்பட உள்ள இந்த டைடல் பூங்கா, அடுத்த ஓராண்டில் கட்டிமுடிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. தனால் திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கனோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை மினி டைடல் பார்க் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது அப்பகுதி இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-government-invites-tender-to-build-mini-tidal-park-in-tiruvannamalai-8984195

Related Posts: