புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் காலை பல்லவனுக்கு இரண்டு பேருந்துகள் வருகின்றன. முறையான அட்டவணையை ரயில் நிலையத்திலும் மற்றும் பேருந்து நிலையத்திலும் பேருந்து புறப்படும் இடத்தில் ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் பயணிகள் பேருந்துகளை அதிகம் பயன்படுத்துவார்கள்.
பல்லவன் ரயிலுக்கு மட்டும் புதுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து தினசரி முன்பதிவு & முன்பதிவு இல்லா சேர்த்து சராசரியாக 250க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை நோக்கி செல்கின்றனர். இவர்கள் ரயில் நிலையத்தை அணுகுவதற்கு பேருந்து சேவை கட்டாயம் தேவை. ஏனெனில் புதுக்கோட்டை மற்றும் அதனை சுற்றுவட்ட பகுதிகளான ஆலங்குடி, அரிமளம் கந்தர்வகோட்டை, திருமயம், அண்ட குளம் போன்ற பகுதிகளில் இருந்தும் புதுக்கோட்டை ரயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர். ஆகையால் அனைவரும் வரும் இடமாக புதுகை புதிய பேருந்து நிலையம் உள்ளது.
அதே நேரத்தில் இந்த வண்டி காரைக்குடியில் இருந்து தான் புறப்படுகிறது என்பதால் காரைக்குடியில் இருந்து புதுக்கோட்டை வரக்கூடிய பயணிகள் குறைவு.
ரயில் நிலையத்தில் பல்லவன் புறப்படும் நேரம் காலை 06:05 மணிக்கு . அதற்கு 30 நிமிடங்கள் முன்பாக பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டால் தான் பயணிகளுக்கு பேருந்து பயன்படும்.
source fb page
I Love Pudukkottai
M.M. Abdulla
எம்.எம்.அப்துல்லா M M Abdulla
District Collector, Pudukkottai





