செவ்வாய், 9 டிசம்பர், 2014

போட்டோக்களை பப்பிலிக்காக செயார் செய்யும் அனைத்துலக பெண்களுக்கும் இது ஒரு பாடமாக அமையும் என்று நம்புகிறோம்..!!

வதந்தியை நம்பி பத்திரிகையில் தவறான செய்தி 
இணையத்தளங்களில் தங்கள் போட்டோக்களை பப்பிலிக்காக செயார் செய்யும் அனைத்துலக பெண்களுக்கும் இது ஒரு பாடமாக அமையும் என்று நம்புகிறோம்..!! வாசித்துவிட்டு பகிரவும்..!!
முதலில் நம்பகத் தன்மை அறியாமல் நானும் மற்றவர்களின் பதிவை சேர் செய்தமைக்கு வருந்துகிறேன்.

ஐ டி துறையில் வேலை செய்யும் இப்பெண் , சமீபத்தில் தன் மகள் வற்புறுத்தலின் பேரில் " வாட்ஸ் அப்பில் " இணைத்துள்ளார் .
கடந்த மாதம், இவருக்கு பிடிக்காத யாரோ ஒருவர் ப்ரொபைல் இல் இருந்த இவரின் போட்டோவை எடுத்து சென்னை முழுதும் திருடுவதாக வீண் புரளியை கிளப்பி விட்டுள்ளார்கள் .
பின்னர், தன்னுடன் வேலை செய்யும் தோழி ஒருவர் உன் போட்டோ " வாட்ஸ் அப் மற்றும் பேஸ் புக்கில் " திருடி என்று அங்கும் இங்கும் உலா வருகிறது என்று அப்பெண்ணிடம் கூறியுள்ளார் .
சற்றும் எதிர்பாராமல், மனம் உடைந்த அப்பெண்,
நான் செய்யாத ஒரு தவறை, நான் செய்ததாக கூறி தன்னை அவமானம் செய்த அந்த நபரை கண்டுபிடித்து தண்டனை வழங்க கூறி " சைபர் கிரிமினல் செல்லில் " புகார் அளித்துள்ளார் . புகார் நம்பர் :- 025429804.
அதற்கான தீர்வுக்காக அவர் காத்துகொண்டிருக்கும் இந்நிலையில், தற்போது பத்திரிகையிலும் அவர் போடோவுடன் வெளிவந்துள்ளது குறிப்பிட தக்கது.
செய்திகளின் ஆதாரம் அறியாமல், குருடன் போக்கில் ஒரு பெண்ணை களங்கப்படுத்திய நம் மீடியாவை என்னவென்று சொல்வது.
மீடியா நண்பர்களே திருந்துகப்பா.!!!
இவர் சம்பந்தமாக பதிவிட்ட நண்பர்கள் அனைவர்களும் தயவு செய்து அப்பதிவை நீக்கிட அன்புடன் வேண்டுகிறேன்
பாதிக்கப்பட்ட தோழிக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள் .
பெண்களே எந்த ஒரு சோசியல் நெட்வொர்க்கிலும் உங்கள் போட்டோவை இணைக்காதீர்கள். இணைப்பதின் பின் விளைவுகளில் இப்பெண்ணுக்கு நேர்ந்த அவமானமும் ஒரு சாம்பிள் .