புதன், 16 ஏப்ரல், 2025

உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: இன்று சட்ட முன்வடிவு தாக்கல் செய்கிறார் ஸ்டாலின்

 

16/4/25

MK Stalin Assembly

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உரிய சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உரிய சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இதுகுறித்து தமிழக அரசு மார்ச் 25-ம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாநிலத்திலுள்ள அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கிடும் வகையில் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தக்க சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்பட உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் சட்டமுன்வடிவை இன்று புதன்கிழமை (16.04.2025) சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, முன்னதாக இதுகுறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும். நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில், தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சிகள் சட்டம் வரும் சட்டசபை கூட்டத்தொடரில் திருத்தப்படும். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் இடம்பெறுவது உறுதி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் அதிகாரம் மிக்க அவைகளில் இடம்பெறுவார்கள்” என்று கூறியிருந்தார். இந்த சூழலில், மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் சட்டமுன்வடிவை புதன்கிழமை (16.04.2025) சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-mk-stalin-to-table-draft-law-for-representation-of-differently-abled-persons-in-local-bodies-on-april-16th-8966124

Related Posts: