source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-districts-news-live-updates-today-12502139
- Sep 08, 2026 07:11 IST
மதுராந்தகம், தாராபுரத்தில் இடைத்தேர்தல் - நாளை வேட்பு மனு தாக்கல்
தமிழகத்தில் காலியாக 7 சட்டமன்ற தொகுதிகளில் 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்.6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், விராலிமலை , பெருந்துறை, கரூர் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவதில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இந்த தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. செப்.9 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி, செப்.16-ல் நிறைவடைகிறது. செப்.17 அன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை, வேட்பு மனுக்களை திரும்ப பெற செப்.19 கடைசி நாள். அக்.6 அன்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, அக்.9 அன்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும்.





