திங்கள், 15 டிசம்பர், 2014

திருக்குர்ஆன்- அல் மாயிதா - உணவுத் தட்டு

திருக்குர்ஆன் 



அத்தியாயம் : 5
அல் மாயிதா - உணவுத் தட்டு
மொத்த வசனங்கள் : 120

ஈஸா நபி அவர்களின் சமுதாயத்தினர் வானத்திலிருந்து உணவுடன் உணவுத் தட்டை இறைவன் இறக்கித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஈஸா நபி அவர்கள் பிரார்த்தனை செய்ததன் அடிப்படையில் அவ்வாறே உணவுத் தட்டு இறக்கப்பட்டதாக112, 113, 114 ஆகிய வசனங்களில் கூறப்படும் நிகழ்ச்சியை ஒட்டி இந்த அத்தியாயத்திற்கு இப்பெயர் வந்தது.


அளவற்ற அருளாளனும்நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

51. நம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும்கிறித்தவர்களையும் உங்கள் பாதுகாவலர்களாக்கிக் கொள்ளாதீர்கள்!89 அவர்களில் ஒருவர் மற்றவருக்குப் பாதுகாவலர்கள். உங்களில் அவர்களைப் பொறுப்பாளராக்கிக் கொள்வோர் அவர்களைச் சேர்ந்தவரே. அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்.
52. உள்ளங்களில் நோய் இருப்போர்அவர்களை நோக்கி விரைவதைக் காண்கிறீர். "எங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என அஞ்சுகிறோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் (உங்களுக்கு) வெற்றியளிக்கலாம்அல்லது ஏதேனும் ஒரு காரியத்தை அவன் நிகழ்த்தலாம். அவர்கள் தமக்குள் இரகசியமாக வைத்திருந்ததற்காக அப்போது கவலைப்பட்டோராக ஆவார்கள்.
53. இவர்களின் நல்லறங்கள் அழிந்துநட்டமடைந்தனர். "நாங்களும் உங்களைச் சேர்ந்தோரேஎன அல்லாஹ் மீது உறுதியாகச் சத்தியம் செய்தோர் இவர்கள் தாமா?''என்று நம்பிக்கை கொண்டோர் (மறுமையில் வியப்புடன்) கூறுவார்கள்.
54. நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறிவிட்டால் அல்லாஹ் பின்னர் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டோரிடம் பணிவாகவும், (ஏகஇறைவனை) மறுப்போரிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போரின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாராளமானவன்;அறிந்தவன்.
55. அல்லாஹ்வும்அவனது தூதரும்தொழுகையை நிலைநாட்டிஸகாத்தும் கொடுத்து,ருகூவு செய்கிற நம்பிக்கை கொண்டோருமே உங்கள் உதவியாளர்கள்.
56. அல்லாஹ்வையும்அவனது தூதரையும்நம்பிக்கை கொண்டோரையும் பொறுப்பாளராக்கிக் கொண்ட அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.
57. நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிலும்27 (ஏகஇறைவனை) மறுப்போரிலும் உங்கள் மார்க்கத்தைக் கேலியாகவும்,விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டோரை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்!89நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
58. தொழுகைக்கு நீங்கள் அழைக்கும் போது அதை அவர்கள் கேலியாகவும்,விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டனர். அவர்கள் விளங்காத கூட்டத்தினராக இருப்பதே இதற்குக் காரணம்.
59. "வேதமுடையோரே!27 அல்லாஹ்வையும்எங்களுக்கு அருளப்பட்டதையும்இதற்கு முன் அருளப்பட்டதையும்4 நம்புகிறோம் என்பதற்காகத் தவிர வேறு எதற்காக எங்களை வெறுக்கின்றீர்கள்உங்களில் பெரும்பாலோர் குற்றவாளிகள்'' என்று கூறுவீராக!
60. "அல்லாஹ்விடம் இதை விட கெட்ட கூலி பெறுபவனைப் பற்றி உங்களுக்கு நான் கூறட்டுமா?'' என்று கேட்பீராக! அல்லாஹ் எவர்களைச் சபித்து6 கோபம் கொண்டானோ,எவர்களைக் குரங்குகளாகவும்பன்றிகளாகவும் உருமாற்றினானோ,23 எவர்கள் தீயசக்திகளுக்கு அடிபணிந்தார்களோ அவர்களே தீய இடத்திற்குரியவர்கள். நேர்வழியிலிருந்து தவறியவர்கள்.