புதன், 9 செப்டம்பர், 2026

வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

 

  • Sep 09, 2026 07:08 IST

    மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்: வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

    தமிழக சட்டசபைக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தேர்தல் நடந்தது. இதில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற் றார். ஆனால் அவர், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, அந்த தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்தநிலையில், தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது.