புதன், 23 ஏப்ரல், 2025

காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் 40 CRPF வீரர்கள்

 காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் 40 CRPF வீரர்கள் பலியான சம்பவத்தில் பிரதமர் மோடிக்கு உள்ள தொடர்பு குறித்து NIA- (தேசிய புலனாய்வு முகமை) விசாரிக்க கோரி கடந்த 28.10.23 அன்று சென்னை புரசைவாக்கத்தில் உள்ள NIA- அலுவலகத்துக்கு நேரில் சென்று புகார் அளித்தோம். அங்கிருந்த NIA அதிகாரி டெல்லியில் உள்ள NIA தலைமையகத்துக்கு நேரடியாக புகாரை அனுப்புமாறு சொன்னார். அதன்படி புகாரை டெல்லி NIA தலைமை இயக்குநருக்கு அனுப்பி வைத்தோம்.

புகார் அனுப்பப்பட்டு 18 மாதங்கள் ஆகிவிட்டது. இதுவரை NIA தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.
புல்வாமாவில் 2019 பிப்ரவரி 14 அன்று நடந்த தீவிரவாத தாக்குதலால் அரசியல் ரீதியாக மோடியும் பாஜக-வும் ஆதாயம் அடைந்தனர். 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக புல்வாமா தாக்குதல் நடந்தது.
"இந்த தாக்குதலில் உயிர் நீத்த CRPF வீரர்களின் பிணத்தின் மீது தான் 2019 பாராளுமன்றத் தேர்தல் நடந்தது, இதில் மோடிக்கு தொடர்பு உண்டு" என அப்போது ஜம்மு காஷ்மீர் கவர்னராக இருந்த சத்யபால் மாலிக் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
சத்யபால் மாலிக்கின் குற்றச்சாட்டு உட்பட புல்வாமா தாக்குதல் தொடர்பான பல முக்கியமான ஆதாரங்களை இணைத்து ஒரு விரிவான புகாரை நாங்கள் NIA வுக்கு அளித்துள்ளோம்.
🛑 உளவுத்துறை எச்சரிக்கைகளை மத்திய அரசு புறக்கணித்தது ஏன்?
🛑 CRPF வீரர்கள் பயணம் செய்ய ராணுவ விமானத்தை தர மத்திய பாஜக அரசின் பாதுகாப்புத் துறை மறுத்தது ஏன்?
🛑 தீவிரவாத அச்சுறுத்தல் மிகுந்த பகுதியில் உளவுத்துறை எச்சரிக்கையை மீறி சாலை மார்க்கமாக வீரர்களை அழைத்துச் சென்றது ஏன்?
🛑 CRPF வீரர்கள் பயணம் செய்த சமயத்தில் ஶ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் இணைப்புச் சாலைகளை மூடாமல் திறந்து வைத்திருந்தது ஏன்?
🛑 முழுமையாக ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் யார் கண்ணிலும் படாமல் 300 கிலோ வெடிமருந்துடன் தீவிரவாதிகளின் கார் 10 நாட்களாக சுற்றிக் கொண்டிருந்தது எப்படி?
🛑 "புல்வாமா தாக்குதல் பற்றிய சந்தேகங்கள், கேள்விகள் பற்றி யாரிடமும் வாய் திறக்கக் கூடாது" என பிரதமர் மோடி அப்போதைய காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்குக்கு வாய்ப்பூட்டு போட்டது ஏன்?
இப்படி ஏராளமான கேள்விகளை NIA-வுக்கு நாங்கள் அளித்த புகாரில் தெரிவித்திருந்தோம்.
மோடியின் நாற்காலியை காப்பாற்றுவதற்காக 40 CRPF வீரர்கள் பலி கொடுக்கப்பட்டதாக உயிரிழந்த வீரர்களின் உறவினர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டி போராட்டம் நடத்தினர். இது குறித்தும் புகாரில் சுட்டிக் காட்டியிருந்தோம்.
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் நாட்டின் பிரதமருக்கு தொடர்பு உண்டு என பகிரங்கமாக குற்றம் சாட்டி நேரடியாக NIA வுக்கு புகார் அளித்தும் கூட இது பற்றி ஒன்றரை ஆண்டுகளாக வாய் திறக்காமல் NIA கமுக்கமாக இருப்பது ஏன்?
தேசிய புலனாய்வு முகமை ( NIA ) நேர்மையான அமைப்பாக இருந்தால் குறைந்த பட்சம் எங்களிடம் இது பற்றி ஒரு விசாரணையாவது நடத்தியிருக்க வேண்டாமா? அல்லது எங்களது புகாருக்கு முறையான பதில் கொடுத்திருக்க வேண்டாமா? புல்வாமா பற்றி பேசவே NIA பயப்படுவது ஏன்?
NIA விடம் அளிக்கப்பட்ட புகார் மனு:
(இந்த புகார் மனுவைப் படித்தால் BJP-RSS கும்பல் காஷ்மீரை வைத்து நடத்திவரும் சதி அரசியலை முழுமையாகப் புரிந்து கொள்ளலாம்.)
-நந்தினி ஆனந்தன்
ஒருங்கிணைப்பாளர்
மக்களுக்காகப் போராடும் கட்சி
www.banevm.org இணையதளம் மூலம் மக்களுக்காகப் போராடும் கட்சியில் இணைவீர்.

Related Posts: