#பூமியின் ஆழத்திற்கு செல்ல முடியாத மனிதன் – இஸ்லாத்தை உண்மை படுத்திய புதிய தலைமுறை செய்தி:
நாம் வாழுகின்ற இந்த நவீன காலத்தைப் பொருத்த வரையில் விஞ்ஞானம் தனது ஆய்வுகளில் உயரிய இடத்தைப் பிடித்துள்ளது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. மருத்துவம், கலை, கலாசாரம், கடல் ஆய்வுகள், கால நிலை பற்றிய ஆராய்ச்சிகள் என்று எத்துறையை எடுத்தாலும் அனைத்துத் துறைகளிலும் மனிதன் பல சாதனைகளைப் படைத்து வருகின்றான்.
மனிதன் என்னதான் ஆய்வுகள், ஆராய்ச்சிகள், விஞ்ஞானம் என்றெல்லாம் முன்னேறினாலும் இறைவன் விதித்த விதி முறையைத் தாண்டி அவனால் அணுவளவும் அசைக்க முடியாது என்பதை வரலாற்றில் அணைவரும் உணர்ந்துள்ளார்கள்.
இறைவன் மூலம் இவ்வுலகுக்கு இறுதியாக அனுப்பப்பட்ட இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள், அல்குர்ஆனை இவ்வுலக மக்களுக்கு நேர் வழி காட்டியாக தந்து விட்டு சென்னார்கள். புனித அல் குர்ஆனைப் பொருத்த வரையில் மனிதர்களுக்கு வாழ்வதற்காக வழி முறைகளை தெளிவாக எடுத்துச் சொல்வதுடன், அது இறைவனிடமிருந்து இறக்கப்பட்டது தான் என்பதை நிரூபிக்கும் விதமாக பல அறிவியல் செய்திகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அற்புதமாக வழங்கப்பட்ட இந்தத் திருமறைக் குர்ஆன் தன்னைத் தானே உண்மைப் படுத்தும் ஒப்பற்ற ஒரு வேதமாக கடந்த 1400 வருடங்களுக்கும் மேலாக இவ்வுலகில் நிலைத்திருக்கின்றது. இவ்வுலகம் அழியும் வரையும் இதுதான் நிலை. திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள் நாளுக்கு நாள் உண்மைப் படுத்தப்பட்டு வரும் இக்காலத்தில் விஞ்ஞானம் தோற்றுப்போய் இறைவனின் வார்த்தைகள் வெற்றி பெற்ற இன்னொரு சந்தர்ப்பத்தை இவ்வாக்கத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.
மனிதன் பெருமையடிப்பதை இறைவன் பல இடங்களில் கண்டிக்கின்றான், பெருமை என்பது இறைவனுக்குறிய ஒரு பண்பாகும். இப்பண்பை பற்றி இறைவன் தெளிவு படுத்தும் போது அத்துடன் சேர்த்து மிகத் தெளிவான அறிவியல் உண்மை ஒன்றையும் மனித சமுதாயத்திற்கு இறைவன் அறிமுகம் செய்கின்றான். விண்வெளிப் பயணம் செல்ல முடியும் என்றும் விண்வெளிப் பயணம் செல்லும் போது இதயம் சுருங்கி விடும் என்றும் சொல்லித் தருகின்ற திருக்குர்ஆன், பூமிக்கு அடியில் மலையின் நீளத்திற்குப் போக முடியாது என்றும் தெளிவாக சொல்கின்றது.
"பூமியில் கர்வத்துடன் நடக்காதீர்! நீர் பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டீர்!"
#அல்குர்ஆன்_17:37.
#அல்குர்ஆன்_17:37.
திருக்குர்ஆனின் இவ்வசனம் மிகப்பெரிய அறிவியல் முன்னறிவிப்பாக அமைந்துள்ளது.
மனிதன் ஆகாயத்தில் எவ்வளவோ உயரத்திற்குச் செல்கிறான். அது மனிதனுக்கு எளிதாக இருந்தாலும் பூமியின் ஆழத்தில் அப்படிச் செல்ல முடியாது. பெரிய மலையின் உயரம் எவ்வளவோ அவ்வளவு ஆழத்திற்கு மனிதனால் பூமியைப் பிளந்து செல்ல முடியாது என்பதுதான் இவ்வசனம் கூறும் கருத்தாகும். நடக்க முடியாத இந்த அரிய செயலை உன்னால் செய்ய முடியும் என்றால் நீ பெருமையடிப்பதில் ஏதாவது பொருள் இருக்கும் என்று இறைவன் இடித்துரைக்கிறான்.
இதில் அடங்கியுள்ள அறிவியல் உண்மை என்னவென்பதைப் பார்ப்போம்.
மனிதன், பூமிக்கு மேலே 3,56,399 கி.மீ. தொலைவுடைய சந்திரனுக்கு ஆளை அனுப்பி அதன் உயரத்தை அடைந்து விட்டான். மேலும் பூமிக்கு மேலே 8 கோடி கி.மீ. தொலைவிலுள்ள செவ்வாய் கிரகத்துக்கு இயந்திரத்தை அனுப்பி அதன் உயரத்தை மனிதன் அடைந்து விட்டான்.
மனிதன், பூமிக்கு மேலே 3,56,399 கி.மீ. தொலைவுடைய சந்திரனுக்கு ஆளை அனுப்பி அதன் உயரத்தை அடைந்து விட்டான். மேலும் பூமிக்கு மேலே 8 கோடி கி.மீ. தொலைவிலுள்ள செவ்வாய் கிரகத்துக்கு இயந்திரத்தை அனுப்பி அதன் உயரத்தை மனிதன் அடைந்து விட்டான்.
பூமியின் குறுக்களவு 12,756 கி.மீ. ஆகும். அதாவது பூமியின் ஒரு முனையிலிருந்து அதன் எதிர் முனை வரையுள்ள தூரம் (விட்டம்) 12,756 கி.மீ. ஆகும். இதில் மனிதன் சென்றடைந்துள்ள தூரம் 3.3 கி.மீ. மட்டுமே. தென் ஆப்பிரிக்காவில் உள்ள உலகின் மிக ஆழமான சுரங்கம் எனப்படும் டிரான்ஸ் வால் பாக்ஸ்பர்க் என்ற இடத்திலுள்ள சுரங்கத்தின் ஆழம் இது தான். உண்மையில் இது கூடச் சரியான அளவு என்று சொல்ல முடியாது.
ஏனெனில் இந்தப் பகுதி கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து அளவிட்டால் இந்தச் சுரங்கத்தின் ஆழம் 1700 மீட்டர் மட்டுமே! அதாவது 2 கி.மீ. கூட பூமியின் ஆழத்தில் மனிதன் செல்லவில்லை. உலகின் மிக உயரமான இமய மலையின் உயரம் 9 கி.மீ. ஆகும். இந்த 9 கி.மீ. ஆழத்திற்கு, அதாவது மலையின் உயரம் அளவுக்குப் பூமியில் மனிதன் செல்ல முடியாது என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கிறார்கள்.
பூமிக்கு அடியில் 700 மீட்டர் கடந்து விட்டால் காற்று, முகத்தைச் சுட்டுப் பொசுக்கும் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எனவே மலையின் உயரமான 9 கி.மீ. அளவுக்குப் பூமிக்குள் செல்வது சாத்தியமே இல்லை. மேலும் பூமியின் ஆழத்தில் செல்லச்செல்ல புவி ஈர்ப்பு விசையும் அதிகரிக்கின்றது. இதன் காரணமாகவும் பூமியின் ஆழத்தில் மனிதன் செல்ல முடியாது. இந்தப் பேருண்மைகளை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே பறைசாற்றியதன் மூலம் திருக்குர்ஆன் இறைவேதம் என்பது நிரூபணமாகின்றது.
பூமியின் ஆழத்திற்கு மனிதனால் செல்ல முடியாமை தொடர்பாக கடந்த 10.11.2014 அன்று தமிழ்நாட்டின் பிரபல செய்திச் சேவையான புதிய தலைமுறை தொலைக் காட்சியில் ஒரு நிகழ்ச்சியும் ஒளிபரப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..
Copy From: http://rasminmisc.com/islam-and-science/