21 4 2025
/tamil-ie/media/media_files/uploads/2023/07/shankar1.jpg)
ஹெல்மெட் அணியாமல், இரு சக்கர வாகனங்கள் ஓட்டும் போலீசாரை, சஸ்பெண்ட் செய்ய டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்வோரும், பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.
தவறினால், போக்கு வரத்து போலீசார், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர். இப்படியாக ஹெல்மெட் கட்டாயம் என்பதை வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து, பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய போலீசாரில் ஒரு சிலரே இதனை பின்பற்றாமல் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுமாதிரியான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இது, காவல் துறையினருக்கு தர்மசங்கடமான நிலைமையை ஏற்படுத்துவதோடு ஒழுங்கீனமான போலீசார் மீது, துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவு ஹெல்மெட் அணியாமல் செலும் போலீசாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் கமிஷனர்கள் மற்றும் எஸ்.பி.,க்களுக்கு, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் ஆணை ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, மாநிலம் முழுதும் கமிஷனர்கள், எஸ்.பி.,க்கள், 'வாக்கி டாக்கி' வாயிலாக, போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/dgp-shankar-jiwal-orders-suspension-of-policemen-riding-bikes-without-helmets-8984108