source https://tamil.indianexpress.com/explained/why-amit-shahs-2029-ucc-push-is-going-through-states-not-parliament-12532147
2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் (NDA) ஆட்சியில் உள்ள 21 மாநிலங்களிலும் 'பொது சிவில் சட்டம்' (UCC) அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) தெரிவித்தார். "நாங்கள் ஏற்கனவே பல மாநிலங்களில் பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்; பா.ஜ.க- என்.டி.ஏ ஆட்சியில் உள்ள 21 மாநிலங்களிலும் 2029-க்கு முன்னதாகவே இச்சட்டத்தை அறிமுகப்படுத்துவோம் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது," என்று மும்பையில் அமித் ஷா கூறினார். முஸ்லிம் பெண்களுக்கு சம உரிமைகளை வழங்குவதற்கான அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக 'முத்தலாக்' முறை ஒழிக்கப்பட்டதையும் அமித் ஷா சுட்டிக்காட்டினார்.





