வியாழன், 11 டிசம்பர், 2014

கோடி ரூபாயை மன்னித்தது சவுதி குடும்பம்

இது தான் இஸ்லாம்

கோடி ரூபாயை மன்னித்தது சவுதி குடும்பம்
மன்னிப்பை பெற்ற நொடியிலேயே புத்த மத
வெறியனாக இருந்த சில்வா இஸ்லாம் பிரியனாக மாறினார்
==========================================================
இலங்கையில் இருந்து வாழ்வை தேடி சவுதி அரேபியா வந்தவர் சில்வா இவர் புத்த மத த்தை சார்ந்தவர் மட்டுமல்ல அந்த மத த்தின் மீது வெறி கொண்டவர் அதனால் இஸ்லாத்தையும் முஸ்லிம்களை விஷம் போல்வெறுத்தவர்
இவர் சவுதி அரேபியாவில் பணியாற்றும் போது ஒரு சவுதி நாட்டு இருபது வயது இளைஞனோடு ஏர்பட்ட மோதலில் அவரை கொலை செய்து விட்டார்
உடனே சில்வா கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டார் வழக்கு நீதி மன்றத்திர்கு சென்றது
கொலை குற்றத்திர்கு இஸ்லாம் இரு தண்டனைகளை நிர்ணயித்து அந்த இரண்டு தண்டனைகளில் எதை தேர்வு செய்வது என்ற உரிமை கொலை செய்ய பட்டவனின் குடும்பத்திர்கே இஸ்லாம் வழங்கியுள்ளது
இந்த அடிப்படையில் ஒன்று சில்வாவிர்கு மரண தண்டனை கொடுக்க பட வேண்டும் அல்லது கொலை செய்ய பட்டவரின் குடும்பம் கோரும் இழப்பு தொகையை கொடுத்து விட்டு அவர் விடுதலையை பெற வேண்டும்
இந்த அடிப்படையில் கொலை செய்தவர் கொலை செய்ய பட்டவரின் குடும்பத்திர்கு சுமார் ஒரு கோடி இலங்கை ரூபாய்களை தர வேண்டும் என்று கொலை செய்ய பட்டவரின் குடும்பம் கோரியது இந்த தொகையை செலுத்து தவறினால் அவருக்கு மரண தண்டனையை நிலை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை
ஒரு கோடி ரூபாயை தன்னால் திரட்ட முடியாது என்றும் தான் ஏழ்மையில் உளலும் ஒரு குடும்பத்தை சார்ந்தவன் என்றும் தனது உழைப்பை எதிர்பார்த்து உணவுக்காக தனது பச்சிளம் குழந்தைகள் காத்திருப்பதாகவும் சில்வா கதறினார் கண்ணீர் வடித்தார்
இதை பார்த்து மனம் உருகிய இஸ்லாமிய மார்க்க அறிஞர் சுலைமான் அபுகய்ல் இந்த ஏழைக்காக கொலை செய்ய பட்டவரின் குடும்பத்தாரிடம் பரிந்து பேசினார்
நீங்கள் கோரும் தொகையை அந்த ஏழையால் ஒரு போதும் திரட்ட முடியாது என்றும் அவரை மன்னித்து விட்டு விடுங்கள் என்றும் கூறி இஸ்லாம் கூறும் மன்னிப்பின் பின் மாண்புகளை அவர்களுக்கு அந்த மார்க்க அறிஞர் விளக்கினார்
அவர் கூறிய இறைவசனங்களும் இறுதி நபியின் சொர்களும் கொலை செய்ய பட்டவரின் தந்தையின் மனதை கவர்ந்தது உடனே அவர் இறைவனின் பொருத்த த்தை மட்டுமே நாடி இறைவன் மறுமையில் தரபோகும் பரிசை மட்டுமே நினைத்து அந்த ஏழையை நான் மன்னித்து விடுகிறேன் என கூறினார்
இந்த செய்தி சில்வாவிர்கு சொல்ல பட்ட அந்த நொடியிலேயே சில்வா இஸ்லாத்தை ஏற்று கொண்டார்
இஸ்லாத்தை தவறான மார்க்கமாக எண்ணி கொண்டிருந்த நான் இவர்களின் நடத்தையை பார்த்த பிறகு இப்படி பட்ட பண்பட்ட மனிதர்களை உருவாக்கிய மார்க்கம் உன்னத மார்க்கமாக தான் இருக்க முடியும் என்பதை தாம் உணர்ந்து கொண்டதாகவும் சில்வா தெரிவித்தார்
அந்த நொடி வரையிலும் புத்தமத வெறியனாக இருந்த சில்வா இஸ்லாமிய பிரியனாக மாறினார்