வியாழன், 11 டிசம்பர், 2014

Quran & Hadis

ஒரு பெண்ணுடன் எந்த (அன்னிய) ஆடவனும்
தனிமையில் இருக்கலாகாது; (மணமுடிக்கத் தகாத)
நெருங்கிய உறவினருடன் (அவள்)
இருக்கும்போது தவிர! என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் :
புகாரி (5233)


**********
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒருவருக்கு (மற்றொருவரால்) நல்லுபகாரம்
செய்யப்பட்டால் அவர் தனக்கு (நல்லுபகாரம்)
செய்தவருக்கு ஜஸாக்கல்லாஹூ ஹைரா
(அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக!)
என்று கூறினால் அவர் (உதவி செய்தவருக்கு) மிகச்
சிறந்த நன்றியைச் செலுத்தி விட்டார்.
அறிவிப்பவர் : உஸாமா பின் ஸைத் (ரலி)
நூல் : திர்மிதி (2035)