source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-news-live-updates-in-tamil-12526795
- Sep 13, 2026 12:23 IST
பாஜக, காங்கிரஸ் அல்லாத 3-ஆவது அணி: திமுக முயற்சி
பாஜக, காங்கிரஸ் அல்லாத 3-வது அணியை அமைப்பதற்காக கட்சிகளை திரட்டும் பேச்சு டெல்லியில் தொடங்கியுள்ளது. இண்டியா கூட்டணியில் காங்கிரஸுடன் முரண்பாட்டில் இருக்கக்கூடிய கட்சிகளை தங்கள் அணியில் கொண்டுவருவது குறித்து காய்களை நகர்த்த திமுக திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக டெல்லியில் மெல்ல பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாக சொல்லப்படும் நிலையில், அதன் தொடர்ச்சியாகவே மும்பையில் உத்தவ் தாக்கரேவுடன் கனிமொழி சந்திப்பு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தொகுதி மறுவரையறை சம்பந்தமாக பேசப்பட்டதாக வெளியே கூறப்பட்டாலும், அதில் முக்கியமானது 3-வது அணிக்கான தொடக்க முயற்சி என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தற்போதைய அரசியல் சூழலில் பல்வேறு எதிர்க்கட்சிகளுடன் தொடர்பu ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.





