திங்கள், 29 டிசம்பர், 2014

திருக்குர்ஆன்- அல் மாயிதா - உணவுத் தட்டு


*** திருக்குர்ஆன் ***





அத்தியாயம் : 5
அல் மாயிதா - உணவுத் தட்டு
மொத்த வசனங்கள் : 120

ஈஸா நபி அவர்களின் சமுதாயத்தினர் வானத்திலிருந்து உணவுடன் உணவுத் தட்டை இறைவன் இறக்கித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஈஸா நபி அவர்கள் பிரார்த்தனை செய்ததன் அடிப்படையில் அவ்வாறே உணவுத் தட்டு இறக்கப்பட்டதாக112, 113, 114 ஆகிய வசனங்களில் கூறப்படும் நிகழ்ச்சியை ஒட்டி இந்த அத்தியாயத்திற்கு இப்பெயர் வந்தது.


அளவற்ற அருளாளனும்நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

60. "அல்லாஹ்விடம் இதை விட கெட்ட கூலி பெறுபவனைப் பற்றி உங்களுக்கு நான் கூறட்டுமா?'' என்று கேட்பீராக! அல்லாஹ் எவர்களைச் சபித்து6 கோபம் கொண்டானோ,எவர்களைக் குரங்குகளாகவும்பன்றிகளாகவும் உருமாற்றினானோ,23 எவர்கள் தீயசக்திகளுக்கு அடிபணிந்தார்களோ அவர்களே தீய இடத்திற்குரியவர்கள். நேர்வழியிலிருந்து தவறியவர்கள்.
61. அவர்கள் உங்களிடம் வரும் போது "நம்பிக்கை கொண்டோம்'' எனக் கூறுகின்றனர். அவர்கள் (இறை) மறுப்பை (மனதில்) வைத்துக் கொண்டே வந்தனர். அதனுடனேயே வெளியேறியும் விட்டனர். அவர்கள் மறைத்து வைப்பவற்றை அல்லாஹ் நன்கு அறிந்தவன்.
62. அவர்களில் அதிகமானோர் பாவத்திற்கும்வரம்பு மீறலுக்கும்தடுக்கப்பட்டதை உண்பதற்கும் விரைந்து செல்வதை நீர் காண்பீர்! அவர்கள் செய்வது மிகவும் கெட்டது.
63. அவர்களின் பாவமான கூற்றை விட்டும்தடுக்கப்பட்டதை அவர்கள் உண்பதை விட்டும்வணக்கசாலிகளும்மேதைகளும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா?அவர்கள் செய்வது மிகவும் கெட்டது.
64. "அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது'' என்று யூதர்கள் கூறுகின்றனர். அவர்களின் கைகளே கட்டப்பட்டுள்ளன. அவர்களது இக்கூற்றின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டனர். மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான். உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டது,அவர்களில் பெரும்பாலோருக்கு (இறை) மறுப்பையும் வரம்பு மீறலையும் அதிகப்படுத்தி விட்டது. கியாமத் நாள்1 வரை அவர்களிடையே பகைமையையும் வெறுப்பையும் ஏற்படுத்தி விட்டோம்.99 அவர்கள் போர் (எனும்) தீயை மூட்டும் போதெல்லாம் அதை அல்லாஹ் அணைத்து விடுகிறான். அவர்கள் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். குழப்பம் விளைவிப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்.
65. வேதமுடையோர்27 நம்பிக்கை கொண்டு, (இறை) அச்சத்துடன் நடந்து கொண்டிருந்தால் அவர்களது பாவங்களை அவர்களை விட்டும் நீக்கியிருப்போம். அவர்களை இன்பம் நிறைந்த சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்திருப்போம்.
66. தவ்ராத்தையும்இஞ்சீலையும்,391 அவர்களுக்கு அவர்களது இறைவனிடமிருந்து அருளப்பட்டதையும் அவர்கள் நிலைநாட்டியிருந்தால் தமது (தலைக்கு) மேலிருந்தும்,தமது கால்களுக்குக் கீழே இருந்தும் (கிடைப்பவற்றைச்) சாப்பிட்டிருப்பார்கள். அவர்களில் நேர்மையான கூட்டமும் உள்ளது. அவர்களில் அதிகமானோரின் செயல் மிகவும் கெட்டதாகும்.
67. தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான்.145 (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்.
68. "வேதமுடையோரே!27 தவ்ராத்தையும்இஞ்சீலையும்,391 உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையும் நீங்கள் நிலைநாட்டாத வரை நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களல்லர்'' என்று கூறுவீராக! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதுஅவர்களில் அதிகமானோருக்கு (இறை) மறுப்பையும்வரம்பு மீறலையும் அதிகப்படுத்துகிறது. எனவே (ஏகஇறைவனை) மறுக்கும் கூட்டத்திற்காக நீர் கவலைப்படாதீர்!
69. நம்பிக்கை கொண்டோரிலும்யூதர்களிலும்ஸாபியீன்களிலும்,443கிறித்தவர்களிலும் அல்லாஹ்வையும்இறுதி நாளையும்நம்பி நல்லறங்களைச் செய்தோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
70. இஸ்ராயீலின் மக்களிடம் உறுதிமொழி எடுத்தோம்.22 அவர்களிடம் தூதர்களையும் அனுப்பினோம். அவர்கள் விரும்பாததைத் தூதர் அவர்களிடம் கொண்டு வந்த போதெல்லாம் சிலரைப் பொய்யர் என்றனர். மற்றும் சிலரைக் கொன்றனர்.